இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’!

Share the post

இளைஞர்களின் நட்பு, கனவுகள் மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி வரவிருக்கும் அழகான திரைப்படம்தான் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிப்பில் சித்தார்த் நடித்த ‘எனக்குள் ஒருவன்’ திரைப்படம் மூலமாக இயக்குநர் பிரசாத் ராமர் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கினார். ‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆன்மிக ஆவணப்படத்திற்காக அறியப்பட்ட பூர்வா புரொடக்ஷன்ஸ் என்ற தனது சொந்த பேனரில் ’நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ படத்தைப் பிரபல பாடகர்-இசையமைப்பாளர் பிரதீப் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படம் 2018ஆம் ஆண்டு தொடங்கியது. சிறிய நகரத்தில் உள்ள இளைஞர்களை சுற்றி நகரும் கதையாக இந்தப் படம் உருவாகி இருக்கிறது. சாலையை மையமாகக் கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் நகர்கிறது. மதுரையிலிருந்து தஞ்சை, புதுக்கோட்டை, கும்பகோணம் வழியாக மாயவரத்தை அடைகிறார்கள் இரண்டு இளைஞர்கள். பூம்புகார் செல்வதற்கு முன்பு அவர்களுடன் அந்தப் பயணத்தில் ஒரு பெண்ணும் இணைகிறாள். வேகமாக மாறிவரும் சமுதாயத்தில் இளம் தலைமுறையினர் படும் அவலத்தையும், அவர்கள் மீதான அணுகுமுறையையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் மாயவரம் ஆகிய இடங்களில் 42 நாட்கள் நடந்துள்ளது. செந்தூர் பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாக, ப்ரீத்தி கரனும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்கள் தவித்து சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி, ஷிவானி கீர்த்தி, அபிஷேக் ராஜு, மாலிக், நாகராஜ், எஸ்.கே.தாஸ், எம். அமுதாராணி, மினு வாலண்டினா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் பிரசாத் ராமர் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். படத்திற்கு இசையமைத்து, தயாரித்து, பாடல்களையும் பிரதீப் குமார் எழுதியுள்ளார். உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார், தொழில்நுட்பக் குழுவில் ராதாகிருஷ்ணன் தனபால் (எடிட்டர்), விஜய் ஆதிநாதன் (கலை), அமர்நாத் (டிஐ கலரிஸ்ட்), சதீஷ் சேகர் (டைட்டில் சிஜி), isquare மீடியா (ஓப்பனிங் கிரெடிட்ஸ் அனிமேஷன்), யாதவ் ஜேபி (டைட்டில் & போஸ்டர் டிசைன்ஸ்), ஜி.சுரேன் (ஒலிக்கலவை) மற்றும் ஜி.சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு).

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து, மார்ச் 2024ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Thanks & RegardsSuresh Chandra
Kindly mail us the link to the following mail id

d.onechennai@gmail.com
Like us:https://www.facebook.com/pages/DOne/197796183663558?ref=hl
Follow us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *