*நாடு திரை விமர்சனம் !!
சக்ரா & ராஜ் தயாரித்து .எம் சரவணன் இயக்கி
பிக் பாஸ் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி நடித்து வெளிவந்துள்ள படம் நாடு .
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலைகிராமத்தில் உள்ள மருத்துவ மனையில் பணிபுரிய மருத்துவர்கள் தயங்குகிறார்கள்.
அரசால் அனுப்பபடும் பெண் மருத்துவரை தக்க வைக்க ஊர் மக்கள் செய்யும் முயற்சிதான் இந்த நாடு
எங்கேயும், எப்போதும்’, ’இவன் வேற மாதிரி’ படங்களில் விறுவிறுப்பன காட்சி நகர்வில் கதை சொன்ன M.சரவணன் இப்படத்தில் மனித உணர்ச்சிகளின் வழியே சிறிது நாடக பாணியில் படம் தந்துள்ளார்.
இருப்பினும் குக்கிராமத்தில் மருத்துவ வசதியின் தேவையை புரிய வைத்து விட்டார்.
நீட் அரசியல், மாறி வரும் உணவு பழக்கம் போன்ற விஷயங்களை தொட்டு விட்டு செல்கிறது நாடு.
பிக் பாஸ் தர்ஷனுக்கு இது கண்டிப்பாக பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
ஒரு சோகம் கலந்த நடிப்பில் நம்மை ‘அட ‘சொல்ல வைக்கிறார். டாக்டராக நடிக்கும் மஹிமா முதலில் ஊர் மக்களை வெறுப்பதும், பின்பு புரிந்து கொண்டு நேசிப்பதும் என மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.
கார்பரேட் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அரசியல் காமெடியாக சொல்லும் சிங்கம் புலியின் நகைச்சுவை தமிழ் நாட்டின் தமிழக அரசியல் தலைவர்களை பற்றி யோசிக்க வைக்கிறது
மறைந்த நடிகர் சிவாஜி ராவ்வின் நடிப்பை பார்க்கும் போது இன்னும் கொஞ்ச நாள் நீங்க இருந்திருக்கலாமே சார் என்று சொல்ல வைக்கிறது.
சக்திவேலின் ஒளிப்பதிவில் சத்தியாவின் இசை ஒரு தாலாட்டு போல் இருக்கிறது.
இந்தியாவின் ஆன்மா கிராமம் என்பார்கள். இந்த கிராமம் இயங்க நல்ல மருத்துவமனைகள் தேவை என்பதை வலியுறுத்துகிறது இப்படம். புதிதாக பிறந்த பெண் குழந்தைக்கு முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமியின் பெயரை சூட்டும் போது நம்மை அறியாமல் கை தட்டுகிறோம்.
மொத்தத்தில்
அனைவரும் பார்க்க வேண்டிய படம்