ஜனநாயகன் திரைப்படத்தின் திரை விமர்சனம் !

Share the post

ஜனநாயகன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைக் கரு :-
பயந்த சுபாவம் கொண்ட இப் படத்தின் நாயகி எப்படி தைரியசாலியாக மாறினாள் என்பதே கதைக் கரு.

பயந்த சுபாவம் பொதுவாக எல்லா பெண்களுக்கும் வருவது இயற்கை. அதையும் மீறி பாரதிக் கண்ட புதுமைப் பெண்ணாக மாற்றுவது தான் இன்றைய ஜனநாயகம்.

ஜனநாயகத்தினை கட்டியாள்வது ஜனநாயகன்.

கௌதம் மேனன் ஒரு ஜெய்லர்.ஜெய்லராக இருக்கும் கௌதம் மேனனுக்கு ஜெயிலில் இருக்கும் விஜய் நண்பராகிறார். இவர்களுக்குள் இருக்கும் நட்பு நெருக்கமாகிறது.

ஜெய்லர் கௌதம் மேனனுக்கு மகளாக மமிதா பைஜூ நடித்திருக்கின்றார். இல்லை இல்லை வாழ்ந்திருக்கின்றார்.

இந்தச் சமுதாயத்தில் தைரியம் மிக்க மகளாக வளர்க்க வேண்டும். என எண்ணும் ஜெய்லர் கௌதம் மேனன் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் இறந்து போகின்றார். எதிர்பாராதது தான் விபத்து. அந்த விபத்து கௌதம் மேனனை விட்டு வைக்கவில்லை .

கௌதம் மேனன் இறப்பு . மமிதா பைஜூவை வளர்க்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு வந்த அந்த சூழல். தனிமரமாக நிற்கும் அபலை பெண்ணுக்கு ஆலம் விழுதுகளாய் நின்று தாங்கி பிடிக்கும் பண்பு

கௌதம் மேனனைப் போலவே மமிதா பைஜூவை இந்தச் சமுதாயத்தில் தைரியம் மிக்க பெண்ணாக வளர்க்க வேண்டும் என நினைக்கின்றார் விஜய்.

அந்த நேரத்தில் வில்லன் தீட்டும் சதிக்கு முன் பலி கிடாவாகிறாள் மமிதா பைஜூ. ஆமாம் வில்லன் சதி திட்ட வேலையில் பையில் ஒன்றை மமிதா பைஜூ பெற வில்லன் கூட்டம் மமிதா பைஜூவை பிடிக்க வழக்கம் போல் தளபதி விஜய் மீட்க இந்தச் சதி திட்டத்திற்கு பின்னால் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை கண்டறிந்து அவர் ஆடும் ஆடுகளமே மீதிக் கதை.

தளபதி என்ற சொல் வெறும் வார்த்தை அல்ல வார்த்தெடுத்த தங்க விக்ரகம். தமிழக மக்களின் மனத்தில் நிலைத்து நிற்கும் விஜய் தன் நடிப்பால் தனி முத்திரையை பதித்து விட்டார் கடந்த மே நான்கில்.

விஜய் மீண்டும் திரைக்கு வருவாரா ? வந்து தன் நடிப்புத் திறனால் இரசிகர்கள் மனத்தினில் மீண்டும் இடம் பிடிப்பாரா ? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

விஜய் வயது 52 ஐ தொட்டு விட்டது. இந்த வயதிலும் காட்சிக்கு காட்சி தன் நடிப்புத் திறனைக் காட்டி தூள் கிளப்புகின்றார். நடனம் அவர் ஆடும் விதம் அந்த ஒரு நிமிடம் இரசிகர்கள் மனத்தில் நிலைத்து நிற்கின்றார்.இனி திரைக்கு மீண்டும் விஜய் வருவாரா ? இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைப்பாரா ?

நடனத்தில் தனி நளினம். சண்டைக் காட்சியில் மயிற் கூச்செறியும் ; உடம்பெல்லாம் புல்லரிக்க வைக்கும்.

அதே ஆக்‌ஷன் அதே எனர்ஜி குறிப்பாக இடைவேளையில் அந்த பேக்ட்ரி சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கின்றது. படத்தின் இறுதிக் காட்சி அதாவது கிளைமேக்ஸ் ரோபோ சண்டைக் காட்சி சீட்டின் நுனிக்கே நம்மை இழுத்துச் செல்லுகிறது.

திருப்புக் காட்சியில் அதாவது பிளாஷ் பேக் காட்சியில் போலீஸ்ஸாக வரும் நம் தளபதி அதிலும் அவர் முதல்வர் ஆனதும் அதை எல்லாம் பார்த்து இரசிக்கும் நம் இரசிகர்கள் தனிப்பட்ட முறையில் கொண்டாடி மகிழ்வார்கள்.

தளபதி விஜய்க்கு அடுத்த நிலை மமிதா பைஜூ ஏற்று நடித்த அந்த முக்கிய கதாபாத்திரம் தான்.

தளபதி விஜய் சொல்லும் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் தான் சுதந்திரமாக வாழ வேண்டும் என நினைக்கும் மமிதா பைஜூ காதல் அதன் பின்னால் ஏற்படும் அசம்பாவிதம் . அதிலிருந்து மீண்டும் தளபதி விஜய் எதற்காக நம்மிடம் இப்படி நடந்து கொள்கிறார் ? என்பதை புரிந்து கொண்டு அவள் தைரியமான பெண்ணாக மாறுகிறாள் மமிதா பைஜூ . இறுதிக் காட்சியில் அதாவது கிளைமேக்ஸில் ஓர் இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பது மிக சிறப்பு.

பூஜா ஹெக்டே , பிரகாஷ்ராஜ் கதாபாத்திரங்கள் நாசுக்காகவும் , வெகு இயல்பாகவும் இருந்து படத்திற்கு கைகொடுத்து இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

பாபி தியோல் கேரக்டர் அவர் ஏன் இப்படி மாறினார் ? என்பதற்காகவே காட்சி ஒன்றை வைத்துள்ளார் இப் படத்தின் இயக்குநர்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால் வியாபார ரீதியில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் வில்லனுக்கு பின்னால் அவன் வாழ்க்கையில் நடந்தக் கதையை கதையில் வைத்தது சரிதான். இருப்பினும் உலக அளவில் உயர்த்திக் காட்டி பஞ்சு மிட்டாய் கணக்காக இழுத்திருப்பது சவசவ…

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு , சுறுசுறுப்பு படத்தில் வரும் விஜய் பிளாஸ்பேக் வரை நன்றாக செல்ல இடையில் மதம் சார்ந்த சண்டைக் காட்சியை படத்தில் திணித்திருப்பது வியாபார ரீதியில் கொஞ்சம் சேர்த்திருந்தாலும். அது மனத்திற்கு நெருடல் தான்.

படத்தின் உச்சக் கட்டம் . விஜய்யின் அதிரடி ஆக்‌ஷன் . அதனைத் தொடர்ந்து இரசிகர்களுக்காக வைத்த மர்ம முடிச்சு இதனை அவிழ்க்கும் விதம். தளபதி விஜய்யை கொண்டாட வைக்கின்றது. மனத்தை மகிழ்ச்சிக் கடலில் நீராட வைக்கின்றது.

விஜய் படத்தில் பேசும் வசனங்கள்யாவும் கதை ஓட்டத்திற்கு ஓர் வடிகால இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

மிக முக்கிய காட்சி ஒன்று விஜய் பேசுவது. அந்தக் காட்சியை குழந்தைகள் பார்க்கக் கூடாதபடி ” ஏ ” சர்டிபிகேட் வாங்கியிருப்பது மனத்திற்கு சிறிது வருத்தமே ! பெருத்த ஏமாற்றமே !

இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசை மிக அருமை. விஜய் – அனிருத் காம்போவிற்கு இருக்கும் ” கிக் ” இந்தப் படத்தில் இல்லை என்றே சொல்ல வைக்கின்றது.

கதையை திரைக்கு கொண்டு செல்வது வண்ண ஒளிப்பதிவே. படத்தில் பல இடங்களில் தன் கைவண்ணத்தை ஒளிப்பதிவாளர் காட்டினாலும் சில இடங்களில் செயற்கை தனம் தான். சற்று நெருடல் தான்

படத்தில் முதல் பாதி விறுவிறுப்பைக் காட்டினாலும் இரண்டாம் பாதியில் விஷயங்களை திணிக்க வைத்தது சற்று மூச்சு திணறல் தான்.

பார்த்ததில் ஜனநாயகன் இரசிகர்கள் கொண்டாடி மகிழும் படம் தான். பார்க்கலாம் பார்த்து இரசிக்கலாம்.

தொழில் நுட்பக்
கலைஞர்கள் :-
திரைக்கதை இயக்கம் :- H.வினோத்
தயாரிப்பு :- வெங்கட் கே நாராயணா
கதை :- அனில் ரவிபுடி
மூலக் கதை :- பகவந்த் கேசரி

இசை / பின்னணி இசை :- அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு :- சத்யன் சூரியன்

படத்தொகுப்பு :- பிரதீப் இ.ராகவ்

நடிகர்கள் :

சி.ஜோசப் விஜய் (CM)

பூஜா ஹெக்டே

பாபி தியோல்

மமிதா பைஜூ

கௌதம் வாசுதேவ் மேனன்

பிரகாஷ் ராஜ்
நரேன்
பிரியாமணி

திரை விமர்சனத்தில் ” ஜனநாயகன் ” என்னும் திரைப்படம். இளமையில் தன் தாயின் இறப்பு நாயகியின் மனத்தை பயத்தில் ஆழ்த்துகிறது. இதை வெளிக் கொண்டுவர முயற்சிக்கும் வேளையில் இவளின் தந்தைக்கு ஏற்பட்ட விபத்து. மரணம். விஜய் ஆதரவு பயத்தை போக்க அவர் செய்யும் முயற்சி ஒரு கட்டத்தில் இவள் தைரியசாலியாக மாறிய விதம் சொல்லிக் கொண்டே போகலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று விமர்சனம் செய்கின்றது. இனி வேறொரு படத்தில் சந்திப்போம். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ; ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *