ஆல் பாஸ் திரைப்படத்தின் திரைவிமர்சனம் !

Share the post

ஆல் பாஸ் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதைக் கரு :-
கணக்கில் வராத பறிபோன பணமும் பறிபோன பணத்தைக் கைப்பற்றிய குடும்பம் செலவு பண்ண முடியாமல் தவிப்பதும் இது தான் இந்தப் படத்தின் கதைக் கரு .

கதையும் கதையின் போக்கும் :- வட சென்னை வாசிகள் ஜெயப்பிரகாஷ் , சுப்பிரமணிய சிவா , பிரசன்ன பாலச்சந்திரன் மூவரும் சகோதரர்கள் போல பழகுகின்றனர். இவர்களது குடும்பமும் ஒற்றுமையாக பழகுகின்றனர். சுப்பிரமணிய சிவா மற்றும் பிரசன்ன பாலச்சந்திரனின் பிள்ளைகளும் ஜெயப்பிரகாஷை தன் சொந்த பெரியப்பாவாக நினைத்து அவர் சொல்படி கேட்டு நடக்கின்றனர்.

அந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சரத் லோகித்ஷவா தன்னுடைய அரசியல் பணிக்காக கணக்கில் வராத பணத்தை பல இடங்களில் பதுக்கி வைக்கின்றார்.

அதற்காக பழைய கிடங்கு ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் 5 கோடி ரூபாயை பதுக்கி வைக்கின்றார்.

பழைய கிடங்கு ஒன்றில் பதுக்கி வைத்த பணத்தை அந்த மூன்று குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் வீட்டுக்கு கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்த ஜெயப்பிரகாஷ் கண்டிக்கிறார். எடுத்தப் பணத்தை எடுத்த இடத்திலேயே வைக்கச் சொல்கிறார்.எல்லா விஷயத்தையும் காது கொடுத்து கேட்டு அதன்படி நடக்கும் இந்த மூன்று குடும்பமும் இந்தப் பணவிஷயத்தில் அவரது பேச்சைக் கேட்க மறுப்பதோடு உதாசீனப்படுத்தி விடுகின்றனர்.

கிடைத்த பல கோடி ரூபாயை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை தடுமாறுகின்றனர். திட்டங்கள் பல தீட்டினாலும் அதனை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் தவிக்கும் மூன்று குடும்பம் ஒரு பக்கமும் , பணத்தைப் பறிக் கொடுத்து தவிக்கும் எம்.எல்.ஏ மறுபக்கமும் அல்லாட்டமும். பணத்தைக் கண்டு பிடிப்பதில் தீவிரமாக அக்கறை செலுத்தும் எம்.எல்.ஏ சட்டத்தின துணையை நாடமுடியாமலும் , காவல் துறையை அணுக முடியாமல் தவிக்கும் எம்.எல்.ஏ பறி போன பணத்தை கையகப்படுத்தினாரா ? வறுமையில் வாடும் அந்த மூன்று குடும்பமும் தங்களுக்கு கிடைத்த அந்தப் பணத்தை செலவு செய்தார்களா ? என்பது தான் கதை .

சொன்னதும் சொல்ல வந்ததும் :-
வறுமையில் சிக்கித் தவிக்கும் மூன்று குடும்பமும் கணக்கில் வராத பெருந் தொகை கிடைத்ததும் அதனை அனுபவிக்க முடியாமல் போனது சொன்ன கதை.

கணக்கில் வராத பணத்தை பறிக் கொடுத்த எம்.எல்.ஏ காவல்துறையை நாடாமல் ; சட்டத்தின் துணையை கரம் பிடிக்காமல் திருடனுக்கு தேள் கொட்டினார் போல் தவிக்கும் எம்.எல்.ஏ பணத்தை தேடுவது சொல்ல வந்த கதை. கிடைத்த பணத்தை அனுபவித்ததா அந்த மூன்று குடும்பமும் ? பறிப் போன பணத்தை மீட்டெடுத்தாரா எம்.எல்.ஏ ?

படத்தின் வேகமும் படத்தின் குறையும் :-
வட சென்னை வாழ்வியலையும் அந்தப் பகுதி மக்களைப் பற்றியும் பேசும் கதையாக ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்குகிறது.

பதுக்கிய பணத்தை எம்.எல்.ஏ பறி கொடுக்க ! பதுக்கிய பணம் சிறுவர்கள் கைப்பற்ற ! படம் படு வேகத்துடன் ஓட ஆரம்பிக்கிறது. பார்வையாளர்களின் கவனத்தை தன்பால் இழுக்கிறது.

படத்தின் முதல் பாதி விறுவ்விறுப்பாக போகிறது. இரண்டாம் பாதியின் வேகம் சற்று குறைகிறது

திரை நட்சத்திரங்கள் :-
ஜெயபிரகாஷ் , சுப்பிரமணிய சிவா , பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று இயல்பான நடிப்பின் மூலம் எளிய மக்களாக நேர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

திரை நட்சத்திரங்கள் :-
ஜெயபிரகாஷ் , சுப்பிரமணிய சிவா , பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களை ஏற்று இயல்பான நடிப்பின் மூலம் எளிய மக்களாக நேர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷின் மனைவியாக செந்தில் குமாரி. இனிமை தவழும் குரல் வளம் கொண்டவர். நடிப்பில் தனி கவனம் செலுத்துபவர்.

சுப்பிரமணிய சிவாவின் மனைவியாக வினோதினி நடித்திருக்கிறார். பிரசன்ன பாலச்சந்திரன் மனைவியாக ஆர். மோகனா இவர்கள் கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கின்றனர்.

இளஞ்சோடியாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ் – ஜனனி இவர்கள் காதல் இளமையின் துள்ளல் . பருவத்தின் எழில். இவர்களின் வேதியல் மாற்றம் படத்திற்கு கைகொடுத்து இருக்கின்றன. படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றன.

மூன்று குடும்பத்தின் செல்ல வாரிசாக நடித்திருப்பவர்கள் மாஸ்டர் சஞ்சய் , மாஸ்டர் கோகுல் , மாஸ்டர் நிகில். தமக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் தனி கவனம் செலுத்திதனி முத்திரையைப் பதித்து இருக்கின்றனர். படத்திற்கு இவர்கள் ஒரு மைல் கல்.

துணை நட்சத்திரங்கள் :-
எம்.எல்.ஏ வாக சரத் லோகித்ஷவா நடித்திருக்கிறார். எம்.எல்.ஏ வை நினைவுபடுத்துகிறார்.உண்மையை தோல் உரித்து காட்ட வைத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

கவுன்சிலர் வேடத்தில் சத்யா . போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அருவி மதன் முதலானோர் சிறிய வேடம் என்றாலும் அதனை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- தில்ராஜூ. வட சென்னையை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். அந்தப் பகுதி வாழ் மக்களையும் இயல்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். பாடல் காட்சிகளை அழகியலோடு உயிர் ஓவியமாய் காட்டி பார்வையாளர்களை அசத்தியிருக்கிறார்.

படத்தொகுப்பு :- எஸ்.பாஸ்கர்.படத்தை தொய்வு இல்லாமல் முதல் பாதியை அழகாக தொகுத்து கதையை நகர்த்திச் செல்ல உதவியிருக்கின்றார். இரண்டாம் பாதியில் படத்தை பார்க்க தவறி விட்டார் . கதையை கேட்க மறந்து விட்டார்.

இசை :- ஜேம்ஸ் வசந்தன் :- இவர் ஓர் இசையமைப்பாளர். இவரின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் அருமை. திரைப்படத்திற்கு பின்னணி அவசியம் உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்

எழுத்து இயக்கம் :- மைதீன் .பணம் அளவுக்கு அதிகமானால் திருட்டு. அரசை ஏமாற்றினால் அது கறுப்பு பணம். கணக்கில் வராத பணத்தை பதுக்கி வைப்பதும். அரசுக்கு கணக்கு காட்டாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம். ஏழைக் கையில் கிடைத்த அளவுக்கு மீறிய பணத்தை புழங்க முடியாமல் தவிப்பதும் . கணக்கில் காட்டாத பணத்தை பறிக் கொடுத்த எம்.எல்.ஏ திண்டாடுவதும் புதிய முயற்சியில் கதையின் கதைக் களத்தில் இறங்கி ஒரு சுற்று சுற்றி வருகிறார் இயக்குநர் மைதீன்.

இழந்த பணத்தைக் கண்டு பிடிக்க எம்.எல்.ஏ கையாளும் யுக்திகளும் , கையில் அதிகமாக பணம் இருந்தும் அதனை செலவு செய்ய முடியாமல் திண்டாடும் ஏழைக் குடும்பமும் இவர்களை மையமாக வைத்து நல்ல முறையில் படத்தைக் கொண்டு செல்கிறார் இயக்குநர் மைதீன்.

பணத்தால் ஏற்படும் பிரிவினை ஆகியவற்றை திரில்லராக கொண்டு செல்கிறார். இயக்குநர் மைதீன் பணம் எடுத்தவர்களை கண்டு பிடிக்க முடியாததன் காரணத்தை காரண காரியத்தோடு கையாண்டு அடுத்துஎன்ன என்ன என்ற எதிர்ப்பார்ப்பை பார்வையாளர்களிடம் ஏற்படுத்திவிடுகிறார் இயக்குநர் மைதீன்.

முற்பகுதியில் விறுவிறுப்பு . பிற்பகுதியில் சுணக்கம். இதனை தவிர்த்து இருக்கலாம்.நல்ல படம் குடும்படம் . பார்க்க வேண்டிய படம்.

முற்பகுதியில் விறு விறுப்பு. பிற்பகுதியில் சுணக்கம் ! இதனை தவிர்த்து இருக்கலாம். நல்ல படம் , குடும்ப படம் , பார்க்க வேண்டிய படம்.பார்க்கலாம்.

ஆல் பாஸ் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் ஆய்வு செய்ததில் நல்ல படம். சமுதாயத்திற்கு நல்லதொரு கருத்தை சொன்ன படம். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையோடு நின்று நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம்.அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *