மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது !




இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, 2021 ஜூலை 16 அன்று துவங்கியது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படபிடிப்பு 80% முடிக்கப்பட்டுவிட்டது.


Masala Pix நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் இது குறித்து கூறியதாவது…
படப்பிடிப்பு திட்டமிட்டம்ப்படி மிகச்சரியாக நடைபெறுவதற்கு, முழு முதல் காரணமாக இருந்தது, எனது படக்குழுவினர் தான். அவர்களுக்கு, என் மனதார நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்திற்காக முழு ஈடுபாட்டுடன், தங்களது முழு உழைப்பையும் தந்த மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். தற்போது படத்தின் 80% சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரெயல்ர், இசை மற்றும் பட வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளோம் என்றார்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது. இப்படத்தில் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி , தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.


N. கண்ணன் இசையமைக்கிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் கண்ணன் உடைய Masala Pix நிறுவனம், MKRP Productions உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.