மீசையை முறுக்கு – 2 திரைவிமர்சனம் :-

Share the post

மீசையை முறுக்கு – 2 என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
கதைக் கரு :- கானா உலகம் . குறுகிய வட்டத்திற்குள் இருக்கிறது. இதை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதே இக் கதையின் கரு.

கதையும் அதன் போக்கும் :-
கானா பாடகர் ஹிப்ஹாப் ஆதி கானா என்னும் கலையை குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளியே கொண்டுவர இவர் முயற்சி செய்கிறார். மற்றைய இசைக் கலைஞர்களைப் போல பல்வேறு மேடைகளில் கானாப் பாடலை பாட வேண்டும். என்ற ஆவலின் விளைவாக முயற்சி செய்ய அது தோல்வியில் போய் முடிகிறது. அவரது மகனும் அதே முயற்சியில் ஈடுபட்டு இசைத் துறையில் சாதிக்க நினைக்கிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. காரணம் குடும்ப சூழ்நிலை தான்.மூன்றாவது தலைமுறையிலும் அத்தகைய போராட்டத்தை சந்திக்கின்றார். தனது தாத்தாவைப் போல , அப்பாவைப் போல தோல்வி அடைந்தாரா ? அன்றி இசைத் துறையில் சாதித்தாரா ? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக மிக ஜாலியாக கொண்டு போவதே இப் படத்தின் நோக்கமாகும்.

ஹிப்ஹாப் ஆதி தன் தம்பி தங்கைகளுக்கு அறிவுரை சொல்கிறார். ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம் என படம் முழுவதும் கல கலப்பாக கொண்டு போகிறார். பொதுவாக இசையமைப்பாளர்களுக்கு கல கலப்பான மூடு எப்பொழுதும் இருக்கும். அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி தன் படத்தினை கல கலப்பாக கொண்டு போகிறார். இடையிடையே சில தத்துவங்களை பேசுகிறார். சென்னை கானாவிற்கு ஓர் அங்கீகாரம் பெற்றுத் தருவதற்காக புரட்சி செய்கின்றார். இந்தப் புரட்சி வட சென்னை மக்களை கவரும் விதமாக இருக்கும் என இவர் நம்புகிறார்.

பாடல்கள் மூலம் இரசிகர்கள் மனத்தில் இடம் பிடிக்கலாம் என்ற கனவு எல்லா இசையமைப்பாளர்களுக்கும் இருக்கும். இவர் மட்டும் விதி விலக்கா என்ன ? ஏற்கெனவே மீசையை முறுக்கு -1 இதில் தன்னுடைய வாழ்க்கையை வைத்து படம் எடுத்து அதில் வெற்றியும் கண்ட இவர் . மீசையை முறுக்கு -2 ஐ எடுத்து இதிலும் வெற்றி என்னும் முத்திரையை பதிக்க தவறவில்லை. உழைப்பு யாரையும் கைவிடாது.

இந்தப்படத்தினை எழுதி இயக்கி இசையமைத்து நடித்தும் இருக்கின்றார்.

திரை நட்சத்திரங்கள் :- ஹிப்ஹாப் தமிழா ஆதி :- தன் நடிப்பால் உயர்ந்து நிற்கின்றார். தன் இசையால் படத்தினை தூக்கி நிறுத்தி இருக்கின்றார். ” கலைவாணியே ” என்ற பாடல் நெஞ்சைத் தொட்டுவிட்டது. படத்தின் முதல் பாதி இன்றைய இளைஞர்களை கவரும் வண்ணம் படத்தினை இயக்கி இருக்கின்றார். இரண்டாம் பாதி உணர்ச்சிகளை கொட்டித் தீர்த்திருக்கின்றார். தந்தைக்கும் – மகனுக்கும் இடையே உள்ள உறவினை மிக அழகாக காட்சிமைப்படுத்தியுள்ளார். இந்தக் காட்சி பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது

இந்தப் படத்தில் மூன்று கதை நாயகிகள். ஒவ்வொரு கால கட்டத்திற்கும் ஒவ்வொரு கதாநாயகி என மூன்று கதாநாயகிகளும் தங்களது வேலையை தொய்வில்லாமல் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றனர்.
யார் அந்தக் கதாநாயகிகள் நீங்கள் கேட்பது என் காதில் வந்து விழுகிறது. பதில் சொல்கிறேன்.சித்ரா ஆச்சார் , கெட்டிகா சர்மா , ரம்யா ரங்கநாதன் .

மீண்டும் இவர்கள் பெயரை ஒருமுறை சொல்லிப் பார்ப்போம். சைத்ரா அச்சர் , கெத்திகா ஷர்மா , ரம்யா ரங்கநாதன் இவர்களுடன் கருணாஸ் , பாபா பாஸ்கர் , ஹர்ஷத் கான்

ஆதியின் நண்பராக ஹர்சத் கான். இவர்களுடன் களம் இறங்கியிருப்பவர்கள் :- நாசர் , ஆடுகளம் நரேன் , சாரா ,கருணாகரன் இவர்கள் அனைவரும் தங்கள் உழைப்பை சரியான நேரத்தில் பயன்படுத்தி படத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்கம் :- ஹிப்ஹாப் தமிழா ஆதி. எழுதி இயக்கி இசையமைத்து நடித்தும் இருக்கிறார் இவர்

முதல் பாகத்தின் மையக் கருவை ஒரு கையில் எடுத்துக் கொண்டார். மறு கையில் கானாவை எடுத்துக் கொண்டார். சென்னை கானா கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஒரு புரட்சியே பண்ணுகின்றார். இன்றைய இளைஞர்களை ஈர்க்க முயற்சி செய்து இருக்கின்றார்.

இளைஞர்களின் நாடித் துடிப்பை அறிந்து பாடல்கள் மற்றும் காட்சிகளை சரியான முறையில் வடிவமைத்து விழாக் கோலமாக திரையரங்கை அதிர வைக்கின்றார். பாடல்கள் அதிகமானாலும் மனத்தில் நிற்பது இரண்டு பாடல்களே !

ஒளிப்பதிவாளர் :- பாலாஜி சுப்பிரமணியம். இவர் படம் முழுவதும் வண்ணம் மயமாக காட்சிமைப் படுத்தியுள்ளார். மூன்று கால கட்டங்களை வேறுபடுத்திக் காட்டி மிக நேர்த்தியாக தன் பணியை சிறப்பாக செய்து படத்திற்கு புதிய பலத்தை சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது. பாராட்டுவோமே !

படத்தொகுப்பு :- ஃபென்னி ஆலிவர் :- இயக்குநர் வரிசைப்படுத்திக் கொடுத்தபடி காட்சிகளைத் தொகுத்து இருந்தாலும் படம் தொய்வில்லாமல் காட்சிகளை நகர்த்தி படத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

மீசையை முறுக்கு -2 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஜாலியாக இருக்க வேண்டும். என்ற லாஜிக்கு ஏற்றவாறு படம் இருந்தாலும் திரைக்கதையில் சில இடங்களில் சறுக்கல் . அதே சமயம் இத்தகைய சறுக்கல்களை சரி செய்து இருந்தால் படத்தின் தரமே வேற லெவல் தான். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி பெருமை படுத்தி இருக்கிறது. மீண்டும் அடுத்த திரைவிமர்சனத்தில் சந்திப்போம் அதுவரை பிரியாவிடை பெறுவது உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *