கிட்டிதிரை விமர்சனம் :-

Share the post

கிட்டி என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
ஒரு நிரபராதியான மனிதனின் மனநிலையை ஒரு குற்றவாளி எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும் அதன் காரணமாக ஒரு விசாரணை எவ்வளவு சிக்கலாக முடியம் என்பதே இப் படத்தின் கதைக் கரு.

கதையின் போக்கு :-
இந்தத் திரைப்படம் ஒரு குற்றவாளியை விசாரணை என்ற பெயரில் நடத்தும் நாடகம். காதல் , கொலை , நீதி மன்ற வழக்கு , விசாரணை என பல தகவல்களை முன்னிறுத்தி அதைவிட உளவியல் ரீதியாக நடக்கும் இந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் நகர்கிறது.

படத்தின் தொடக்கமே அதிர்ச்சியான விஷயத்தோடுதான் ஆரம்பிக்கிறது. விஜய் என்ற ஆட்டோ ஓட்டுநர் நேராக காவல் நிலையத்திற்குச் செல்கிறார்.தான் சிவா மற்றும் பூஜா இவர்களை தான் தான் கொலை செய்து விட்டதாக வாக்கு மூலம் கொடுக்கிறார்.

கதை திருப்புக் காட்சிக்கு முன்னோக்கி நகர்கிறது.

விஜய் – பூஜா காதலர்கள். விஜய் தமிழன் . பூஜா வட இந்தியப் பெண். விஜய் ஓர் ஆட்டோ ஓட்டுநர். காதலுக்கு மொழி தடையாக இருந்தாலும் உடல் மொழியால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கின்றனர்.

பூஜா தமிழைக் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள். விஜய்யும் இந்திக் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறான். முழுமையாக இவர்கள் இருவரும் மொழியைக் கற்றுக் கொள்கிறார்களா ? படத்தினைப் போய் பாருங்கள் அப்போது உங்களுக்கே அது புரியும்

இந்த மொழிப் பிரச்சினையைத் தாண்டி உருவாகும் காதலை இந்தப் படம் காட்டுகிறது

இவர்களுக்கு இடையே சிவா என்ற இன்னொரு நபர் இவர்களின் காதலுக்குள் நுழைகிறார் . பூஜாவின் வாழ்க்கையில் வந்து போன இந்த சிவாவை பூஜாவின் அப்பாவால் விரட்டப்பட்டவர். பூஜாவின் வாழ்க்கையில் குறுக்கிட்ட சிவாவின் விஷயம் விஜய்யின் மனத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

விஷயம் நீதிமன்றத்திற்கு போகிறது. விஜய் பூஜாவை தான் காதலித்ததாகவும் , அவள் தன்னை ஏமாற்றியதாகவும் கூறுகிறார். ஆனால் இங்கு நடந்தது என்ன ? இங்கு தான் கதை ஒரு பெரிய உளவியல் மர்மத்திற்குள் செல்கிறது.

விஜய்யின் பின்னணி என்ன ? அவரின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை சேகரிக்க காவல்துறையினர் விசாரணையை ஆரம்பிக்கின்றனர்.

மருத்துவரின் மூலமாக விஜய்யின் மனநிலைபற்றிய முக்கியமான தகவல் வெளிவருகிறது.

உளவியல் கூற்றுப்படி ஒருவருக்கு மனத்தளவில் பாதிப்பு ஏற்பட்டால் யார் எதைச் சொன்னாலும் அதை தான் செய்ததாக நம்பிவிடுவர். அந்த வகையில் யாராவது ஒரு சம்பவத்தை விஜய்யிடம் சொல்லி விட்டால் அது உண்மையிலேயே தான் செய்த சம்பவமாக நம்ப ஆரம்பித்துவிடுவார்

இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் குற்றவாளி ஒருவன். தான் செய்த குற்றங்களுக்கு எல்லாம் விஜய் செய்ததாக நம்ப வைக்கிறான். அந்தச் சம்பவங்கள் உண்மையிலேயே தான் செய்ததாக காவல் துறையிடம் தகவலை பதிவு செய்யும் விஜய் உண்மையில் அவர் செய்ததாக காவல் துறையும் நம்புகிறது.

ஒரு கால கட்டத்தில் காவல் துறைக்கே விஜய் விஷயத்தில் உண்மை எது ? எது விஜய்யின் மனத்தில் உருவான விஷயம் என்று புரியாமல் தவிக்கிறது காவல்துறை.

இதற்கிடையே நீதிமன்றத்தில் இன்னொரு திருப்புமுனை ஏற்படுகிறது.

அது என்ன திருப்புமுனை ஆய்வு செய்யும் போது இன்னொரு பூகம்பம் வெடிக்கிறது. ஒரு பொய்யை மறைக்க இன்னொரு பொய் என்று சொல்வார்கள் பெரியோர்கள்.

மஹா என்ற பெண் விஜய்யை தனக்குத் தெரியாது என்று கூறுகிறாள். தனக்கும் விஜய்யுக்கும் எந்தவிதமான உறவும் இல்லை . காதலும் இல்லை என்று கூறுகிறாள் மஹா. தான் வேறு ஒருவரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் சொல்கிறாள் மஹா.

ஆனால் விஜய் சொல்லும் வார்த்தைகள் யாவும் அதிர வைக்கின்றன. தான் மஹாவை காதலித்ததாகவும் அவளும் தன்னைக் காதலித்து விட்டு , வேறொருவனை மணம் செய்யப் போனதாகவும் தன்னை ஏமாற்றிய மஹாவை தான் கொலை செய்ததாக விஜய் சொல்கிறார்.

இன்னொரு பெரிய அதிர்ச்சி படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கிறது. விஜய்யால் கொலை செய்யப்பட்ட மஹா உயிரோடு இருக்கிறாள். அது எப்படி ? என்ற வினா மண்டையை குடைய வைக்கிறது.

காவல்துறைக்கு விஜய் கொடுத்த தகவல்கள் மீது சந்தேகம் எழுகிறது. சந்தேகம் காவல்துறை யின் இரத்தத்தில் ஊறிப் போன விஷயம். ஏன் என்றால் அந்தத் துறை அப்படி ?

நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது இராஜா என்ற ஆட்டோ டிரைவர் மீது சந்தேகம் திரும்புகிறது.

இதுவரை நடந்து முடிந்த கொலைகளுக்குப் பின்னால் இராஜாதான் உண்மையான குற்றவாளி என்று நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மூலம் தெரிய வருகிறது. விஜய்யின் உளவியலின் கூற்றுப்படி அவரின் மனநிலையை பயன்படுத்தி அவன் செய்யாத குற்றங்களையும் அவனே செய்ததாக நம்ப வைத்திருப்பது நீதிமன்றத்திற்கு தெரிய வருகிறது. ஆனால் இராஜா கைது செய்யப்பட்ட பிறகும் இந்த மர்மம் நீடிக்கிறது.

குற்றம் சாட்டப்பட்ட இராஜாவும் தான் கொலைக்காரன் இல்லை என்று சாதிக்கின்றார். இதனால் காவல்துறை மீண்டும் விஜய்யின் மனநிலையை ஆய்வு செய்ய முனைகிறது. அப்போது விசாரணையின் போது இன்னொரு முக்கியமான சம்பவத்துடன் இணைகிறது.

என்ற இந்த விஷயம் விசாரணை மூலம் தெரிய வருகிறது. மருத்துவரின் மகள் தீப்தி. பூஜாவின் கல்லூரித் தோழி . தீப்தியும் இந்தச் சம்பவங்களின் ஒரு பகுதியாக மாறுகிறார். அவருக்கு எதிராக நடக்கும் ஒரு கொடூரமான குற்றமும் பின்னர் விசாரணையில் தெரிய வருகிறது.

ஒவ்வொரு சம்பவமும் தொடர்வண்டியைப் போல ஒன்றோடு ஒன்று இணையும் போது விஜய் உண்மையில் எவ்வளவு விஷயங்களை அவருடைய மனம் உருவாக்கியிருக்கிறது என்ற கேள்வி படத்தின் புதிராக மாறுகிறது.இந்தப் படத்தின் மர்மத்திற்கு விடையைத் தேட தியேட்டரில் சென்று பாருங்கள் உண்மை புரியும்.

ஒரு நிரபராதிய மனிதனின் மனநிலையை ஒரு குற்றவாளி எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான் என்பதையும் , அதன் காரணமாக ஆய்வு செய்யும் போது எவ்வளவு சிக்கலில் கொண்டு போய் முடிகிறது என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது.

திரை நட்சத்திரங்கள் :-
அசோக் விஜய் கதாபாத்திரத்தில் முதிர்ச்சியாக நடித்திருக்கிறார். குழப்பமான மனநிலைக் கொண்டவராக அவருடைய அனுபவமும் , உடல்மொழியும் கவனத்திற்கு கொண்டு வருகின்றன. காதல் காட்சியிலும் சரி , உணர்ச்சி வசப்படும் காட்சியிலும் சரி , சண்டைக் காட்சியிலும் சரி , மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

பூஜாவாக Misha Ishmeet நடித்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனி முத்திரையை பதித்திருக்கிறார்.

மஹாவாக சங்கவி தர்மராஜ் நடித்திருக்கிறார் இவரும் சோடைப் போகவில்லை

Simu Advani தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனி கவனம் செலுத்தி நடித்து இருக்கிறார்..

இராஜாவாக Arjoona duraiswamy நடித்து இருக்கிறார். இவர் investigationக்கு இன்னொரு layer சேர்த்திருக்கிறார்.

நீதிபதியாக வரும் Gee Mahindra வின் courtroom portionsம் கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது படத்திற்கு இன்னொரு பலம்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இசை :- காதர். இவருடைய இசை படத்திற்கு பக்க பலமே . courtroom மற்றும் investigation portionsக்கு ஏற்றமாதிரி இசை கை கொடுத்திருக்கிறது.

இயக்குநர் :- நெடுமாறன் . இவர் எழுதி இயக்கி இருக்கின்ற இந்தப் படம் Psychological angle ஐ மையமாக வைத்து எடுத்து இருக்கின்றார்.

இசை – காதர்
ஒளிப்பதிவு -வி.எஸ்.வேலன்
நடனம் – ராக் சங்கர்
எடிட்டர் – கார்த்திக் பாண்டியன்
ஸ்டண்ட் – ‘பாப்புலர்’ பாபு
பாடல்கள் – ப்ரியன், சீர்காழி சிற்பி,
தமிழ்மகன்
கலை இயக்குநர் – வாலி
பத்திரிக்கை தொடர்பு – சரண்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நெடுமாறன் மோகன்தாஸ்.

ரியா கிரியேஷன்ஸ் சார்பாக திருமாறன் படத்தை தயாரித்திருக்கிறார் .

கிட்டி என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் கிட்டி ஒரு சாதாரண murder investigation படம் கிடையாது . குற்றத்தை யார் செய்தார்கள் என்பதை மட்டும் தேடாமல் ஒரு மனிதனின் psychological conditions ஐ எப்படி ஒரு weapon மாதிரி பயன்படுத்த முடியும் என்பதையும் கதை பேசுகிறது. எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி பெருமைப்படுத்துகிறது. மீண்டும் சந்திப்போம் வேறொரு திரை விமர்சனத்தில் அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடை பெறுவது உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் , ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *