கிக் திரை விமர்சனம்!!

Share the post

ஜெ.துரை

கிக் திரைவிமர்சனம்!!

பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் “கிக்”

இத்திரைப்படத்தில் தம்பிராமையா, தன்யா ஹோப், கோவை சரளா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்

விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் சந்தானம் அதே போல் இன்னொரு விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் மனோபாலா நிறுவனத்தில் பணிபுரிபவர் கதாநாயகி(தான்யாஹோப் )

சந்தானம் குறுக்கு வழியில் சென்றாவது விளம்பர படங்கள் எடுக்க காண்ட்ராக்டுகளை பெற்று விட வேண்டும் என்பது இவரது எண்னம்

தன் நிறுவனத்திற்கு போட்டியாக இருக்கும் மனோபாலா நடத்தி வரும் கம்பெனியின் திறமையான நேர்மையான நாயகியான தான்யா ஹோப்பை கண்ட நொடியிலேயே காதலில் விழுகிறார் சந்தானம்

ஆனால் பொய் புரட்டு என வேலை செய்து தங்கள் ஆர்டர்களைத் தட்டிப் பறிக்கும் சந்தானத்தை நேரில் பார்க்காமலேயே அவரது பெயரை கேட்டாலே வெறுப்பாகிறார் கதாநயாகி

இந்நிலையில் அட்வர்டைஸ்மெண்ட் ஃபிலிம் கவுன்சிலில் சந்தானம் மீது புகார் கொடுக்கவும் செய்கிறார் தான்யா ஹோப்.

இந்தப் புகார்களில் சிக்காமல் கோல்மால் செய்து ஒவ்வொரு முறையும் எஸ்கேப் ஆகும் சந்தானம் தான்யாவுடம் வேறொரு பெயரில் பழகி தன்னுடன் காதல் வயப்பட வைக்கிறார்.

தான்யாவை உண்மையாகக் காதலிக்கத் தொடங்கும் சந்தானம் ஒரு கட்டத்தில் உண்மையை சொல்லிவிட முயற்சிக்கும் நேரத்தில் தான்யா தான் ஏமாற்றப்படுவது தெரிந்து மனமுடைகிறார்.

உண்மை தெரிந்த பின் நடப்பது என்ன தொழில் போட்டிகளுக்கு இடையே இவர்களது காதல் என்ன ஆனது என்பதே படத்தின் கதை

கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜூம் படத்தை தமிழில் கிக்காக ரீமேக் செய்திருக்கிறார்கள்

‘ஹீரோ’ சந்தானம் வழக்கம்போல் டைமிங் காமெடி, பாடிலேங்குவேஜ் என தன் கதாபாத்திரத்திற்கு கேற்றார்போல தனக்கு தரப்பட்ட வேலையை குறைவே இல்லாமல் செய்திருக்கிறார்.

முதலில் தெளிவான ஹீரோயினாக களமிறங்கி என்ட்ரி கொடுத்த தான்யா ஹோப், கதை போக போக டம்பி ஹீரோயினாக படம் முழுக்க நம்ம வெறுப்படையை செய்துள்ளார்

காமெடியை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், செந்தில், வையாபுரி என நிறைய காமெடி நட்சத்திரப் பட்டாளம் இருந்தும் காமெடி என்னும் பெயரில் ரசிகர்களின் பொறுமையை பதம் பார்த்துள்ளனர்

தம்பி ராமையா காமெடி என்ற பெயரில் படம் முழுக்க ஆபாச கடி ஜோக்குகளை சொல்லவே இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளார்

ஏதே கோவை சரளா நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார். செந்திலுக்கு நல்ல காதாபாத்திரம் சொல்லி கொள்ளும்படி இல்லை இருந்தாலும் தம்பி ராமையா போல் நம் பொறுமையை பதம் பார்க்கவில்லை

மனோபாலா அவ்வபோது திரையில் வந்து ஆறுதல் படுத்துகிறார் ரசிகர்களுக்கு

காமெடி கதை பொய்களை அடிப்படையாக வைத்து காலம் கழிக்கும் நாயகன் என கதை அமைத்ததுடன் அதையே சாக்காக வைத்து

முகம் சுழிக்க வைக்கும் ஆபாச காமெடிகளையும் படம் முழுவதும் பேசி கொண்டே இருக்கிறார்கள்.

பொய், புரட்டு, ஃபோர்ஜெரி செய்யும் ஹீரோவாக படம் முழுவதும் வலம் வரும் சந்தானம், “விளம்பரத்தை ப்ரொமோட் செய்வதற்காக எத்தனை பொய் சொல்கிறோம், அதுபோல் நம் காதலை ப்ரொமோட் செய்ய பொய் சொன்னேன்” என சீரியஸ் வசனம் பேசுவதும் ரசிகர்களின் எரிச்சலை கிழப்பியுள்ளார் இயக்குனர்

நகை முரண். இசையமைப்பாளர் அர்ஜூன் ஜன்யாவின் இசை படத்தின் பெரும் ஆறுதல்.

சந்தானத்தின் மேல் இயக்குநர் பிரசாந்த்ராஜ்க்கு ஏன் இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை சும்ம வச்சு செஞ்சிருக்காரு

மொத்தத்தில் கிக் ரசிகர்களை ஏமாற்றும் பொய் திரைப்படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *