கலைஞர் டிவியில் கார்த்தியின் “சர்தார்” – ஆகஸ்ட் 13 சிறப்பு திரைப்படம்

Share the post

கலைஞர் டிவியில் கார்த்தியின் “சர்தார்” – ஆகஸ்ட் 13 சிறப்பு திரைப்படம்

கலைஞர் தொலைக்காட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கார்த்தி நடித்திருக்கும் “சர்தார்” சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது.

இரும்புத்திரை, ஹீரோ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “சர்தார்”. உளவுத்துறை அதிகாரி, போலீஸ் அதிகாரி என கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லைலா, சங்கி பாண்டே, முனிஸ் காந்த், யூகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

உளவாளியின் வாழ்க்கை, தண்ணீர் மாஃபியா என இரண்டு வித்தியாசமான கதைக்களத்தோடு விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவையும், ஜி.வி.பிரகாஷ் இசையையும் கவனித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *