JOHN WICK: CHAPTER 4

Share the post
J

Lionsgate & PVR Pictures வழங்கும்

JOHN WICK: CHAPTER 4

மிகப் பெரிய வெற்றியை அடைந்த ஜான் விக் படத்தொடர் வரிசையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘ஜான் விக்: சேப்டர் 4’ அமைந்துள்ளது. இப்படத்தின் நாயகனான Keanu Reeves, கூலிக்கு உயிரை எடுக்கும் கொலைகாரராக நடித்துள்ளார். இப்பட வரிசையில், நான்காவது படமாக வரும் சேப்டர் 4 இல், முந்தைய பாகங்களை விட அதிகமாக ஆயுதங்களும், ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களின் ஆக்ஷன் பசிக்கு நல்ல விருந்தாக அமையவுள்ளது. ஜான் விக் (2014) உலகளவில் $86 மில்லியனும், அதைத் தொடர்ந்து வந்த ஜான் விக்: அத்தியாயம் 2 (2017) இல் $171.5 மில்லயனும், ஜான் விக்: அத்தியாயம் 3 – Parabellum (2019) இல் $327.3 மில்லியனும் சம்பாதித்தன.  இது அத்தியாயம் 3 இன் தொடர்ச்சி.

கதைச்சுருக்கம்– செல்லுமிடமெங்கும் அதகளமான சாகசங்கள் புரிபவரான ஜான் விக் (கீனு ரீவ்ஸ்), இந்த நியோ-நோயர் த்ரில்லரில் மிகவும் கொடூரமான எதிரிகளை எதிர்கொள்கிறார். அவரது தலைக்கான விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஹை டேபிளுக்கு எதிரான போராட்டத்தில். நியூ யார்க் முதல் பாரிஸ், ஒசாகா, பெர்லின் வரை ரகசியமாக மறைந்து வாழும் சக்திவாய்ந்த நபர்களைத் தேடிச் செல்கிறார். பெர்லின், பாரிஸ், ஜப்பான் மற்றும் நியூயார்க் ஆகிய இடங்களில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில் ஐந்தாவது படமும் வர வாய்ப்புள்ளது.

CREDITS  

இயக்கம்: Chad Stahelski

நடிகர்கள்: Keanu Reeves, Donnie Yen, Bill Skarsgård, Laurence Fishburne, Hiroyuki Sanada, Shamier Anderson, Lance Reddick, Rina Sawayama, Scott Adkins, Clancy Brown, and Ian McShane

இசை: Tyler Bates/Joel J. Richard

Based on Characters Created by: Derek Kolstad

ஒளிப்பதிவு: Dan Laustsen  ; Edited by: Nathan Orloff

      வெளியீடு: Lionsgate & PVR Pictures in English, Tamil, Telugu & Hindi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *