ஜெயா டிவியின் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சி
ஜெயா டிவியில் வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று காலை 7:00 மணிக்கு சிறப்பு காலை மலர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான திரு.ராஜீவ் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு தன்னுடன் பணியாற்றிய சினிமா தொழிலாளர்கள் குறித்து தன் நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து, உழைக்கும் வர்க்கத்தை கெளரவிக்கும் வகையில் ‘உழைத்தாலே இனிக்கும்’ என்ற சிறப்பு பகுதி ஒளிபரப்பாகிறது.
உழைப்பாளர் தினத்தன்று காலை 9:00 மணிக்கு சிறப்பு தேன்கிண்ணம் நிகழ்ச்சியில் நடிகர் ரமேஷ்கண்ணா பங்கேற்று உழைப்பின் பெருமையை உணர்த்தும் தமிழ் சினிமா பாடல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

