ITC நிறுவனம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து சிறுதானியங்கள் குறித்த பிரத்யேக தபால்தலையை வெளியிட்டது

Share the post

ITC நிறுவனம், இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து சிறுதானியங்கள் குறித்த பிரத்யேக தபால்தலையை வெளியிட்டது

இது, சர்வதேச சிறுதானிய ஆண்டை நினைவுகூறும் வகையிலும், சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) குறித்த விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகும்.

~மேலும் இந்தியாவில் சிறுதானிய விவசாயம் மற்றும் நுகர்வு குறித்து பல்வேறு விஷயங்களை கற்பித்தல், அதிகாரமளித்தல் மற்றும் ஊக்குவிக்கு  ம் முயற்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது.~

சென்னை: இந்தியாவின் முன்னணி மல்டி பிசினஸ் நிறுவனங்களில் ஒன்றான ITC லிமிடெட், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையுடன் இணைந்து சிறப்பு தபால் தலை ஒன்றை டெல்லியில் இன்று வெளியிட்டது. சர்வதேச சிறுதானிய ஆண்டை நினைவுகூரும் ITC இன் மிஷன் மில்லட்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த பிரத்யேக தபால் தலை, ஸ்ரீ அன்னா மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நாடு தழுவிய முயற்சிகளைக் கொண்டாடுகிறது. புதுடெல்லியில், இந்த தபால்தலையை, அஞ்சல் துறையின் தலைமை அஞ்சல் மாஸ்டர் ஜெனரல் சுஷ்ரி மஞ்சு குமார் மற்றும் ITC லிமிடெட்டின் அக்ரி பிசினஸ் – குரூப் ஹெட் திரு எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி இன்று வெளியிட்டார். மாண்புமிகு பிரதமரால் வழிநடத்தப்படும் இயக்கமான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஹெல்ப் இந்தியா ஈட் பெட்டருக்கும் ITC தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.

தபால்தலைகள் உலகளவில் கவுரவத்தின் அடையாளமாக இருந்து வருகின்றன, அவை சாதித்த நபர்கள், சிறந்த தருணங்கள் மற்றும் மிகுந்த கலாச்சார மதிப்புடைய பிரசார இயக்கங்களை என்றென்றும் மறக்க முடியாததாக நினைவுகூற வைக்கின்றன. தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட ITC மிஷன் மில்லட்ஸ் தபால்தலையானது, சிறுதானியத்தை கொண்டுவதோடு, இந்தியாவில் சிறுதானிய விவசாயம் மற்றும் நுகர்வு குறித்து பல்வேறு விஷயங்களை கற்பித்தல், அதிகாரமளித்தல் மற்றும் ஊக்குவிப்பதற்கான ITC இன் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் குறிக்கிறது.

இந்த பிரத்யேகமான ITC மிஷன் மில்லட்ஸ் தபால்தலை விவசாயிகளின் குறிப்பிடத்தக்க பங்கை அங்கீகரிப்பதோடு, சத்தான உணவுப் பொருட்களுக்கான நிலையான விவசாயத்துடன், சுவையான சிறுதானிய சமையல், உணவுகளை ஒன்றிணைக்கிறது. மேலும் இது, ITC இன் அக்ரி பிசினஸ் டிவிஷன், ஃபுட்ஸ் பிசினஸ் டிவிஷன் மற்றும் ITC ஹோட்டல்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியை அங்கீகரிக்கக் கூடிய அடையாளமாகவும் உள்ளது. இது நிலையான சிறுதானிய விவசாயத்தை ஊக்குவித்து, நுகர்வோர் ஆரோக்கியமான சிறுதானியங்களின் சுவையைப் பெற உதவும். தற்போது, ITC அதன் அனைத்து உணவு வகைகளிலும் பாரம்பரிய மற்றும் நவீன வடிவங்களில் சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளது, இதில் ரெடி டு ஈட் உணவுப் பொருட்கள், குக்கீகள், நூடுல்ஸ், சேமியா, சாக்லேட், தின்பண்டங்கள் மற்றும் மல்டி மில்லட் மிக்ஸ் மற்றும் கேழ்வரகு மாவு போன்ற பிரதான உணவுகள் அடங்கும். இதுமட்டுமின்றி, ITC ஹோட்டல்கள் தங்கள் பஃபேக்களில் சிறுதானிய அடிப்படையிலான சிறப்பு உணவு வகைகளையும் தயாரித்து சேர்த்துள்ளது. விவசாய பண்ணைகளில் இருந்து ITC இன் உணவு உற்பத்தி கூடங்களுக்கு சிறுதானியங்கள் நேரடியாக கொண்டு வரப்படுவதையும், இறுதியில் ITC ஹோட்டல்களிலிருந்து சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்படும் சத்தான உணவுகளில் அவற்றை இணைப்பதையும் இந்த தபால்தலை பதிவு செய்கிறது. மேலும் மண்ணின் நிறத்தை பின்னணியாக கொண்ட சித்திரத்துடன் இணைந்து சிறுதானியத்தையும் அதன் எண்ணற்ற நன்மைகளையும் கொண்டாடுகிறது.

இதுதவிர இந்த நிகழ்வில், ITC தனது வரையறுக்கப்பட்ட டிஜிட்டல் சேகரிப்பு ஸ்டாம்புகள் மூலம் சிறுதானியங்கள் உட்கொள்ள நுகர்வோரை ஊக்குவிக்கும் திட்டத்தின் தொடக்கத்தையும் அறிமுகப்படுத்தியது. தபால் தலைகள் இன்று மகத்தான சேகரிப்பு பழக்கத்துடன் கூடிய பாரம்பரிய நினைவுகளின் ஒரு பகுதியாகும். இந்த டிஜிட்டல் ஸ்டாம்ப் மூலம், ITC தனது நுகர்வோர்கள் மத்தியில் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புகிறது. சிறுதானியங்களின் காலநிலை தாங்கும் பண்புகள் மற்றும் அதன் ஊட்டச்சத்து, அடர்த்தியான பண்புகள் ஆகியவை வளரும் நாடுகளில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய உதவக் கூடியதாகும். டிஜிட்டல் சேகரிப்பு ஸ்டாம்புகள், நுகர்வோர் தங்கள் அன்றாட உணவு மற்றும் சிற்றுண்டிகளில் சிறுதானியங்களை எடுத்துக் கொள்வதற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதியளிக்க உதவுகிறது. சிறுதானியங்களைப் பற்றி கற்பித்தல், விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சிறுதானிய நுகர்வை ஊக்குவித்தல் ஆகிய ITC இன் நோக்கத்தை அடைவதற்கான ஒரு படி முன்னோக்கியதாக, இந்த புதுமையான முயற்சி உள்ளது. எனவே நுகர்வார்கள், சிறுதானிய விரும்பிகளாக மாறவும், சிறுதானியங்களின் தீவிர ஆதரவாளராகவும் இருக்க www.betterwithmillets.com இணையதளத்தை பார்வையிடலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறுதானியங்களை முக்கிய உணவுப்பொருளாக கொண்டு வர ITC தனது மிஷன் மில்லட் திட்டத்தை தொடங்கியது. சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மையை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ள ITC, உணவு மற்றும் விருந்தோம்பல் துறையுடன் சிறுதானிய விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு தீவிரமாக கல்வி கற்பித்து அதிகாரமளித்துள்ளது. இதனால் நுகர்வோர் அன்றாட உணவின் ஒரு பகுதியாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்ள முடியும். ITCMAARS மூலம் சிறுதானிய விவசாயத்தில் எஃப்.பி.ஓ.க்களை ITC ஊக்குவித்து வருகிறது, இது ஒரு ஒருங்கிணைந்த ‘பைஜிட்டல்’ சுற்றுச்சூழல் அமைப்பாகும். இது நமது நூற்றாண்டு பழமையான விவசாயிகளின் விவசாய முறையுடன் டிஜிட்டல் முன்னேற்றங்களை ஒருங்கிணைக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ஐ.ஐ.எம்.ஆர்) இணைந்து மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் எங்கள் அக்ரி பிசினஸ் இரண்டு பிபிபி (அரசு மற்றும் தனியார் இணைந்த) திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

ஜூலை 25, 2023 அன்று நடந்த தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் திரு கைலாஷ் சவுத்ரி, சிறுதானிய உணவுகளை பிரபலப்படுத்த இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் தலைமையின் கீழ், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சர்வதேச சிறுதானிய ஆண்டு – 2023 ஐக் கொண்டாடுதல், ஜி 20 விவசாய அமைச்சர்கள் கூட்டத்தை (ஏஎம்எம்) நடத்துதல், ஹைதராபாத்தில் உள்ள ஐசிஏஆர்-ஐஐஎம்ஆரை சிறுதானியங்களுக்கான (ஸ்ரீ அன்னா) உலகளாவிய சிறப்பு மையமாக அறிவித்தல், ஏப்ரல் 2018 இல் சிறுதானியத்தை சத்தான தானியமாக அறிவித்து, அதனை போஷன் திட்டத்தில் சேர்த்தது போன்ற பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.

இந்திய அஞ்சல் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் சுனில் சர்மா கூறுகையில், “உலகளவில் தபால் தலைகள் நாடு முழுவதும் முற்போக்கான மாற்றத்தின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களைப் பிரதிபலிக்கின்றன. ITC லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிடப்பட்ட இந்த தபால்தலை, தேசிய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் உலகின் சூப்பர்ஃபுட் ஆன சிறுதானியங்களை மீட்டெடுப்பதற்கான பயணத்தில் குறிப்பிட்டத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இது ஒரு முக்கியமான நிகழ்வு மற்றும் தேசத்தின் கூட்டு முயற்சியை இணைக்கிறது’’ என்றார்.

தொடக்க விழாவில், ITC Limited இன் அக்ரி பிசினஸ், குரூப் ஹெட் திரு. எஸ்.சிவக்குமார் பேசுகையில், ‘‘சிறுதானியங்களை பிரதானப்படுத்துவதில் அரசின் முயற்சியை ஆதரிக்கும் வகையில், ITC மிஷன் மில்லட் என்ற பிரத்யேக திட்டத்தை ITC முன்னெடுத்துள்ளது, இது 3 முக்கிய உத்திகளுடன் செயல்படுத்தப்படுகிறது. அவை, புதிய தயாரிப்புகளின் ஆதரவுடன் ‘குட் ஃபார் யு’ உணவு போர்ட்ஃபோலியோவை உருவாக்குதல், சிறப்பு கவனம் செலுத்தி வலுவான சிறுதானிய வேளாண் விநியோக சங்கிலியை உருவாக்குவதன் மூலம் நிலையான விவசாய முறைகளை செயல்படுத்துதல், சந்தை இணைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். ஊட்டச்சத்து நிறைந்த உணவான சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்திய அஞ்சல் துறையுடன் இணைந்து வெளியிடப்பட்ட மதிப்புமிக்க இந்த தபால் தலை, விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ITC இன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் சிறுதானியங்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு விருப்பத்தை நினைவூட்டுகிறது’’ என்றார்.

ITC இன் மிஷன் மில்லட் பற்றி:

‘ஹெல்ப் இந்தியா ஈட் பெட்டர்’ என்ற உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ITC லிமிடெட் ஜனவரி 2023 இல் சிறுதானியங்களை பிரதானப்படுத்தவும், அவற்றின் சிறந்த ஊட்டச்சத்து மதிப்பை அங்கீகரிக்கவும், எந்த தட்பவெப்ப நிலையிலும் உண்ணக்கூடிய தன்மைக்காகவும் அவற்றை தனது பிராண்ட் தயாரிப்புகளில் ஒருங்கிணைக்க மிஷன் மில்லட் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

ITC இன் அக்ரி பிசினஸ் ஆனது, விவசாயிகள், பயிர் வளர்போர் மற்றும் இறுதி நுகர்வோரிடையே சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதில் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வருகிறது. ITC அதன் தற்போதைய இ-சவுபால் மற்றும் எஃப்.பி.ஓக்கள் உள்ளிட்ட பிற விவசாய நெட்வொர்க்குடன், சிறுதானியங்கள் உட்பட பல்வேறு பயிர் மதிப்பு விநியோக சங்கிலிகளில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

Sunfeast Farmlite மில்லட் பிஸ்கட்டுகள் மற்றும் Aashirvaad ராகி மற்றும் மல்டி-மில்லட் மாவு ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் ITC Foods அதன் தயாரிப்பு வரம்பை பன்முகப்படுத்தி உள்ளது. கூடுதலாக, நூடுல்ஸ், பாஸ்தா, சேமியா, சாக்கோ ஸ்டிக் மற்றும் பல சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. சிறுதானியங்களை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்ற, ITC Foods ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட உணவுப் பொருட்கள், அதன் கிளவுட் சமையலறைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுதானிய அடிப்படையிலான உணவு மற்றும் சிறுதானிய சமையல் சுவைகளை வழங்குகிறது, இவை அனைத்தும் ITC ஹோட்டல்களின் சமையல் நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டவை.

மேலும் சிறுதானியங்கள் மீதான கவனமானது, ITC ஹோட்டல்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் சத்தான, சுவையான உணவுகளை விருந்தினர்களின் சுவைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை எடுத்துக்காட்டுகிறது. ITC இன்ற சமையல் நிபுணர்கள் சிறுதானியங்களின் சுவையை அனைவரும் ருசிக்கும் வகையில் தனிநபர்களை ஊக்குவிக்க சிறுதானியங்களை கொண்டு எளிதான சமையல் குறிப்புகளை உருவாக்குகிறார்கள்.

எந்தவொரு பத்திரிகை கேள்விக்கும், பின்வருவனவற்றை அணுகவும்:

Avian WE: Nilanjan Mandal – nilanjanm@avianwe.com | 9088502687

ITC Limited: Debolina Palit – Debolina.Palit@itc.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *