

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஷரஃபுதீன் – சங்கீத் பிரதாப் நடித்த ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ட்ரீமிங் வெளியீட்டின் முதல் வாரத்திலேயே இப்படம் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்துள்ளது.
மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் மனோரமாமேக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு, பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடைந்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஷியாமின் கிரீஷ் இயக்கியுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் நகைச்சுவையையும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டுள்ளது. சங்கீத் பிரதாப் அறிமுக நாயகனாக நடித்துள்ளார். இதில் ஷரஃபுதீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கோமா நிலையில் இருந்து மீண்டு வரும் ரூபின் (சங்கீத் பிரதாப்), தொலைவில் ஒலிக்கும் சத்தங்களையும் உரையாடல்களையும் கேட்கும் அபூர்வமான திறனைப் பெறுகிறார். இதற்கிடையில், நட்பான காவல் அதிகாரியான சூரஜை (ஷரஃபுதீன்) அவர் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு எதிர்பாராத பல சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது. நகைச்சுவையும் பரபரப்பும் கலந்த இந்தக் கதை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும்.
‘பிரேமலு’ திரைப்படத்தில் அமல் டேவிஸ் கதாபாத்திரத்திலும், ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தில் ஜோயல் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்த சங்கீத் பிரதாப், இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷரஃபுதீன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அகிலா பார்கவன், பார்வதி ஆர். கிருஷ்ணா, கோட்டயம் நசீர், ஆனந்த் மன்மதன் மற்றும் கிரண் பீதாம்பரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கரிக்கு நிறுவனத்துடனான தொடர்புக்காக அறியப்படும் நிலீன் சாண்ட்ரா, இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். டாக்டர் பால் வர்கீஸ் மற்றும் சுஜித் ஜே. நாயர் ஆகியோர் டாக்டர் பால்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ட்ரீம் பிக் ஃபிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
அகில் சேவியர் ஒளிப்பதிவையும், ராகேஷ் செருமடம் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, நிக்சன் ஜார்ஜ் ஒலி வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மனோரமாமேக்ஸ் தளத்தில் 500க்கும் மேற்பட்ட வெற்றித் திரைப்படங்கள், 20,000 மணி நேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்கள் மற்றும் மழவில் மனோரமா, மனோரமா நியூஸ் ஆகியவற்றின் பிரத்யேக நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
வித்தியாசமான கதைக்களம், நகைச்சுவைக் காட்சிகள் எனப் பல சிறப்பம்சங்களுடன் ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சினிமா அனுபவத்தை தருகிறது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஓடிடி தளத்திலும் வலுவான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ள இப்படம், தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் ஆகிறது.
