
” ஐ ஆம் கேம் “- என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தமிழில் தலைப்புக்காப் பஞ்சம்.ஏன் தான் ஆங்கிலத்தில் தலைப்பு வைத்து இப்படி சித்திரவதை செய்கின்றார்களோ ?
கதைச் சுருக்கம் :-
பணக்காரன் மகா பணக்காரன் குடும்பத்தில் பிறந்த கதாநாயகன் துல்கர் சல்மான் டான் ஜான் என்னும் கதாப் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கின்றார்.
தந்தையின் விருப்பப்படி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் துல்கர் சல்மான்
நிறுவனத்தில் கவனம் செலுத்தாமல் சூதாட்டத்திற்கு அடிமையாகி இதனால் பணத்தை எல்லாம் இழந்து கடனாளியாகின்றார் துல்கர் சல்மான்.
கிரிக்கெட் மீது மிகுந்த ஈடுபாடு விக்னேஷ் என்கிற விக்கி தாஸ் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஆண்டனி வர்க்கீஸ்ஸூக்கு.
எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு விபத்திற்கு பிறகு ஏற்படும் ஒரு வினோதனமான நிகழ்வினால் துல்கர் சல்மான் , ஆண்டனி வர்கீஸ் இவர்களின் வாழ்க்கையும் தற்செயலாய் பின்னப்படுகிறது…
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்களின் வாழ்க்கைப் பாதையில் எத்தனை எத்தனை குழப்பங்கள் ! அந்தக் குழப்பத்தில் இருந்து இவர்கள் தெளிவு பெறுகிறார்களா ? என்பதை விளக்குவதே இப்படத்தின் கதை !
ஆலிவுட்டில் பன்முறை சோதனைக்கு உட்பட்ட கதைக்களம் ஒன்றை வெள்ளித் திரைக்கு ஏற்ற வகையில் திரைக்கதை அமைந்திருப்பது அருமை !
கதை நாயகனுக்கு விபத்து ஒன்று நடக்கின்றது அது வரை படம் நத்தையாக மெல்ல நகர்கிறது. அதன்பிறகு பாடி ஹாரர் ஜானருக்குள் நுழைகிறது. தன் கை தன் கட்டுப்பாட்டை ஒரு கட்டத்தில் மீறுகிறது கதை நாயகனுக்கு ! அதனால் அவன் சந்திக்கும் பின் விளைவுகள் தொடர்பான காட்சி அமைப்புகள் சபாஷ் போட வைக்கிறது.
முற் பகுதி கலகலப்பாகவும் , விறு விறுப்பாகவும் , பார்ப்பவர்களின் மனத்தினை கொள்ளையடிக்கும் விதமாக காட்சிகளை கோர்வையாக்கி மெய்சிலிர்க்க வைத்தது திரைக்கதை. நல்ல முறையில் திரைக்கதையை கையாண்ட இயக்குநர் பிற்பகுதியில் ஏன் கோட்டை விட்டார் என்பது தான் புரியவில்லை. கதை முழுக்க கவனம் செலுத்தி ஈர்பாகவும் ,கலகலப்பாகவும் கொண்டு போய் இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒரு நல்ல இயக்குநர் நல்ல நல்ல புத்தகங்களை வாசிக்கும் திறனும் , நல்ல நல்ல படங்களைத் திறனும் இருந்தால் போதும். பொறித் தட்டும். அந்த உத்தியை தன் படத்தில் கையாண்டால் அவரை யாராலும் வெல்ல முடியாது. பார்வையாளர்களின் நாடித் துடிப்பைக் கண்டு பிடித்து அதன்படி இயக்கினால் நல்ல இயக்குநரே !
குறைகள் :-
சூதாட்டத்தால் ஏற்பட்ட விளைவுகளை விவரித்திருக்கலாம் இரண்டொரு வசனத்தால் முடக்கி இருப்பது மனத்தை நெருடுகிறது.
காதல் காட்சியில் துல்கர் சல்மான் – காயாடு இவர்களின் நடிப்பு ஒட்டவில்லை.
சுவாரசியமான கதையை கையில் எடுத்துக் கொண்டு தகுந்த முறையில் எடுக்காமல் பல இடங்களில் ஓட்டைகள் … அதனை அடைக்க மறந்து விட்டார் இயக்குநர். படம் சுமார் தான்.
திரை நட்சத்திரங்கள் :-
டான் ஜானாக துல்கர் சல்மான்.
ஈஷாவாக கயாடு லோஹர்
டேவிட் ஆபிரகாம்மாக மிஷ்கின்
தாரணியாக சம்யுக்தா விஸ்வநாதன்
விக்னேஷ்ஷாக ஆண்டனி வர்கீஸ்
ஃப்ரெட்டியாக வினய் ஃபோர்ட்
ஜேசன் ஆண்டனியாக கதிர் நடிப்பு பட்டாளம் ஏராளம் நல்ல முறையில் இவர்களை பயன்படுத்தியிருக்கலாம்
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- நவாஸ் ஹிதாயத்
கதையும் இவரே.
திரைக்கதை :- சஜீர் பாபா , பிலால் மொய்து , இஸ்மாயில் அபூபக்கர்
ஒளிப்பதிவாளர் :- ஜிம்ஷி காலித்
படத்தொகுப்பு :-சாமன் சாக்கோ
இசை :- ஜேக்ஸ் பிஜாய்
நடனம் :- சாண்டி
ஐயாம் கேம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் நல்ல கதையைத் தேர்ந்தெடுத்த இவர்களுக்கு மக்களிடையே கொண்டு சேர்க்கத் தெரியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று ஆய்வு செய்ததில் படம் சுமார் தான். மறுமுறை சந்திக்கும் வரை விடைபெறுவது கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ஓகே டேக் ராஜேஷ்