








” ஹாய் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-‘
சென்னையில் ஒரே கட்டிடத்தில் நயன்தாராவும் மென்பொருள் ஊழியரும் ஆன கெவினும் வசித்து வருகின்றனர்.
இவர்களின் நட்பு வாழ்த்துகள் மூலம் தொடங்குகிறது. நிலையான வேலை கைநிறைய சம்பளம் கெவினுக்கு. எனவே திருமணம் செய்து கொள்ள முடிவு பண்ணுகிறார்.
தான் நேரில் சந்தித்த அழகு தேவதை நயன்தாராவைப் போல தனக்கும் ஒரு பெண் கிடைக்க வேண்டும் என நினைக்கும் கெவினுக்கு உண்மையிலேயே நயன்தாராவே காதலியாகக் கிடைக்கிறார் . ஆம் இவர்களுக்குள் விழியில் தொடங்கி இதயத்தில் முடிகிற காதல் மலர்கிறதா ? காதலில் என்ன என்ன திருப்பங்கள் நிகழ்ந்தன ? கெவின் தன் காதலை வெளிப்படுத்தினாரா ? நயன்தாரா கெவினின் காதலை ஏற்றுக் கொண்டாரா ? இவர்களின் காதலுக்கு தடையேதும் உண்டா ? இப்படி சுவாரசியமான கதைத் திருப்பத்தினை நமக்கு படம் போட்டுக் காட்டப்படும் திரைப்படம் தான் ” ஹாய் ” என்னும் திரைப்படம்.
இப் படத்தின் தலைப்பே மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை ” ஹாய் ” இதனையே தலைப்பாக படத்திற்கு வைத்திருப்பது மனத்திற்கு உற்சாகம் கூத்தாடுகிறது.
இந்தப் படம் காலச் சூழல்களில் காதலர்களின் எண்ண அலைகள் அலைமோதும் ஏற்படும் போது இன்ப உணர்வு மனத்தையும் உணர்ச்சி உடலையும் தீண்டும் போது அம்மம்மா நினைக்கும் போதே கிளு கிளுப்பு உண்டாகிறது. மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்டு உணர்வு பூர்வமான நல்ல கதை அம்சம் கொண்ட கதை என படம் பார்த்தவர்களுக்கு இது புரியும். திரைப்படத் தணிக்கைக்கு வழக்கம் போல அனுப்பி தணிக்கை சான்று பெறுவதைப் போல இந்தப் படத்தையும் தணிக்கைக்கு அனுப்பி அணு அணுவாக தணிக்கை அதிகாரிகள் இரசித்துப் பார்த்து தணிக்கைச் சான்று வழங்கியது பெருமைக்குரியது .
இது ஒரு காதல் கதை ! இது ஒரு பாசம் மிகுந்த குடும்பக் கதை !
மனத்தினை மயில் இறகால் வருடுவதைப் போல இதமான காட்சிகள் மனத்திற்கு இனிமையைத் தருகின்றன.
நயன்தாரா என்றும் அழகு தேவதை தான் ! இவரின் அழகு மனத்தை மயக்கும் ! இவரின் நடிப்பு முதிர்ச்சியைக் காட்டும் ! இவருக்கும் கெவினுக்கும் உண்டான வேதியல் மாற்றம் இப்படத்திற்கு தனிச் சிறப்பைக் கூட்டும்.
இயக்குநரின் பார்வை கூர்மை ! படமாக்கும் விதம் இப் படத்திற்கு கூடுதல் பலம். தரம் வாய்ந்த தரமான படம். காதல் உணர்வுகளை மயிலிறகாய் மனத்தை மெல்ல வருடும் காதலின் புனிதத் தன்மையை அது வெளிப்படுத்தும்.
திரை நட்சத்திரங்கள் :-
நயன்தாரா – தேவயானி
கெவின் – மயில்சாமி
ராதிகா சரத்குமார் – பரிமளா
பாக்கியராஜ்.கே – வாத்தியார்
பிரபு – இந்திரன்
அம்ருதா சீனிவாசன் – லக்ஸ்
வி.டி.வி கணேஷ் – மருத்துவர் சண்முகி
ஃபெப்சி விஜயன் – பரிசுத்தம்
ரெஞ்சி பணிக்கர் – தாசன்
சத்யன் – யோகேந்திரன்.
ஆதித்ய கதிர் – கணபதி
குரேஷி – கோபி
காவியா அறிவுமணி – மைதிலி
மிர்ச்சி கெமி ; தன்யா
நடிகர் நடிகையர் பட்டாளம் இப்படத்தில் ஏராளம்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
எழுத்து & இயக்கம் :-
விஷணு எடவன்
தயாரிப்பு :- எஸ்.எஸ். லலித் குமார் ,
விக்னேஷ் சிவன் ,
நயன்தாரா , உமேஷ் குமார்
ஒளிப்பதிவு :- ராஜேஷ் சுக்லா
எடிட்டர் :- பிலோமின் ராஜ்
இசை :- ஜென் மார்ட்டின்
கலை :- கண்ணன்.எஸ்.
நடனம் :- பிருந்தா
மக்கள் தொடர்பு :- யுவராஜ்
” ஹாய் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் காதலின் புனித தன்மையை உணர்வு பூர்வமாக மதித்து வெற்றிக் காணும் இதமான காதல் கதை. நடிப்பு பட்டாளம் ஏராளம். அவர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்விஷ்ணு எடவன். இவரைப் பாராட்டலாம். எங்கள் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று ஆய்ந்து தோய்ந்து நல்லதொரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் இன்னொரு திரை விமர்சனத்தில் அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ஓகே டேக் ராஜேஷ்