ஹேய் அர்ஜுனன்)ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

Share the post

THE CHOSEN ONE PTE LTD (சிங்கப்பூர்)
ப்ரொடக்ஷன்
நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம்

(ஹேய் அர்ஜுனன்)
ட்ரெய்லர் வெளியீட்டு விழா… தொகுப்பு ராஜேஷ்.

ஃபேண்டஸி
கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த

படத்தை முகமது ஜார்ஜிஸ்
இயக்கி உள்ளார்.

முழுக்க புது முகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் முக்கியமான

ஒரு குண சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த

படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது.

இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் கூல் சுரேஷ் இதில் கலந்து கொண்டு படத்தை
பார்த்து விட்டு

ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார். விழாவில் கூல் சுரேஷ் பேசும்போது காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் எப்படி இருப்பாரோ அந்த மாதிரியே

இருக்கிறார் ஹீரோ கௌதம், நகுல் மாதிரி உருகி உருகி காதலிக்கிறார்.

கதாநாயகி பூஜா நிறையவே அழுகிறார்கள், அழுகை,

அதுவும் ஒரு அழகு தானே நான் ஒரு விழாவில் ஒரு

பொண்ணுக்கு மாலை அணிவித்து மிகப் பெரிய பிரச்சனையாகி விட்டது. இனிமே அது நடக்காது இந்த

நாயகியின் நடிப்பை பாராட்டி நான் சால்வை அணிவிக்கிறேன்.

இயக்குனர் ஜார்ஜிஸ் தமன் மாதிரியே இருக்கிறார். இந்த சின்ன குழுவை மதித்து

எந்த ஈகோவும் பார்க்காமல் வாழ்த்த வந்திருக்கிறார்

இயக்குனர் லிங்குசாமி. அவரின் இந்த ஒரு குணத்தால் தான் அவர் எப்போதும் பெரிய

மனிதராகவே இருக்கிறார் என்றார், கூல் சுரேஷ். இயக்குனர்

லிங்குசாமி பேசும்போது:-

ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களாக சிலர் இருப்பார். தியேட்டர் வாசலில் விமர்சனம் சொல்லுவது ஒரு கலை.

அதில் பெரிய பெயரை வாங்கி இருக்கிறார் கூல் சுரேஷ். இந்த

படத்தில் சிறப்பு காட்சிக்கு நான் வர காரணம் என் நண்பன்

அபு கரீம் இஸ்மாயில். எனது சண்டைக்கோழி 2 வில் ஒரு கதாபாத்திரம் கொடுத்தேன். அவர்

இன்னும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பெரிய நடிகராக வர வேண்டும், என்பது

என் ஆசை. நானும் அவருக்கு என் படங்களில் நல்ல

கதாபாத்திரங்களை கொடுப்பேன். ஹேய் அர்ஜுன் ஒரு புது டீம் என்ன

பண்ணிருப்பாங்களோனு தான் வந்தேன். ஆனா, நல்லா பண்ணி இருக்காங்க. அந்த

மாயாஜால கல் வந்த உடனே மின்னல் முரளி போல ஒரு ஆசான் எல்லாம் வருமோ என்று நினைத்தேன். ஆனா அதை காதல் படமாக
கொண்டு எடுத்திருக்கிறார்.

இயக்குனர் ஜார்ஜிஸ். இதை ஒரு முழு நீள படமாக எடுக்கலாம்.

சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இன்னும் கொஞ்சம் உழைப்பை போட்டால் இந்த

குழுவால் மிக சிறந்த படங்களை தர முடியும். நான் என் முதல் படம் ஆனந்தம் இயக்கிய பிறகு அதேபோல

அடுத்த படமும் இயக்கக் கூடாது என்பதால் தான் ரன் படத்தை இயக்கினேன்.

ஒவ்வொரு படமும் முந்தைய படங்களைப் போல இருக்கக் கூடாது’. என்பதால் எல்லா

ஜானர் படங்களையும் முயற்சித்து வருகிறேன்.

ஹாலிவுட் டில்
Pretty women road home roman holiday ,
போன்ற படங்களை

இயக்க ஆசை ஆனால் அக்சன் படங்களை விட்டு இப்போதைக்கு வேறு படங்களை இயக்க
முடியாது. ஆக்ஷன்

இல்லாமல் படங்களை இயக்க மாட்டேன் என்றார் இயக்குனர் லிங்குசாமி.

ஹேய்‌‌ அர்ஜுன் ஃபேண்டஸி கலந்து
புதுவிதமான காதல் படைப்பு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *