உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது

Share the post

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்துதிரைப்படம் ஒளிபரப்பாகிறது

நகைச்சுவையும்பழிவாங்கலும் இணைந்த கதைக்கருவைக் கொண்ட  இத்திரைப்படத்தை  மார்ச் 20 ஞாயிறன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம்

சென்னைமார்ச் 18, 2022 :   உள்குத்து திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது.  உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது. பழிவாங்கல், டிராமா மற்றும் நகைச்சுவை கலந்த இக்கதையைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். 

கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து திரைப்படம், பொழுதுபோக்கு அம்சத்துடன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது.  நடிகர் பால சரவணன் நகைச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை சாயா சிங், சண்டைப்பயிற்சி இயக்குனரும், நடிகருமான திலீப் சுப்பராயன், நடிகர் சரத் லோஹித்அஷ்வா மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர்.

அமைதியும், அழகும் ததும்பும் கடற்கரை நகரத்தைப் பின்புலமாக கொண்ட ‘உள்குத்து’, திரைப்படமானது, தனது சகோதரியின் மரணத்திற்கு பழிதீர்ப்பதற்காக மக்கள் பெரிதும் அஞ்சுகின்ற கந்துவட்டி தாதாக்களான காக்கா மணி (சரத் லோஹித்அஷ்வா நடிப்பில்மற்றும் அவரது மகன் சரவணன் (திலீப் சுப்பராயன் நடிப்பில்ஆகியோரை தேடி அலைகின்ற ராஜா என்ற இளைஞனைச் (நடிகர் தினேஷ் நடிப்பில்) இக்கதை சுற்றி நகர்கிறது.  இந்த தேடலின்போது மீன்பிடிப்பு கிராமத்தில் சுறா சங்கர் (பால சரவணன் நடிப்பில்) என்பவரோடு அவரின் நட்பு வளர்கிறது.  அவரது சகோதரியான கடலரசியை (நந்திதா சுவேதா நடிப்பில்) திருமணம் செய்து கொள்ளுமாறு சுறா சங்கர் விரும்புகின்ற நிலையில் திரைக்கதை அதிரடி திருப்பத்தை எதிர்கொள்கிறது.  சரவணனை தாக்கி, அவனை அவமானத்திற்கு ஆளாக்கும் நிலைக்கு ராஜா தள்ளப்படுகிறார்.  இந்த மோசமான தாதாக்களின் பிடியிலிருந்து ராஜாவால் விடுபட முடிந்ததா? தனது சகோதரியின் மரணத்திற்கு ராஜா பழிவாங்குவானா? முடிவு என்னவாகிறது என்று அறிய ‘உள்குத்து’ திரைப்படத்தை கண்டு ரசியுங்கள்.

உலகளவில் சின்னத்திரையில் முதன் முறையாக இத்திரைப்படம் ஒளிப்பரப்பாவது குறித்து இதன் இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி.   பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது.  இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிகச் சரியாகப் பொருந்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் தினேஷ் பேசுகையில், “எனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில், இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் வேறுபட்டு தனித்துவமானதாக இருப்பதால், முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை இது எனக்குத் தந்தது.  ரகசியமான திட்டங்களையும், பல்வேறு மறைவான விஷயங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு மாஸ் ஹீரோவாக இத்திரைப்படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது.  கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டின் பிரபல சேனலில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுவதால், தங்களது குடும்பதோடு சேர்ந்து அமர்ந்து வாய்விட்டு சிரிப்பதோடு, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டு தங்களது இருக்கையின் முனைக்கே பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார்.

இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டு ரசிக்க 2022 மார்ச் 20 ஞாயிறு மாலை 5:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியைப் பாருங்கள்.  அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1515), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான் D2H (CHN NO 553) ஆகிய அனைத்து டிடீஹெச் தளங்களிலும் கலர்ஸ் தமிழ் அலைவரிசை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

கலர்ஸ் தமிழ் குறித்து2018 பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட கலர்ஸ் தமிழ், வயாகாம்18 குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய, குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற, உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான, வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். “இனி தினம் தினம் கலர் காட்டும்” என்ற புதிய விளம்பர விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், வழக்கமான ஸ்டீரியோடைப்களை நொறுக்கி, கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்துவதிலும், முற்போக்கான கருத்தாக்கங்களை அதிக தாக்கம் ஏற்படுத்துகிற நவீன நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை சென்றடைவது மீது முனைப்பு காட்டி வருகிறது. வேலுநாச்சி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை,. டான்ஸ் Vs டான்ஸ், கலர்ஸ் காமெடி நைட்ஸ், சிங்கிங் ஸ்டார்ஸ், ஓவியா, வந்தாள் ஸ்ரீதேவி, பேரழகி, மற்றும் திருமணம், தறி,  மலர், கல்லா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *