ஃப்ளாக் திரைவிமர்சனம் :-

Share the post

ஃப்ளாக் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
கொடி. தேசிய உணர்வை நம் நெஞ்சில் ஏற்றும் நெகிழ்ச்சி நெடிய பயணம்.

ஃப்ளாக் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
கொடி. தேசிய உணர்வை நம் நெஞ்சில் ஏற்றும் நெகிழ்ச்சி நெடிய பயணம்

கதையும் கதையின் போக்கும் :-

தேசிய கொடி ஒரு நாட்டின் அடையாளம். அதுமட்டுமல்ல அதன் பெருமையை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளவும் , தெரிந்து கொள்ளவும் ஏதுவாக அமைந்திருக்கும் இந்தத் திரைப்படம் சிறுவன் ஒருவனின் இலட்சியக் கனவின் வழியாக நம் மனக் கண் முன் நிறுத்துகின்றார் இப் படத்தின் இயக்குநர்.

இளம் வயதில் தாயின் அரவணைப்பும் இல்லாமல் தந்தையின் அன்பையும் பெறாமல் தவிக்கும் இந்தப் படத்தில் வரும் சிறுவன் தீஹானுக்கு உலகமே அவனுடைய தாத்தா தான். எல்லோருக்கும் இருக்கும் ஆசை இந்தத் தாத்தாவுக்கும் உண்டு. சொத்து ,சுகம், சொந்த பந்தம் என்ற ஆசைகளா ? இல்லை இல்லை . பிறகு வேறு என்ன ஆசை ? ஒரே ஒருமுறை இந்தியாவின் தலை நகராம் டெல்லி. டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று குடியரசு தலைவர் ஏற்றும் தேசியக் கொடியை நேரில் காண வேண்டும் என்ற ஆசை தான் அந்தத் தாத்தாவிற்கு .

வயது மூப்பின் காரணமாக தள்ளாமை ஏற்பட்டு , உடல் நலக் குறைவால் நலிவுற்று தன்னுடைய கடைசி ஆசை அந்தத் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும். மனம் விரும்பினாலும் உடல் ஏற்கும் நிலையில் இல்லாமையால் கஷ்டப் படும் அந்தத் தாத்தா . தன்னுடைய எண்ணத்தை , ஆசையை பெயரினிடம் சொல்லுகின்றார். அதனை தொடங்கும் முன்னமே தாத்தாவின் அந்திமக் காலம் முடிய , தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அந்தச் சிறுவன் டெல்லிக்கு தனிமையாக போக எத்தனைக்க முடிவில் பயணத்தை தொடங்குகிறான் டெல்லியை நோக்கி.

அந்தச் சிறுவன் மேற்கொள்ளும் பயணம் என்ற சிறிய புள்ளி படிப்படியாக இந்தியாவின் விரிந்த பரந்த நிலப் பரப்பையும் , பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களும் , அந்தந்த மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அறிமுகம் செய்யும் இந்தத் திரைப்படத்தின் திரைப்பயணம் விரைவாக விரிகிறது.

இந்தப் படத்தின் கதை நாயகன் சிறுவன் என்றாலும் உண்மையான கதாநாயகன் அந்தத் தேசிய கொடிதான்.

தேசப்பற்று , நாட்டுப்பற்று என்று சொன்ன உடனே நமக்கு நினைவுக்கு வருவது இராணுவம் , எல்லைப் பாதுகாப்பு வீரர்களின் தியாகம் என்று பல் வேறு கோணங்களில் திரைப்படங்கள் பல வந்த பொழுதும் இந்தத் திரைப்படம் தான் மூவர்ணக் கொடியையே மையமாக வைத்து அதன் பின்னணியில் சிறுவன் ஒருவனின் இலட்சியக் கனவையும் அதன் உணர்வுகளையும் இணைந்திருப்பது இந்தப் படத்தின் தனித்துவமான அம்சம்.

இந்திய தேசியக் கொடி தயாரிக்கபடும் மாநிலம் கர்நாடகம் .அதில் அடங்கிய ஹூப்ளி அதன் அருகில் உள்ள பெங்கேரி கிராமத்தையும் , அங்குள்ள காதி கிராமோத்யோகாவின் செயல்பாடுகளையும் திரையில் பதிவு செய்து இருப்பது அரிய முயற்சி தான். அதனை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நாம் தினமும் பெருமையுடன் ஏற்றிப் போற்றும் தேசியக் கொடிக்குப் பின்னால் இருக்கும் உழைப்பையும் அதன் தயாரிப்பு முறையையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்தப் படம் வழங்கியிருப்பது நாம் பெருமைப் பட வேண்டிய விஷயங்களில் ஒன்று

ஃப்ளாக் – தேசிய உணர்வை நெஞ்சில் ஏற்றும் நெகிழ்ச்சிப் பயணம்!
சில திரைப்படங்கள் பொழுதுபோக்கைத் தருகின்றன… சில திரைப்படங்கள் மனதில் சிந்தனையை விதைக்கின்றன. ஆனால், ஒரு நாட்டின் அடையாளத்தையும், அதன் பெருமையையும், ஒரு சிறுவனின் கனவின் வழியாக நம் கண்முன் விரித்துக் காட்டும் திரைப்படங்கள் அரிது. அந்த வகையில் பாராட்டுக்குரிய முயற்சியாக வந்திருக்கிறது இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கரின் ‘ஃப்ளாக்’.

தாய், தந்தையை இழந்த சிறுவன் தீஹானுக்கு உலகமே அவனது தாத்தாதான். அன்பையும் அரவணைப்பையும் கொடுத்து வளர்க்கும் தாத்தாவுக்கு ஒரு தீராத ஆசை. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஏற்றும் தேசியக் கொடியை நேரில் காண வேண்டும் என்பதுதான் அந்த ஆசை. எதிர்பாராத விதமாக தாத்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட, அவரது கனவை நனவாக்கும் பொறுப்பைத் தனது சிறிய தோள்களில் சுமந்து கொண்டு தனியாக டெல்லியை நோக்கிப் பயணிக்கிறான் சிறுவன்.

ஒரு சிறுவனின் பயணம் என்ற எளிய புள்ளியில் தொடங்கும் கதை, படிப்படியாக இந்தியாவின் பரந்த நிலப்பரப்பையும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களையும், மக்களின் வாழ்வியலையும் அறிமுகப்படுத்தும் அழகான திரைப்பயணமாக விரிகிறது.

கதாநாயகன் ஒரு சிறுவன்… ஆனால் கதையின் உண்மையான நாயகன் தேசியக் கொடி!

பொதுவாக தேசப்பற்று என்றாலே ராணுவம், எல்லைப் பாதுகாப்பு, வீரர்களின் தியாகம் என்று பல்வேறு கோணங்களில் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. ஆனால், இந்தியாவின் மூவர்ணக் கொடியையே கதையின் மையமாக வைத்து, அதன் பின்னணியில் ஒரு சிறுவனின் லட்சியத்தையும் உணர்வுகளையும் இணைத்திருப்பது இந்தப் படத்தின் தனித்துவமான அம்சம்.

பெங்கேரி கிராமத்தையும், அங்குள்ள காதி கிராமோத்யோகத்தின் செயல்பாடுகளையும் திரையில் பதிவு செய்திருப்பது பாராட்ட வேண்டிய முயற்சி. நாம் தினமும் பெருமையுடன் ஏற்றிப் போற்றும் தேசியக் கொடியின் பின்னால் இருக்கும் உழைப்பையும் அதன் தயாரிப்பு முறையையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்தப் படம் வழங்குகிறது.

இந்தியா ஒரு தேசம் மட்டுமல்ல… பல வண்ணங்களால் இணைக்கப்பட்ட அழகிய ஓவியம்!

தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரையிலான இந்தியாவின் பன்முகத்தன்மையைத் திரையில் கொண்டுவர இயக்குநர் எடுத்திருக்கும் முயற்சி கவனிக்க வைக்கிறது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களின் இயற்கை அழகும், முக்கியமான சுற்றுலாத் தலங்களும் கதையோடு பயணிக்கின்றன.

தாஜ்மஹால், திருவள்ளுவர் சிலை, சர்தார் வல்லபாய் படேல் சிலை என இந்தியாவின் பெருமையைப் பறைசாற்றும் அடையாளங்கள் திரையில் தோன்றும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தாண்டி இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் அனுபவம் கிடைக்கிறது.

ஒரு சிறுவனின் பயணத்தை இத்தனை பெரிய நிலப்பரப்புடன் இணைத்து, அதற்கேற்ற காட்சிகளையும் படமாக்கியிருப்பது இயக்குநரின் திட்டமிடலையும் உழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் பயணம்!

டெல்லியை நோக்கிப் புறப்படும் சிறுவனுக்கு வழியில் என்னென்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத வகையில் திரைக்கதை பயணிக்கிறது. வழக்கமான சிறுவர் கடத்தல் அல்லது ஆபத்தான பயணம் என்ற ஒற்றைப் பாதையில் செல்லாமல், பல்வேறு மனிதர்களையும், இடங்களையும், அனுபவங்களையும் சந்திக்கும் வகையில் கதையை விரிவுபடுத்தியிருப்பது சிறப்பு.

குறிப்பாக, வெவ்வேறு மொழி, கலாச்சாரம், பின்னணியைச் சேர்ந்த மனிதர்கள் ஒரு சிறுவனின் பயணத்தில் இணைவது இந்தியாவின் ஒற்றுமையை இயல்பாக உணர்த்துகிறது.

குட்டி தனுஷ், தீஹான் கதாபாத்திரத்தில் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். சிறுவனின் கனவு, தாத்தா மீதான பாசம், பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் எனக் கதையின் உணர்வுகளைத் தாங்கிச் செல்லும் முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிக்கி மக்கி ஜா, அபினவ் கோசாமி, அனந்த், பப்புஷா ஆகியோரின் பங்களிப்பும் கதைக்கு மாநில எல்லைகளைக் கடந்த ஒரு பரந்த தன்மையைத் தருகிறது. குறிப்பாகப் பல்வேறு மொழிப் பின்னணிகளைச் சேர்ந்த கலைஞர்களை ஒன்றிணைத்திருப்பது படத்தின் கருத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

தொழில்நுட்பத்தில் இந்தியாவை அழகாகப் பதிவு செய்திருக்கும் குழு!

ஒளிப்பதிவாளர் எஸ்.பி. பொன் சங்கர், இயக்குநர் என்ற பொறுப்புடன் மட்டுமின்றி கேமராவின் மூலமாகவும் இந்தியாவின் அழகை ரசிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமும், சுற்றுலாத் தலங்களின் பிரம்மாண்டமும் திரையில் காட்சிகளாக விரியும்போது ஒளிப்பதிவின் உழைப்பு தெளிவாகத் தெரிகிறது.

ராஜா ரவிவர்மா, பாலசுப்ரமணியம் ஆகியோரின் இசை படத்தின் பயணத்திற்கும் உணர்வுகளுக்கும் துணையாக அமைந்திருக்கிறது.

தயாரிப்பாளர் வைரப்பிரகாஷ், வழக்கமான வணிக அம்சங்களை மட்டுமே நம்பாமல், தேசிய உணர்வையும் இந்தியாவின் பெருமையையும் பேசும் கதைக்குத் தயாரிப்பு ஆதரவு அளித்திருப்பது பாராட்டுக்குரியது.

இயக்குநரின் நோக்கத்திற்கு ஒரு பாராட்டு!

ஒரு சிறுவனின் கனவை மையமாக வைத்து, தேசியக் கொடியின் பெருமையையும், இந்தியாவின் ஒற்றுமையையும், பல்வேறு மாநிலங்களின் சிறப்புகளையும் ஒரே கதைக்குள் கொண்டுவருவது எளிதான காரியமல்ல. அதற்கான களப்பணியும் பயணமும் திரையில் தெரிகிறது.

குறிப்பாக, இன்றைய தலைமுறை குழந்தைகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், அவற்றின் கலாச்சாரம், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், தேசியக் கொடியின் பின்னணி ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் வகையில் இப்படம் அமைந்திருப்பது கூடுதல் பலம்.

பொழுதுபோக்குடன் பயனுள்ள தகவல்களையும் வழங்கும் திரைப்படமாக ‘ஃப்ளாக்’ கவனம் பெறுகிறது. பள்ளி மாணவர்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இப்படம் ஒரு நல்ல அறிமுகமாக அமையும்.

இறுதியாக…

தேசியக் கொடி என்பது மூன்று வண்ணங்களால் ஆன ஒரு துணி மட்டுமல்ல; அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை, தியாகம், ஒற்றுமை, பெருமை ஆகியவற்றின் அடையாளம் என்பதை ஒரு சிறுவனின் பயணத்தின் வழியாகச் சொல்ல முயன்றிருக்கிறது ‘ஃப்ளாக்’.

பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை நம்பாமல், பெரிய கருத்தைச் சொல்ல வந்திருக்கும் இந்தப் படத்திற்கு இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கருக்கும், தயாரிப்பாளர் வைரப்பிரகாஷுக்கும் பாராட்டுகள்.

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல… குழந்தைகளுடன் பார்த்து இந்தியாவைப் பற்றி உரையாட வேண்டிய படமும் கூட!

ஃப்ளாக் – தேசியக் கொடியின் பெருமையைத் திரையில் உயரப் பறக்கவிடும் ஒரு பயணத் திரைப்படம்!

அரவணைக்கத் தாயுமில்லை ; அன்பு செலுத்த தந்தையுமில்லை ! எல்லாமே இவனுக்குத் தாத்தா தான் . தாத்தாவின் கனவை நினைவாக்க டெல்லி நோக்கி பயணம் செய்கிறான் இந்தச் சிறுவன். போகும் வழி , வெவ்வேறு மாநிலம் , அங்கு பேசும் வெவ்வேறு மொழி , கலாச்சாரம் , இந்தப் பின்னணியைச் சேர்ந்த மனிதர்கள் சிறுவன் இவனின் பயணத்தில் அவர்கள் இணைவது இந்திய தேசத்தின் ஒற்றுமை உணர்வை இயல்பாக உணர்த்துவது இந்தப் படத்தின் ஒரு மைல் கல்.

ஒன்று இணைந்திருப்பது அதை விட இவர்களை ஒன்று இணைத்திருப்பது மிக அருமை .இயக்குநரின் தனித் திறமை .

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- எஸ்.பி.பொன் சங்கர்
்்்்்்்்்்்்்்்்

இயக்குநர் நல்ல கதையை தேர்வு செய்து அதை திரைவடிவத்தில் வடித்தெடுத்து தன்னுடைய எண்ணங்களை திரைப்படமாக கொண்டு வந்த அவருடைய முயற்சி வரவேற்கத் தக்கது.

ஒரு நாட்டின் அடையாளம் அந்த நாட்டின் தேசியக் கொடி . அதன் பெருமையை ஒரு முதியவரின் கனவு மெய்ப்படும் முன் அவர் உயிர் மெய்யை விட்டு வெளியேற அவருடைய கனவை நினைவாக்க முயலும் சிறுவனின் உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக படத்தை கொண்டு சென்று இருக்கிறார் இந்தப் திரைப்படத்தின் இயக்குநர்.

இயக்குநரின் முயற்சி :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
தமிழ்நாட்டில் தொடங்கி காஷ்மீர் வரையிலான இந்தியாவின் பன்முகத்தை திரையில் கொண்டு வந்திருக்கிறார் இப் படத்தின் இயக்குநர்.

இயற்கை அழகு :-
்்்்்்்்்்்்்்்்்
நம்மை சொக்கை வைக்கும் இயற்கை அழகை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் இப் படத்தின் இயக்குநர். எந்த எந்த மாநிலத்தின் இயற்கை அழகை கொண்டு வந்திருக்கிறார் என்ற கேள்விக் கணைகள் தொடுத்தால் பதில் சொல்வது இயக்குநரின் கடமை. கர்நாடகா , ஆந்திரா , கேரளா , உத்திரப்பிரதேசம் , மகாராஷ்டிரா , குஜராத் , இராஜஸ்தான் என மாநிலங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் அதன் இயற்கை அழகை கண் குளிர படத்தில் கண்டு களிக்கலாம். இந்தச் சுற்றுலாத் தலங்களும் கதையோடு பயணம் செய்கின்றன

ஏழு அதிசயங்களுள் ஒன்று தாஜ்மகால் , ஐயன் திருவள்ளுவர் சிலை , இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை என நம் இந்தியாவின் பெருமையை நினைவு கூறும் விதமாக நாம் இளமையில் பாடம் படித்ததை நமக்கு நினைவு படுத்துகிறார் இப் படத்தின் இயக்குநர். படம் பார்க்கும் பொழுது இந்தியாவை சுற்றிச் பார்க்கும் அனுபவம் கிடைத்தார் போல ஓர் உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

சிறுவனின் சீரிய பயணத்தை இத்தனை பெரிய நிலப்பரப்புடன் இணைத்து அதற்கு ஏற்ப காட்சிகள் அமைத்து படமாக்கியிருப்பது சுகமே ! திட்டம் தீட்டுவதிலும் அதனை செயல் வடிவத்தில் கொண்டு வருவதில் அவருக்கு நிகர் அவரே ! அந்த இயக்குநரைப் பாராட்டலாமே !

எதிர் பாராத திருப்பங்களுடன் நகரும் பயணம் . டெல்லிக்கு போகும் இந்தச் சிறுவனுக்கு வழியில் என்ன என்ன அனுபவங்கள் காத்திருக்கின்றன. என்பதை முன்னரே அனுமானிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து பயணிக்கிறது . மற்றக் கதையில் வரும் கடத்தல் , ஆபத்துக்களை எதிர் கொள்ளுதல் , தன்னந்தனியாக மாட்டிக் கொள்ளுதல் என்று இல்லாமல் பல் வேறு மனிதர்களை சந்திப்பது , பல்வேறு இடங்களையும் அனுபவங்களையும் சந்திக்கும் வகையில் கதையைக் கொண்டு சென்று இருப்பது இந்தப் படத்திற்கு தனிச் சிறப்பு.

இயக்குநரும் இவரே ! ஒளிப்பதிவாளரும் இவரே ! எண்ணமும் அதனை ஒளிவடிவில் கொண்டு வந்தவரும் இவரே ! இந்தியாவின் தனி அழகை வண்ண ஒளிப்பதிவு மூலம் படம் பிடித்துக் காட்டியிருப்பது மிக அருமை ! அது மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவத்தையும் , சுற்றுலாத் தலங்களின் பிரமாண்டமும் திரையில் காட்சிகளாக விரியும் போது ஒளிப்பதிவின் மாட்சிமை இங்கு தனித்து நின்று படத்திற்கு அழகு சேர்த்திருக்கிறது

இசை :-
்்்்்்்்்
திரைப்படத்திற்கு உறுதுணையாக இருப்பது இந்த இசையே ! ராஜா ரவிவர்மா , பாலசுப்பிரமணியம் ஆகியோரின் இசை படத்தின் உணர்வுக்கும் பயணத்திற்கும் துணையாக நின்று படத்திற்கு இன்னும் அழகு சேர்த்து இருக்கிறது.

சிறுவன் ஒருவனின் கனவை மையமாக வைத்து , தேசியக் கொடியின் பெருமையும் , இந்தியாவின் ஒற்றுமையும் பல் வேறு மாநிலங்களின் சிறப்புகளையும் ஒரே கதையில் கொண்டு வருவது சாத்தியமா ? என்ற கேள்விக்கு சாத்தியமே !

ஃபிளாக் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு மேற் கொண்ட போது மூவர்ணக் கொடியின் மகத்துவம் , இந்திய சுதந்திரத்தின் அடையாளமே இந்திய தேசியக் கொடிதான். இதனின் பின்னணியை தெரிந்து கொள்ளும் வகையில் படத்தை சிறப்பாக முடித்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர். அனைவரும் பார்க்கலாம். பார்க்க வேண்டிய படம் . தரமான படம் எனவே தியேட்டரில் சென்று பாருங்கள். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. மீண்டும் இன்னொரு திரைவிமர்சனத்தில் சந்திக்கும் வரை உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *