பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த் திடீர் மரணம்

Share the post

அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள கூல் ஜெயந்த், புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா டடுவிட்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாசத்துக்குரியவனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.

பிரபல நடன இயக்குநர் கூல் ஜெயந்த். பிரபுதேவா, ராஜூ சுந்தரம் நடனக்குழுவில் பணியாற்றி வந்த இவர், ’காதல் தேசம்’ படம் மூலம் நடன இயக்குநர் ஆனார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ’முஸ்தபா… முஸ்தபா’, ’கல்லூரிச் சாலை’பாடல்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன.

அதன்பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்த கூல் ஜெயந்த், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ள கூல் ஜெயந்த், புற்றுநோய் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேற்கு மாம்பலத்தில் உள்ள அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.

இயக்குநர் பாரதிராஜா டடுவிட்டர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாசத்துக்குரியவனே, உன் மறைவு பேரதிர்ச்சிடா, மாஸ்டர் கூல் ஜெயந்த்யை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *