E -1 திரை விமர்சனம் :-

Share the post

E -1 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-

கதைக் கரு :-
ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்குவது இக் கதையின் கரு

கதையும் கதையின் போக்கும் :-
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடக்கும் சம்பவத்தை முன் நிறுத்தி படம் தன் கதையைத் தொடங்குகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் இருக்கும் வீட்டில் எதிர்பாராத சூழ்நிலையில் பெண்ணொருத்தி சிக்கிக் கொள்கிறாள்.

அந்தப் படம் கடந்த காலத்திற்கும் அந்தக் கொலையின் பின்னணிக்கும் இடையில் கதை பின்னோக்கி நகர்கிறது. அதாவது திருப்புக் காட்சி காட்டப்படுகிறது.

யார் இந்தக் கொலையை செய்தது ?
இந்தக் கொலைக்கான காரணம் என்ன ?
என்ற கேள்விகள் தான் படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறது.

யார் இந்தக் கொலையை செய்தது ?
இந்தக் கொலைக்கான காரணம் என்ன ?
என்ற கேள்விகள் தான் படத்தின் கதையை நகர்த்தும் முக்கிய காரணியாக இருக்கிறது.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து பேசும்போது பொதுவாகவே ” குட் டச் , பேட் டச் ” என்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஓர் ஆணின் கரம் குழந்தைகள் மீது படும்போது கம்பளி பூச்சி ஊர்வது போல் இருக்கும். அதைக் கவனிக்காமல் மெத்தனமாக இருந்தால் கொடூரமான கரங்கள் தன் கைவரிசையைக் காட்டும். பாதுகாப்பது இந்தச் சமூகத்தின் கடமை.

குழந்தையை மையமாகக் கொண்டிருக்கும் கதையில் குழந்தையைத் துன்புறுத்தும் காட்சிகளை விரிவுபடுத்தாமல் பிரச்சினையின் தீவிரத்தை தீர்வை கதையின் மூலம் உணர்த்த முயற்சித்தது ஏற்புடையதே.

குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் சில தொழில் நுட்பப் பகுதிகளில் அதன் தாக்கம் தெரிகிறது. ஒளிப்பதிவில் பிரமாண்டத்தைக் காட்ட முடியாது. படத் தொகுப்பிலும் அப்படித்தான். இந்தக் குறைகள் எந்த விதத்திலும் இந்தப் படத்தை பாதிக்கவில்லை

தேவையற்ற பரபரப்பை உருவாக்காமல் குழந்தைகள் பாதுகாப்பு என்ற விஷயத்தை மட்டும் கரத்தில் எடுத்துக் கொண்டு திரைப்படமாக கொண்டு சென்றிருப்பது நல்ல முயற்சியே பாராட்டலாம் .

திரைப்படம் பொழுது போக்கு அம்சமாக இருந்தாலும் சில நேரங்களில் ஏற்படும் சமூக அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது திரைப்படத்துறையின் முக்கிய அம்சமாகும். அதுமட்டுமல்ல அவர்களின் கடமையும் கூட. செய்திப் படத்திற்கும் திரைப்படத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் திரையுலகில் இன்னமும் சர்வ முட்டாள்கள் ஓசியில் சரக்கடித்துவிட்டு புறம் பேசி திரிகிறார்கள். இவர்களை என்ன செய்வது ?

நிறையும் குறையும் :-
ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையைப் பேச வந்திருக்கும் இந்தச் சிறிய முயற்சியை வரவேற்கலாம் ; ஊக்கப்படுத்தலாம் ; உற்சாகப்படுத்தலாம்.

கதையைக் கொண்டு செல்வது நல்ல படத் தொகுப்பு. மற்றொன்று தரமான பின்னணி இசை. இந்த இரண்டும் சரியாக இருந்தால் எல்லாப் படமும் வெற்றிப் படமே ! யாரும் தோல்வியை நோக்கி பயணம் செய்வதில்லை. இதனை மனத்தில் வைத்து படம் எடுத்தால் நல்லது

திரை நட்சத்திரங்கள் :-
படத்தின் நாயகன் :- சதாநாடார் குமார் இவரின் நடிப்பு கதையின் மையக் கருத்தை உள்வாங்கி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது.

கதாநாயகியாக மோனிகா செலினா நடித்திருக்கிறார். நடிப்பில் இயல்பு செயற்கை தன்மை இல்லாமல் நடித்து இருப்பது மிக சிறப்பு .

துணை நட்சத்திரங்கள் :-
நாயகனின் நண்பனாக நடித்திருப்பவர் :- பாண்டி கொடுக்கப்பட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார்.

வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் :

சுந்தரம். இவர் வில்லத் தனத்தை கொடுக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து தன் நடிப்பால் முத்திரையை பதித்திருப்பது வெகு சிறப்பு.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- எம்.எஸ் மனோகர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். இயக்குநரின் எண்ணங்களை திரைக்கு கொண்டு வருவது ஒளிப்பதிவாளரின் வேலை. அதை சிறப்பாக செய்து இருப்பது படத்திற்கு மிக பெரிய பலம். பாராட்டுகள்.

படத்தொகுப்பு :- பரணி செல்வம். இவர் படத் தொகுப்பில் கவனம் செலுத்தி தொய்வில்லாமல் படத்தினை கொண்டு செல்கிறார்.

எழுத்து இயக்கம் தயாரிப்பு :-
சதாநாடார் மற்றும் மோனிகா செலினா
சமூக அவலங்களை குறைந்த செலவில் நிறைந்த படமாக கொடுத்து அதில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று தம்முடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள் பாராட்டுவோம்.

திரை நட்சத்திரங்கள் :-
சதாநாடார் – குமார்
மோனிகா செலினா ,
பாண்டி , சுந்தரம் , பேபிஷிவ் இன்னும் பலர்

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- எம்.எஸ்.மனோகுமார்
படத்தொகுப்பு :- பரணிசெல்வம்
பாடல் :- சுதந்திரன்
கலை :- ஆனந்தன்
இசை :- இ.ஜே.ஜான்சன்
மக்கள் தொடர்பு :- சரண்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் தயாரிப்பு :-
சதா நாடார் & மோனிகா செலினா

E-1
படத்திற்கு தலைப்பு ஆங்கிலத்தில். தமிழ்நாட்டில் இருந்து கொண்டே தமிழை புறக்கணிப்பது பெற்ற தாயை புறக்கணிப்பதற்கு சமம். திரைப்படத்தில் சேர தகுதி தேவையில்லை பண பலம் இருந்தால் போதும் நினைப்பவர்கள் ஒரு பக்கம். எடுத்தப் படத்தை குறை கூறுவது மறு பக்கம் இதற்கிடையில் நல்ல படம் மக்களிடம் சென்று அடைவது எப்போது ? எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *