Drones ( ட்ரோன்ஸ் ) திரை விமர்சனம் :-

Share the post

Drones ( ட்ரோன்ஸ் ) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தேவதைகள் , பறக்கும் தட்டுகள் , சூனியக்காரி என பல கதாபாத்திரங்கள் பால பருவத்தில் கதை புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வரும்.

Drones ( ட்ரோன்ஸ் ) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
தேவதைகள் , பறக்கும் தட்டுகள் , சூனியக்காரி என பல கதாபாத்திரங்கள் பால பருவத்தில் கதை புத்தகத்தில் படித்தது நினைவுக்கு வரும்.

அவைகளே உயிர்ப் பெற்றால் எப்படி இருக்கும் ? இதனை மையமாகக் கொண்டு அமைந்தது தான் இப் படத்தின் கதைக் கரு.

கதையும் கதைப் போக்கும் :-
குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரே கவர்ந்து இழுக்கும் வண்ணம் திரைப்படங்கள் வெளிவருவது கடினம். அந்த வகையில் தேவதை , சூனியக்காரி , மர்மக் கொலைகள் , விஞ்ஞான ஆய்வுக் கூடங்கள் என முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகி இருக்கிறது. இந்தத் திரைப்படம்.

கல்லூரி பருபவத் தோழர்கள் நாயகன் கிஷோர் வேடத்தில் டிராவிட் செல்வம். நாயகி கருப்பட்டி வேடத்தில் அஞ்சலி நாயர் தஷ் வேடத்தில் தீபக் நடித்திருக்கின்றனர்.

கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர். இந்த மூன்று தோழர்களும் பிளாக் ஹோல் என்ற வித்தியாசமான அறிவியல் ஆய்வுக் கூடத்தில் தங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அங்கிருந்து வெளியேற முடியாததால் ட்ரோன் உதவியுடன் வெளி உலகத்தை வேடிக்கைப் பார்க்கின்றனர். அப்பொழுது கிஷோரின் கண்களில் படுகிறார் ஏஞ்சல் பக்ருதி வேடத்தில் நடிக்கும் சித்தி இத்னானி . கண்டதும் காதலா ? ஆமாம் ஆண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். கிஷோர் மட்டும் என்ன விதி விலக்கா ?

இவர்களின் காதலை ஏற்க மறுக்கும் தேவதர்ஷினி தன்னுடைய மந்திர சக்தியால் மாயக் கோட்டைக்குள் இம் மூவரையும் சிறை வைக்கின்றார்.

இன்னொரு புறம் நகரத்தில் அடுத்து அடுத்து மர்ம கொலைகள். போலீஸ்சாருக்கு இவை ஒரு பெருத்த சவாலாக இருக்கின்றன.

அந்தக் கொலைகளுக்கு பின்னால் இருக்கும் சைக்கோ யார் ? ஆணா பெண்ணா ? என்ற விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணை சூடு பிடிக்க போலீஸ் கவனம் கொலையாளி பக்கம் திரும்புகிறது.

மந்திரக் கோட்டையில் சிக்கியத் தோழர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் ? கிஷோரின் காதல் கைகூடுகிறதா ? மர்மக் கொலைகளின் பின்னணி என்ன ? இந்த வெவ்வேறு சம்பவங்கள் இறுதியில் எப்படி ஒன்று இணைகின்றன ? என்பதை நகைச்சுவை கலந்த மாயாஜாலத்தோடு கதை நகர்கிறது மீதிக் கதையோடு .

கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூன்று கல்லூரி தோழர்கள் பிளாக் ஹோல் என்று அழைக்கப்படும் பூட்டப்பட்ட விஞ்ஞானி ஒருவரின் வீட்டில் தஞ்சம் புகுகின்றனர்.அங்கு இருக்கும் ட்ரோன் ஒன்றைப் பயன்படுத்தி நகரின் மறுபக்கத்தில் பிரம்மாண்டமான வீட்டில் , சூனியக்காரி பாட்டியுடன் வசிக்கும் பிரகிருதி என்ற நுண்கலை கலைஞரை கிஷ் கவனிக்கிறான். இது அமானுஷ்ய நிகழ்வுகள் ( மனித சக்திக்கும் அறிவியல் விதிகளுக்கும் அப்பாற்பட்ட எளிதில் புரிந்து கொள்ளமுடியாத நிகழ்வைக் குறிக்கும். )

காதல் மற்றும் அறிவியல் புனைவு திருப்பங்கள் நிறைந்த ஒரு குழப்பமான சூழலுக்கு வழி வகுக்கிறது.

திரை நட்சத்திரங்கள் :- கிஷோர் வேடத்தில் டிராவிட் செல்வம் ,
கருப்பட்டி வேடத்தில் அஞ்சலி நாயர் , தஷ் வேடத்தில் தீபக் .பிரகிருதி வேடத்தில் சித்தி இத்னானி , சூனியக்காரி வேடத்தில் தேவதர்ஷினி , விஞ்ஞானி பத்மநாபன் வேடத்தில் முகமது குரைஷி , கூமாபட்டி / காவலராக சினிமாவாலா சதீஷ் மற்றும் இவர்களுடன் செர்லாக் வேடத்தில் சசி செல்வராஜ் நடிக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- ஆர். ராகவ் மிர்தாத் .படத்தை வித்தியாசமாக தந்து மக்களை சிரிக்க வைக்கிறார்.ரசிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு :- ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். இயக்குநருக்கு துணையாக நின்று தன் பங்கை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.

படத்தொகுப்பு :- சதீஷ் சூரியா . படத்திற்கு கை கொடுத்திருப்பது இவரின் படத்தொகுப்பு. என்ன தான் இயக்குநர் இயக்கினாலும் காட்சிகளை தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்து படத்திற்கு உயிர் ஊட்டுபவர் படத் தொகுப்பாளரே.

இசை :- பாடல்கள் உருவாக காரணமாக இருப்பது இசை. காட்சிகளுக்கு பின்னணி இசை சேர்த்து படத்தை தூக்கி நிறுத்திவது இசையமைப்பாளரே ! அந்த வகையில் இந்தப் படத்திற்கு இசையமைத்து படத்திற்கு பெருமை சேர்த்தவர் ஹரி எஸ். ஆர்.

ட்ரோன்ஸ் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்ந்து தோய்ந்து பார்த்ததில் காலம் காலமாக நகைச்சுவைக்கு என்ற பகுதி, மக்கள் மத்தியில் தனி இடம் உண்டு.இதை யாரும் மறுக்க முடியாது , மறைக்க முடியாது . படத்தைப் பார்த்து ரசிக்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. மீண்டும் வேறொரு திரை விமர்சனத்தில் மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *