Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது.இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்அதனை தொடர்ந்து கலைமாமணி Dr.k.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்கள் குழுவுடன் வழங்கிய இசை அஞ்சலியுடன் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.Dr.வம்சி மோகன் வரவேற்புரையாற்றினார்.பாரதிய வித்யா பவன் கோவை மண்டல தலைவர் Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர்சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார்.மேலும் பரதநாட்டிய‌ கலைஞர் Dr.M . பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு Dr.M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் 2023ம் ஆண்டுக்கான “முரளி நாத லஹரி” விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கி கௌரவித்தார்.பின்னர் Dr.M.பத்மா சுப்பிரமணியம் வழங்கிய ஏற்புரையில் Dr. பாலமுரளி கிருஷ்ணா ஒரு “அபிநவ காளிதாஸ்” என்று கூறி மகிழ்ந்தார். மேலும் தான் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இசையமைப்பில் நடத்திய நாட்டிய நிகழ்ச்சி பற்றி‌ நெகிழ்ந்து பேசினார்.இந் நிகழ்ச்சியில் பாரதிய வித்யா பவன் சென்னை மண்டல தலைவர் N.இரவி, இயக்குனர் K.N.இராமசாமி, மற்றும் பழம்பெரும் கர்நாடக இசை கலைஞர் T.V.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களளுடனான பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை மாதந்தோறும் பாலமுரளி அவர்களின் பிறந்த நட்சத்திரம் விசாகம் அன்று பாலமுரளி கிருஷ்ணா விசாகம் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றது.இந்நிகழ்ச்சியில் பாலமுரளி அவர்களின் க்ருதிகளையும் வளர்ந்து வரும் இளம் கர்நாடக இசை கலைஞர்கள் வழங்க இருக்கின்றனர்.இதன் முதல் நிகழ்ச்சி ஜூலை 27 அன்று பாரதிய வித்யா பவன் அரங்கில் சாய்‌ விக்னேஷ் வழங்க இருக்கிறார்.இத் தொடர் இசை நிகழ்ச்சிக்கான சின்னத்தை பாரதிய வித்யா பவன் துணை இயக்குனர் திரு K.வெங்கிடாசலம் அவர்கள் அறிமுக படுத்திதுவக்கி வைத்தார்.Dr.K.கிருஷ்ணகுமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்.

Share the post

Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93வது பிறந்த நாள் முன்னிட்டு பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை வருடந்தோறும் கலையில் சிறந்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 06/07/23 நடைபெற்றது.
இவ்விழாவினை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மகன்கள் Dr.வம்சி மோகன் Dr.சுதாகர் மற்றும் மகள் மஹதி சீனிவாசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்
அதனை தொடர்ந்து கலைமாமணி Dr.k.கிருஷ்ணகுமார் மற்றும் கலைமாமணி திருமதி பின்னி கிருஷ்ணகுமார் அவர்கள் குழுவுடன் வழங்கிய இசை அஞ்சலியுடன் நிகழ்ச்சி சிறப்பாக துவங்கியது.
Dr.வம்சி மோகன் வரவேற்புரையாற்றினார்.
பாரதிய வித்யா பவன் கோவை மண்டல தலைவர் Dr.B.K. கிருஷ்ணராஜ் வானவராயர்
சிறப்பு விருந்தினராக பங்குபெற்று சிறப்புரை வழங்கினார்.மேலும் பரதநாட்டிய‌ கலைஞர் Dr.M . பத்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு Dr.M. பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் 2023ம் ஆண்டுக்கான “முரளி நாத லஹரி” விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கி கௌரவித்தார்.
பின்னர் Dr.M.பத்மா சுப்பிரமணியம் வழங்கிய ஏற்புரையில் Dr. பாலமுரளி கிருஷ்ணா ஒரு “அபிநவ காளிதாஸ்” என்று கூறி மகிழ்ந்தார். மேலும் தான் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இசையமைப்பில் நடத்திய நாட்டிய நிகழ்ச்சி பற்றி‌ நெகிழ்ந்து பேசினார்.
இந் நிகழ்ச்சியில் பாரதிய வித்யா பவன் சென்னை மண்டல தலைவர் N.இரவி, இயக்குனர் K.N.இராமசாமி, மற்றும் பழம்பெரும் கர்நாடக இசை கலைஞர் T.V.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தங்களளுடனான பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை மாதந்தோறும் பாலமுரளி அவர்களின் பிறந்த நட்சத்திரம் விசாகம் அன்று பாலமுரளி கிருஷ்ணா விசாகம் தொடர் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் பாலமுரளி அவர்களின் க்ருதிகளையும் வளர்ந்து வரும் இளம் கர்நாடக இசை கலைஞர்கள் வழங்க இருக்கின்றனர்.இதன் முதல் நிகழ்ச்சி ஜூலை 27 அன்று பாரதிய வித்யா பவன் அரங்கில் சாய்‌ விக்னேஷ் வழங்க இருக்கிறார்.இத் தொடர் இசை நிகழ்ச்சிக்கான சின்னத்தை பாரதிய வித்யா பவன் துணை இயக்குனர் திரு K.வெங்கிடாசலம் அவர்கள் அறிமுக படுத்தி
துவக்கி வைத்தார்.
Dr.K.கிருஷ்ணகுமார் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியினை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *