கண்டிஷன் போட்ட நயன்தாரா… கடுப்பான ஷாருக்கான்.. சமந்தா நடிப்பதன் பின்னணி…

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என 4 படங்களை இயக்கியவர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குனர் என்பதால் அவரைப்போலவே அதிக பட்ஜெட்டுகளில் படம் இயக்கி தயாரிப்பாளரின் வயிற்றில் புளியை கரைப்பவர்.

இவரின் இயக்கத்தில் நடிக்க ஷாருக்கான் சம்மதம் தெரிவிக்க ஒரு வருடத்திற்கும் மேல் மும்பையில் தங்கியிருந்து கதையை உருவாக்கினார் அட்லீ. இப்படத்தை ஷாருக்கான் தனது ரெட் சில்லி நிறுவனம் மூலம் தயாரிப்பதாக முடிவெடுக்கப்பட்டது. கொரோனா லாக் டவுன் எல்லாம் முடிந்து ஒரு மாதத்திற்கு முன்பு புனேவில் படப்பிடிப்பு துவங்கியது. ஷாருக்கான் தரப்பு திவ்யா படுகோனே, கியாரா அத்வானி என பரிந்துரைக்க அட்லீ நயன்தாராதான் வேண்டும் என அடம்பிடித்தார்.

இதற்கிடையில் இப்படத்திலிருந்து நயன்தாரா விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் சமந்தா நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால், இதன் பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. உண்மையில், இப்படத்திலிருந்து நயன்தாரா விலக வில்லை. அவரை வேண்டாம் என தூக்கிவிட்டனர் என்பதுதான் அந்த செய்தி.

இப்படத்திற்கு மொத்தம் 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ஒரு வாரம் மட்டுமே நயன் நடித்தார். ஆனால், ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டுள்ளார். நான் எந்த தேதியில் கால்ஷிட் கொடுக்கிறேனோ அன்று மட்டும்தான் படப்பிடிப்புக்கு வருவேன், இப்படம் பற்றிய அனைத்து விளம்பரங்களிலும் என் பெயருக்கு முன்னால்‘லேடி சூப்பர்ஸ்டார்’ என குறிப்பிட வேண்டும், படப்பிடிப்பிற்கு வர எனக்கு தனி விமானம் வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போட்டாராம்.
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் தரப்பு அட்லீ மீது கோபத்தை காட்ட, இனிமேல் நயனுக்கு வக்காலத்து வாங்கினால் நம்மை தூக்கிவிடுவார்கள் என அமைதியாகி விட்டாராம் அட்லீ. மேலும், சமந்தாவை தொடர்பு கொண்டு இந்த படத்தில் நடியுங்கள் என கேட்க அவரும் சம்மதித்து விட்டாராம்.
எனவே இப்படத்திலிருந்து நயன்தாரா விலகவில்லை. தூக்கிவிட்டார்கள் என்பதுதான் நிஜம் என பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.