” சிட்டுக் குறிஞ்சி ” திரை விமர்சனம்!

Share the post

” சிட்டுக் குறிஞ்சி ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-


கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
ஆணவக் கொலைக்கு ஆளானவர்களின் ஆன்மாக்களையும் , நிறைவேறாத உணர்வுகளையும் மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை தான் இக் கதையின் கரு .

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்
ஒரே ஜாதியில் பொண்ணு கிடைப்பதில்லை . சொந்தத்தில் பொண்ணு கிடைப்பதில்லை. இந்த இலட்சணத்தில் காதல் ஒரு கேடு.மீறி நடந்தால் ஆணவக் கொலை நடக்கத்தான் செய்யும்.

ஆணவக் கொலையை மையமாக வைத்து எத்தனையோ திரைப்படங்கள் வெளி வந்துள்ளன. இருப்பினும் மர்மம் , காதல் , ஆன்மா என முற்றிலும் மாறுப்பட்ட கதைக்கு திரைக்கதை அமைத்திருப்பது நல்ல உத்தி தான்

.படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. கதையின் மர்ம முடிச்சுகள் பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

கதை மாந்தர்களின் பின்னணியும், சம்பவங்களின் தொடர்பும் படிப்படியாக வெளிப்படுத்துகின்ற விதம் வித்தியாசமான அனுபவத்தை தருகின்றது என்றே சொல்லலாம்.

சிற்சில இடங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் கதையின் மீது ஏற்படும் எதிர்ப்பார்ப்பு , ஆர்வம் அதிகரிக்கச் செய்கின்றன.

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்
பழைய முகங்களே ஒரு காலத்தில் புதுமுகங்களே என்பதை ஒருபொழுதும் இந்தத் திரையுலகம் ஒப்புக் கொள்வதேயில்லை. இது சினிமாவிற்கே உண்டான சாபக் கேடு. இதை யாரால் தான் மாற்ற முடியும் ? பிரபலமான நட்சத்திரங்கள் நடித்தால் தான் அந்தத் திரைப்படம் வெற்றிப் பெறுமா ? இது என்ன மூடத்தனம் ? இதைக் காலம் மாற்றாதா ?

ரஜித் மேனன் , தீப்ஷிகா , வி.ஜே .பப்பு , ஜி.எம். குமார் என நடிகர்கள் பட்டியல் தொடர் வண்டியைப் போல நீள்கிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று உணர்ந்து நடித்து இருக்கிறார்கள்.

நக்‌ஷா சரண் நடிப்பு பார்வையாளர்களை கவனிக்க வைக்கும் . கதையின் திருப்புக் காட்சியில் கீரைக்காரப் பெண்ணாக வலம் வரும் சுஜாதா சிவகுமார் சில காட்சிகளிலே நடித்திருந்தாலும் இவருடைய நடை , உடை , பாவனை மிக அற்புதம்.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்
கதைக்கு இவர்கள் கல் தூண்கள். நடிப்பால் திரைப் படத்தை உயர்த்துபவர்கள். கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று அதற்கு உயிர் கொடுக்கும் பிரம்மாக்கள். வணக்கம் கந்தசாமி , கராத்தே ராஜா , ஈஸ்வர் பாபு , மஞ்சு , எல்.வி. ஆதவன் , ராம்ஸ் , வழக்குரைஞர் பாபு இன்னும் பலர் நடித்திருக்கிறார்கள்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
எழுத்து & இயக்கம்:- வி.ஜே. மீனாட்சி சுந்தரம் :-
்்்்்்்்்்்்்்்்்்்

இவர் இந்தப் படத்தை படைத்த பிரம்மா என்று தான் சொல்ல வேண்டும். பிரம்மா நல்லவரையும் வல்லவரையும் படைப்பது மட்டுமல்லாமல் கெட்டவர்களையும் படைப்பது தான் அவருடைய வேலை. படைப்பது அவருடைய வேலை நல்லவர் ஆவதும் கெட்டவர் ஆவதும் அது அவர் அவருடைய தலையெழுத்து.

கதையை தேர்ந்தெடுத்து அதற்கு நல்லதொரு திரைக்கதை அமைத்து அருமையாக வசனம் எழுதி இயக்கி சாதனைப் படைத்திருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.

ஆணவக் கொலைக்கு ஆளானவர்களின் ஆன்மா எவ்வாறு அலையும் என்பதையும் , நிறைவேறாத ஆசைகளையும் ,காதல் உணர்வுகளையும் தனக்கே உரிய பாணியில் கற்பனையைக் கலந்து திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் . இவரைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

காதல் ,பேய் ,மர்மம் என பீடிகை போடாமல் சமூகத்தின் வலியையும் மனித உணர்வுகளையும் இணைத்து வித்தியாசமான திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதற்காகவே இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர். இவர் இயக்குநரின் எண்ணங்களுக்கு திரைவடிவம் கொடுத்தவர். தொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் . தன்னுடைய கைவண்ணதால் படம் பிடித்து படத்தை திரையில் ஓட வைத்தவர். பார்வையாளர்களின் பார்வையை திசைத் திருப்பாமல் உட்கார வைக்கும் உத்தியைக் கையாளுபவர். படத்தின் இறுதிக் காட்சியில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் ,படத்தின் உச்சமும் வேறொரு தளத்திற்கே அழைத்துச் செல்கின்றன. இதில் ஒளிப்பதிவாளரின் பங்கும் உண்டு

.

படத் தொகுப்பாளர் :- மகேந்திரன் கணேசன் :-
்்்்்்்்்்்்்்்்்்
படத் தொகுப்பு திரைப்படத்தின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் மிக உன்னதமான கலை படைப்பு. இதில் சிலர் தன்னையே விலை பேசி சோரம் போகின்றனர். அது தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர் மிக நுட்பமான தொழில் வித்தகர். திரைப்படம் சீராக செல்ல தன்னுடைய அருமையான படத் தொகுப்பு மூலம் நிரூபித்துக் காட்டியவர் . இவரை நாமும் பாராட்டலாமே !

இசை :- மாரா :-
்்்்்்்்்்்்்்்்்்
சங்கீத ஞானம் உள்ளவர்கள் தான் இசையமைப்பாளராக வலம் வர முடியும். என்பதை நிரூபித்துக் காட்டியவர் . இவருடைய மெட்டில் உருவான பாடல்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப அமைந்துள்ளன. பின்னணி இசை திரைப்படத்திற்கு தனிச் சிறப்பை தேடித் தந்துள்ளது.

” சிட்டுக் குறிஞ்சி ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் களம் புகுந்த போது இரண்டு காலக் கட்டங்களை மையப்படுத்தி உருவாக்கிய இந்தத் திரைப்படம் சமூகத்தில் உண்டான அவல நிலைகளை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றனர். நடிகர்கள் , நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்களுடைய பணிகளை செவ்வனவே செய்து முடித்து இருக்கின்றனர்.பாராட்டலாம். படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி சிறப்பித்துள்ளது. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்பளிடம் இருந்து விடை பெறுபவர் உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *