உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது நகைச்சுவையும், பழிவாங்கலும் இணைந்த கதைக்கருவைக் கொண்ட இத்திரைப்படத்தை மார்ச் 20 ஞாயிறன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம் சென்னை, மார்ச் 18, 2022 : உள்குத்து திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது. உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது. பழிவாங்கல், டிராமா மற்றும் நகைச்சுவை கலந்த இக்கதையைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து திரைப்படம், பொழுதுபோக்கு அம்சத்துடன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது. நடிகர் பால சரவணன் நகைச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை சாயா சிங், சண்டைப்பயிற்சி இயக்குனரும், நடிகருமான திலீப் சுப்பராயன், நடிகர் சரத் லோஹித்அஷ்வா மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். அமைதியும், அழகும் ததும்பும் கடற்கரை நகரத்தைப் பின்புலமாக கொண்ட ‘உள்குத்து’, திரைப்படமானது, தனது சகோதரியின் மரணத்திற்கு பழிதீர்ப்பதற்காக மக்கள் பெரிதும் அஞ்சுகின்ற கந்துவட்டி தாதாக்களான காக்கா மணி (சரத் லோஹித்அஷ்வா நடிப்பில்) மற்றும் அவரது மகன் சரவணன் (திலீப் சுப்பராயன் நடிப்பில்) ஆகியோரை தேடி அலைகின்ற ராஜா என்ற இளைஞனைச் (நடிகர் தினேஷ் நடிப்பில்) இக்கதை சுற்றி நகர்கிறது. இந்த தேடலின்போது மீன்பிடிப்பு கிராமத்தில் சுறா சங்கர் (பால சரவணன் நடிப்பில்) என்பவரோடு அவரின் நட்பு வளர்கிறது. அவரது சகோதரியான கடலரசியை (நந்திதா சுவேதா நடிப்பில்) திருமணம் செய்து கொள்ளுமாறு சுறா சங்கர் விரும்புகின்ற நிலையில் திரைக்கதை அதிரடி திருப்பத்தை எதிர்கொள்கிறது. சரவணனை தாக்கி, அவனை அவமானத்திற்கு ஆளாக்கும் நிலைக்கு ராஜா தள்ளப்படுகிறார். இந்த மோசமான தாதாக்களின் பிடியிலிருந்து ராஜாவால் விடுபட முடிந்ததா? தனது சகோதரியின் மரணத்திற்கு ராஜா பழிவாங்குவானா? முடிவு என்னவாகிறது என்று அறிய ‘உள்குத்து’ திரைப்படத்தை கண்டு ரசியுங்கள். உலகளவில் சின்னத்திரையில் முதன் முறையாக இத்திரைப்படம் ஒளிப்பரப்பாவது குறித்து இதன் இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி. பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது. இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிகச் சரியாகப் பொருந்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் தினேஷ் பேசுகையில், “எனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில், இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் வேறுபட்டு தனித்துவமானதாக இருப்பதால், முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை இது எனக்குத் தந்தது. ரகசியமான திட்டங்களையும், பல்வேறு மறைவான விஷயங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு மாஸ் ஹீரோவாக இத்திரைப்படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது. கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டின் பிரபல சேனலில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுவதால், தங்களது குடும்பதோடு சேர்ந்து அமர்ந்து வாய்விட்டு சிரிப்பதோடு, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டு தங்களது இருக்கையின் முனைக்கே பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார். இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டு…
Category: Press Release
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடிக்கும் புத்தம்புதிய நெடுந்தொடர் மீரா!
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடிக்கும் புத்தம்புதிய நெடுந்தொடர் மீரா! பெண்மையின் மாண்பை கவுரவிக்கும் சின்னத்திரையில் புது கதை! ~எந்தவொரு…
Women’s Day Special Hijama Therapy By Al-Shifa The Cupping Clinic
Women’s Day Special Hijama Therapy By Al-Shifa The Cupping Clinic Chennai, 08th March, 2022: At the…
உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம் தமிழக சந்தையில் செயல்பாடுகளை விரிவாக்க திட்டம்
உலகின் முன்னணி வாசனை திரவியங்கள் நிறுவனமாக திகழும் டென்வர் நிறுவனத்தின் விளம்பர தூதராக பிரபல நடிகர் எஸ்டிஆர் நியமனம் தமிழக சந்தையில்…
பைஜு’ஸ் சென்னையில் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்-ஐ அறிமுகப்படுத்துகிறது
பைஜு’ஸ் சென்னையில் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்-ஐ அறிமுகப்படுத்துகிறது ● 4 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு போட்டித்தன்மையை பெற சிறந்த…
இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு 75 வயது மூதாட்டி, 74 வயது முதியவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை
இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு 75 வயது மூதாட்டி, 74 வயது முதியவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை சென்னை, பிப்.14- இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கும், 74 வயது முதியவருக்கும் டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை அளித்து அவர்களின் உயிரைக் காப்பாற்றி காதலர் தினமான இன்று அவர்களின் துணையோடு சேர்த்து வைத்து அவர்களின் குடும்பத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது சென்னையில் உள்ள பன்னோக்கு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வரும் வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனை. இந்த வெற்றிகரமான சிகிச்சையை இம்மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணரும் டாக்டருமான கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையில் நிபுணத்துவமிக்க டாக்டர்கள் குழு செய்தது. இந்த இரு நோயாளிகளுக்கும் பல்வேறு நோய்கள் இருந்ததோடு அவர்களின் இதயத்தின் முக்கியமான பெருநாடி வால்வு பகுதியில் சுருக்கமும் இருந்தது. அந்த சுருக்கத்திற்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு(TAVR) பொருத்தும் சிகிச்சை இம்மருத்துவமனை குழுவினர் சிறப்பாக மேற்கொண்டனர். வயதான இந்த நோயாளிகளுக்கு பிரசாந்த் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் குழு, சேதமடைந்த பெருநாடியை ஒரு புதிய வால்வுடன் இணைத்து அவர்களுக்கு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது. பெருநாடி வால்வு ஸ்டெனோசிஸ் என்பது பெருநாடி வால்வு திறப்பின் குறுகலாகும், இது இடது வென்ட்ரிக்கிளிலிருந்து பெருநாடிக்கு ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது. வயதானவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 75 வயதான திருமதி சங்கரவடிவு கீழே விழுந்து வலது இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வகை 2 நீரிழிவு நோய் உள்ளது. இந்த நிலையில் இம்மருத்துவமனையின் எலும்பியல் குழு ஆலோசனையின்படி, நோயாளிக்கு அதிக ஆபத்துள்ள தொடை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்காக அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை காரணமாக தமனியில் கடுமையான பெருநாடி வால்வு குறுகல் இருப்பது கண்டறியப்பட்டது, இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது இதயம் செயலிழக்க வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் இது குறித்து இதய நோயியல் நிபுணர் டாக்டர் தாமோதரன் வழிகாட்டுதலின்படி டாக்டர்கள் குழு அவருக்கு டிரான்ஸ்கேட்டர் TAVR (பெருநாடி வால்வு பொருத்தும்) சிகிச்சையை அளித்தனர். இதேபோல் 74 வயதான திரு நாதர்கனி தலைச்சுற்றல் மற்றும் கடுமையான நெஞ்சு வலி அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சிகிச்சை அவருக்கும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை குறித்து இம்மருத்துவமனை டாக்டர் தாமோதரன் கூறுகையில், காதலர் தினத்தன்று திருமதி சங்கரவடிவு மற்றும் திரு நாதர்கனி ஆகியோரின் உயிரைக் காப்பாற்றி அவர்களை மீண்டும் அவர்களது துணையுடன் இணைக்கும் வாய்ப்பைப் பெற்றதற்காக நாங்கள் உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இவர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையானது மிகவும் சிக்கலாக இருந்ததோடு சவாலாகவும் இருந்தது. ஏனெனில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது, அத்துடன் நாங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டியதிருந்தது. எலும்பு முறிவு காரணமாக 75 வயதான திருமதி சங்கரவடிவு எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு வழக்கமான அறுவை சிகிச்சைக்கு முந்தைய இதய பரிசோதனையின்போது இதயத்தில் பிரச்சினை இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் காரணமாக நீரிழிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பதால் அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என்பதை புரிந்து கொண்டோம். இந்த நிலையில் அவருக்கு டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை அளித்தால் மட்டுமே அவரது உயிரைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்து அந்த சிகிச்சையை அளித்தோம். எங்கள் மருத்துவமனையில் உயர்தர இதய சிகிச்சைக்கான பல்வேறு வசதிகள் உள்ளன என்று தெரிவித்தார். டாக்டர் கே. தாமோதரன் மற்றும் டாக்டர் கதிரேசன் தலைமையிலான டாக்டர் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்கு பின் இந்த இரு நோயாளிகளும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அன்றைய தினம் மாலையே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நன்றாக குணமடைந்த அவர்கள் மருத்துவமனையிலிருந்து நான்கு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகள் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா கூறுகையில், இந்த வயதான நோயாளிகளுக்கு அளித்த சிறப்பான சிகிச்சை மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சேவைக்காக டாக்டர் தாமோதரன் மற்றும் அவரது நிபுணர் குழுவுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் சரியான நேர தலையீடு இன்று நோயாளிகளுக்கு ஒரு புதிய புத்துணர்வையும் வாழ்வையும் அளித்துள்ளது. எங்கள் மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்குவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு இந்த இரட்டை டிரான்ஸ்கேட்டர் பெருநாடி வால்வு பொருத்தும் சிகிச்சை ஒரு சிறந்த சான்றாகும். நோயாளிகள் இருவரும் நன்றாக குணமடைந்து வருவதோடு, காதலர் தினத்தில் அவர்களின் துணையோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவதற்கு அவர்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருப்பது குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு
பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.
ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: ‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்…
Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil viewers
Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil…