உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு ————- சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி மதியம் 12:30 மணி மற்றும் மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு சென்னை, அக்.28,2021 : இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள, ஸ்பெஷல் பார்ட்னர் கோல்டு வின்னர் எல்டியா பியூர் கோக்கனட் ஆயில் வழங்கும் இந்த அதிரடி திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந்தேதி ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன், காளி வெங்கட், ரோகினி, ஜெயபிரகாஷ், இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்) ஆகியோரை சுற்றி வருகிறது. மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான். அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளான். அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான். முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.…
Category: General News
சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆதிரை”.இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
“ஆதிரை” சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆதிரை”.இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . மாதராய் பிறந்திட மா தவம்…
“Thaka Thimi Thaka Janu”
Jaya TV airs a special program for Bharatanatyam artists with new rounds “Thaka Thimi Thaka Janu”…
“தக திமி தக ஜனு”
ஜெயா டிவியில் புதிய சுற்றுகளுடன் பரதநாட்டிய கலைஞர்களுக்காக ஒளிபரப்பாகும் பிரத்யேக நிகழ்ச்சி “தக திமி தக ஜனு” ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .…
GRAND INAUGURATION OF DIADEM’S NEWEST PHASE “ASHIRAH”, SIGNATURE COLLECTION INTO THE WORLD OF TRADITIONAL CONTEMPORARY FASHION, INAUGURATED BY MRS SUMA HARRIS, SINGER UNNIKRISHNAN & ACTRESS SUJA VARUNEE
GRAND INAUGURATION OF DIADEM’S NEWEST PHASE “ASHIRAH”, SIGNATURE COLLECTION INTO THE WORLD OF TRADITIONAL CONTEMPORARY FASHION,…
‘மைக் மாயாண்டி’
‘மைக் மாயாண்டி’ சமகால மக்களின் கருத்துக்களையும் அரசியல் நிகழ்வுகளையும் நாட்டில் நடக்கும் சம்பவகளையும் மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறதா! நேரடியாக மக்களின் கருத்தை கேட்டு மக்களின் குரலாகவே நகைச்சுவையுடன் கலந்து ஒலிக்கும் நிகழ்ச்சி ‘மைக் மாயாண்டி’ . எதையுமே கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொன்னால் சுலபமாக கருத்துக்கள் மக்களை சென்று அடையும் என்பது பொதுவான கருத்து.…
கொரோனா சமயத்தில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜிப்ரான் இசையில் ‘வீரவணக்கம் அந்தம்’ வெளியீடு
கொரோனா சமயத்தில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜிப்ரான் இசையில் ‘வீரவணக்கம் அந்தம்’ வெளியீடு காவல்துறை உங்கள் நண்பன்…
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா…
World Television Premiere of Ashok – The Lion and Rajasingam to hit the screens this weekend on Colors Tamil
World Television Premiere of Ashok – The Lion and Rajasingam to hit the screens this weekend…
உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக அசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ்
உலக தொலைக்காட்சியில் முதன்முறையாகஅசோக் – தி லயன் மற்றும் ராஜசிங்கம் திரைப்படங்களை ஒளிபரப்புகிறது கலர்ஸ் தமிழ் அக்டோபர் 3 -ம் தேதி…