பூமர் அங்கிள்’ திரைப்பட விமர்சனம்!!

Share the post

பூமர் அங்கிள்’ திரைப்பட விமர்சனம்!!

அங்க மீடியா தயாரித்து,
சுதேஷ் எம்.எஸ்,இயக்கி வெளிவந்திருக்கும் படம் *பூமர் அங்கிள்’ !

யோகிபாபு, ஓவியா, பாலா, தங்கதுரை, சேசு மற்றும் பலர் நடித்துள்ளனர்!

இசை: சாந்தன் & தர்ம பிரகாஷ்

ரஷ்ய நாட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் யோகி பாபு, அவரிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சிக்கிறார்.!

விவாகரத்து கொடுக்க வேண்டும் என்றால், யோகி பாபுவின் பூர்வீக அரண்மனையில் சில நாட்கள் வாழ வேண்டும், என்று ரஷ்ய நாட்டு பெண் நிபந்தனை விதிக்கிறார்!

அவரது நிபந்தனைபடி, அந்த அரண்மனையில் சில நாட்கள் தங்கியிருக்க சம்மதிக்கும் யோகி பாபு, அரண்மனையின் மேல் பகுதிக்கு மட்டும் யாரும் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறார்!

ஆனால், ரஷ்ய நாட்டு பெண் மட்டும் அவ்வபோது அரண்மனையின் மேல்தளத்தில் உள்ள அறை ஒன்றில் நுழைய முயற்சித்து வருகிறார் !

இதற்கிடையே, யோகி பாபுவை பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் சேசு, தங்கதுரை, பாலா மற்றும் ஊர் தலைவர் ரோபோ சங்கர் ஆகியோரும் அந்த அரண்மனைக்குள் நுழைகிறார்கள் !

இவர்களுடன் திடீர் வருகையாக ஓவியாவும் அந்த அரண்மனைக்கு வர, இவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் கலாட்டாவும் , காமெடியும் தான் இப்படத்தின் கதை!

யோகி பாபு, வழக்கம் போல் நடிப்பு ,வசனம் ரசிகர்களை சிரிக்க வைக்க இருக்கிறது

.
சேசு, தங்கதுரை, பாலா, ரோபோ சங்கர் அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்!

ரஷ்ய நாட்டு பெண்ணாக நடித்திருக்கும் நடிகையும்,உதவியாளராக நடித்திருக்கும் நடிகையும் செய்யும் காமெடியும்,அரண்மனையை சுற்றி நடக்கும் மர்மங்களை படத்துக்கு பலம்!

சுபாஷ் தண்டபானி ஒளிப்பதி சிறப்பு !

சாந்தன் – தர்ம பிரகாஷ் இசையும் பாடல் லும் அருமை!

அரண்மனையில் நடக்கு,மர்மங்கள் நிறைந்த காட்சிகள் அருமை!

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் கதாபாத்திரங்கள் சிறப்பு அதில் லும் நம்ம ஊரு சக்திமானின் நகைச்சுவையும் சிறப்பாகவும் , புதுமையாகவும் வடிவம் அமைத்திருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டுக்கள்! இப்படம் குழந்தைகள் முதல் பெரிய வரை பார்க்க வேண்டிய படம் !!

மொத்தத்தில்,

*இந்த ‘பூமர் அங்கிள் அனைவரும் மனதிலும் இடம் பிடித்து உள்ளது!!
*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *