கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் வார காலக் கொண்டாட்டத்துடன் கர்நாடகத்தின் நாதஹப்பா தசராவைக் கொண்டாடும் BLR விமான நிலையம் !

Share the post

கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் வார காலக் கொண்டாட்டத்துடன் கர்நாடகத்தின் நாதஹப்பா தசராவைக் கொண்டாடும் BLR விமான நிலையம்

T1 மற்றும் T2 முழுவதும் பாரம்பரியக் கலை, பொம்மலாட்டம், நேரடி நிகழ்ச்சிகள், ஷாப்பிங் மற்றும் பங்கேற்பு அனுபவங்களை ஒன்றிணைத்து, பயணிகளையும் பெங்களூரு மக்களையும் இந்தக் கொண்டாட்டம் வரவேற்கிறது.

சென்னை:கெம்பேகவுடாசர்வதேசவிமான நிலையம் பெங்களூரு (BLR விமான நிலையம்), கர்நாடகத்தின் புகழ்பெற்ற திருவிழாவான நாதஹப்பா தசராவை அக்டோபர் 12 முதல் 17 வரை ஒரு வாரக் கலாசாரக் கொண்டாட்டமாகக் கொண்டாடவுள்ளது. உலகிற்கான பெங்களூருவின் நுழைவாயிலாக விளங்கும் BLR விமான நிலையம், நகரத்தின் விரிவாக்கமாகவும் கர்நாடகத்தின் கலாசார நுழைவாயிலாகவும் தன்னைப் பார்க்கிறது. மாநிலத்தின் மரபுகள், கதைகள் மற்றும் படைப்பாற்றல் மிக்க பாரம்பரியத்தைப் பயண அனுபவத்தின் ஓர் அங்கமாகக் கொண்டுவருகிறது. விமான நிலையம் முழுவதும் நடைபெறும் நேரடி நிகழ்ச்சிகள், கலை நிறுவல்கள், திருவிழா அனுபவங்கள் மற்றும் பங்கேற்பு நிகழ்வுகள் மூலம் கர்நாடகத்தின் கலை, மரபுகள் மற்றும் பாரம்பரியம் உயிர்ப்பிக்கப்படும்.

இந்த ஆண்டு, கர்நாடகத்தின் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதைக் கடந்து, கலாசாரத்தை அறிந்துகொள்வதைப் பயண அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த அணுகுமுறை மாற்றுகிறது. ஒவ்வொரு செயல்பாடும் கர்நாடகத்தின் உண்மையான கலை அல்லது கைவினை வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் மூலம் அவற்றின் பின்னணியில் உள்ள கதைகள், திறன்கள் மற்றும் மரபுகளுடன் பயணிகள் தொடர்புகொள்ள முடியும். இவ்வாறு, விமான நிலையம் திருவிழா அலங்காரத்திற்கான இடமாக மட்டுமல்லாமல், கர்நாடகத்தின் உயிரோட்டமுள்ள பாரம்பரியத்தைப் பயணத்தின் ஓர் அங்கமாகக் கொண்டுவருகிறது.

கொண்டாட்டங்கள் குறித்து பேசிய பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (BIAL) நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி ஷாலினி ராவ் கூறியதாவது: “BLR விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணியும் கர்நாடகத்தின் அன்பான வரவேற்பு, கலாசாரம் மற்றும் உணர்வைப் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் நாதஹப்பா தசரா கொண்டாட்டங்களின் மையமாக இந்த நம்பிக்கையே உள்ளது. இசை, நடனம், பொம்மலாட்டம், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் சிறப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு அனுபவங்கள் மூலம் மாநிலத்தின் செழுமையான பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கிறோம். அக்டோபர் 12 முதல் 17 வரை, பயணிகள், பார்வையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பெங்களூரு மக்கள் கர்நாடகக் கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைக் கொண்டாடும் ஆறு நாள் விழாவில் மூழ்கி அனுபவிக்கலாம். இந்த அனுபவங்கள் மூலம் மகிழ்ச்சி, புதிய கண்டுபிடிப்பு மற்றும் இணைப்பை உருவாக்கும் தருணங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு பார்வையாளரும் வரவேற்கப்பட்டதாகவும் நமது மாநிலத்தின் உணர்வால் ஊக்கமடைந்ததாகவும் உணரச் செய்ய விரும்புகிறோம். பயணம் உள்ளூர் கலாசாரத்தைச் சந்திக்கும்போது, நீடித்த நினைவுகளும் உண்மையான சொந்த உணர்வும் உருவாகின்றன—‘Feels Like BLR.’”

கர்நாடகத்தின் உணவு, கலை மற்றும் கைவினை மரபுகளைக் கொண்டாடுதல்

இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக, அக்டோபர் 12 முதல் 17 வரை T2 வருகைப் பகுதி முன்றிலில் (Arrival Forecourt) இடம்பெறும் தசரா கோம்பே காட்சியமைப்பு இருக்கும். பத்மஸ்ரீ விருது பெற்ற பொம்மலாட்டக் கலைஞர் அனுபமா ஹோஸ்கெரே இதனைத் தொகுத்துள்ளார். திருவிழா காலத்தில் பொம்மைகளை அலங்கரித்து காட்சிப்படுத்தும் கோம்பே ஹப்பா மரபை இந்தக் காட்சி மீண்டும் உயிர்ப்பிக்கிறது. பொம்மைகளுக்குப் பின்னால் உள்ள கதைகள், மரபுகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துகிறது. கர்நாடகத்தின் பொம்மலாட்ட மரபுகள், ஒன்பதாம் தலைமுறை பொம்மலாட்டக் கலைஞர் குண்டுராஜு மற்றும் அவரது குழுவினர் அக்டோபர் 16 அன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை T2 வருகைப் பகுதி முன்றிலில் வழங்கும் தொகலு கோம்பெயாட்டா நிகழ்ச்சியிலும் உயிர்ப்பெறும்.

T1 மற்றும் T2 முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் நேரடி அனுபவங்கள் மூலம் பயணிகள் கர்நாடகத்தின் கைவினை மரபுகளில் ஈடுபடலாம். சன்னப்பட்டணா அனுபவ மையத்தில் பாரம்பரிய அரக்கு பூசப்பட்ட மரப் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டலாம். டெரகோட்டா அனுபவ மையத்தில் மாநிலத்தின் டெரகோட்டா மரபுகளை அடிப்படையாகக் கொண்ட சிறு உருவங்களுக்கு வண்ணம் தீட்டும் அனுபவம் கிடைக்கும். கவடே தொகுத்துள்ள விளையாட்டுப் பகுதியில் ஹுலி குரி, சாலு ஆட்டா, அலிகுலிமனே, சௌகபாரா மற்றும் ஸ்பைரல் ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ் உள்ளிட்ட கர்நாடகத்தின் பாரம்பரியப் பலகை விளையாட்டுகள் இடம்பெறும்.

கர்நாடகத்தின் கலை மரபுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், உள்ளூர் கலை வடிவங்களை அன்றாடப் பயண அனுபவத்தில் கொண்டுவரும் BLR விமான நிலையத்தின் விரிவான Art & Culture திட்டத்தின் தொடர்ச்சியாகும். சன்னப்பட்டணாவின் பொம்மைத் தயாரிப்பு மரபால் ஈர்க்கப்பட்ட ‘Flights of Wonder’ முதல் டெரகோட்டா வடிவங்களால் ஈர்க்கப்பட்ட ‘Find Me a Love Song’ மற்றும் ‘Khora’ வரை, இந்தத் திட்டத்தில் கர்நாடகத்தின் பாரம்பரியப் பலகை விளையாட்டுகளும், மைசூரு மகாராஜா உருவாக்கிய விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்ட யயாதி கோட்போலேவின் 12 தரை உட்பதிப்பு கலைப்படைப்புகளும் இடம்பெறுகின்றன.

இந்தக் கலாசார வெளிப்பாடு விமான நிலையத்தின் பிற பகுதிகளிலும் விரிகிறது. கர்நாடகத்தால் ஈர்க்கப்பட்ட செடித் தொட்டிகள், தசரா குடைகள், சின்னங்கள் மற்றும் கலை நிறுவல்கள், பெங்களூரு டியூட்டி ஃப்ரீயில் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட யானை, மேலும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் டொல்லு குணிதா நிகழ்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.

சமையல் கலைஞர் ரன்வீர் பிரார் மற்றும் 080 Lounges உடனான கூட்டணியில் ‘A Dasara Challenge. A Karnataka Answer.’ என்ற முயற்சியின் மூலம் கர்நாடகத்தின் உணவு மரபுகளும் கொண்டாட்டத்தில் இடம்பெறும். தசராவுக்காகத் தாங்கள் பெருமைப்படும் சமையல் குறிப்பைப் பகிருமாறு கன்னடர்களைச் சமையல் கலைஞர் அழைப்பார். தேர்ந்தெடுக்கப்படும் சமையல் குறிப்பு 080 சமையல் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டு, அக்டோபர் 20 தசரா நாளன்று பங்கேற்கும் 080 Lounges-இல் பயணிகளுக்கு வழங்கப்படும்.

BLR விமான நிலையத்தின் விரிவான ‘Feels Like BLR’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, இந்தக் கொண்டாட்டங்கள் கர்நாடகத்தின் கலை, கலாசாரம் மற்றும் மரபுகளைப் பயண அனுபவத்தில் கொண்டுவரும். இதன் மூலம் பெங்களூரு, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு, மாநிலத்தின் நுழைவாயிலிலேயே அதன் துடிப்பான கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் அனுபவம் கிடைக்கும்.

BIAL பற்றி:

பெங்களூரு இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (BIAL) நிறுவனத்தால் இயக்கப்படும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு (BLR விமான நிலையம்), FY 2025-ஐ முக்கிய செயல்திறன் அளவுகோல்களில் வலுவான முடிவுகளுடன் நிறைவு செய்தது. 4.48 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்குச் சேவை வழங்கிய தென்னிந்தியாவின் முதல் விமான நிலையமாக இது திகழ்ந்து, ACI Large Airport பிரிவில் இடம்பிடித்தது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமாக, திறக்கப்பட்டதிலிருந்து பயணித்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை பிப்ரவரி 2025-இல் 35 கோடியைக் கடந்தது. BLR விமான நிலையத்தின் டெர்மினல் 2, Skytrax-இன் 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற இந்தியாவின் முதல் விமான நிலைய முனையமாகும். சேவைச் சிறப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், வாடிக்கையாளர் அனுபவத்திற்கான மதிப்புமிக்க ACI 5-star Airport Rating-ஐப் பெற்ற உலகின் சில விமான நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். சரக்குப் போக்குவரத்துப் பிரிவில், அழுகக்கூடிய சரக்குகளைச் செயலாக்குவதில் BLR விமான நிலையம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்தியாவின் முதலிட விமான நிலையமாக உள்ளது. BIAL-இன் வளர்ச்சிக்கு அதன் பெரும்பான்மை தனியார் முன்னோடியான Fairfax India Holdings Corporation ஆதரவளிக்கிறது. கணிசமான முதலீட்டின் மூலம் விமான நிலையத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தை விரைவுபடுத்துவதில் Fairfax முக்கியப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *