“பெத்லகேம் குடும்ப யூனிட்”திரை விமர்சனம் !

Share the post

” பெத்லகேம் குடும்ப யூனிட் ” – என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :

கதைச்சுருக்கம் :- ” ” “
“காதலுக்கு கண்ணில்லை” என்னும் பழமொழிக்கு ஏற்ப கதை நாயகனுக்கு நடுத்தர வயது. கதை நாயகி கல்லூரி மாணவி . இவர்களுக்கு இடையே மலரும் காதல் கதை தான் ” பெத்லகேம் குடும்ப யூனிட் “

காதல் ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் வந்து போகும் வசந்தம். வசந்தம் புயலாக மாறுவதும் வசந்தம் இளந் தென்றலாக மாறுவதும் அவரவர் வாழ்வைப் பொருத்து அமையும். உலகில் உள்ளோர் அத்தனை நபர்களும் காதலிக்கின்றார்களா ? அதுதான் இல்லை. காதலிப்பதும் , காதலிக்காமல் இருப்பதும் அவரவர் மன நிலையைப் பொருத்தது . கதைக்கு வருவோம் .

காதல் சுகமானது. அந்த சுகமே சுமையாகப் போனால் வாழ்க்கை என்னாவது ?

காதலி இறந்த துக்கத்தில் நிம்மதி இன்றி வாழும் நடுத்தர வயதுக்காரர் நிவின் பாலி. இவர் வீட்டுப் பக்கத்தில் பக்கத்து வீட்டு பருவநிலா மமிதா பைஜூ என்னும் கல்லூரி மாணவி. தன் குடும்பம் சகிதமாக குடியேறுகிறார்.

நிவின் பாலியும் மமிதா பைஜூம் ஆரம்பத்தில் நட்பாக பழகி… அந்தப் பழக்கமே வழக்கமாகி இறுதியில் காதலில் முடிகிறது. காதல் என்று சொன்ன உடனே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

இவர்களின் காதல் உணர்வுகளின் மென்மை , அதன் மூலம் நடக்கும் களேபரங்கள். நெஞ்சைத் தொடும் விதத்தில் அமைந்திருப்பதோடு அல்லாமல் நகைச்சுவை உணர்வை இடையிடையே ஊட்டி நம்மை சிரிக்க வைத்து ,மகிழ்ச்சி அடையும் படி கதை நகர்கிறது.

காதலனுக்கும் காதலிக்கும் சம வயது இருக்கலாம் ; ஒன்று இரண்டு வயது வித்தியாசம் இருக்கலாம். ஒரேயடியாக வயது வித்தியாசம் அதிகம் இருந்தால் நிலைமை என்னாவது ? இதனை கதை நாயகன் உடல் மொழியால் கதை நாயகிக்கு புரிய வைக்கிறார்.

கதை நாயகி குறும்புக்கார பெண். இவளின் செயலினால் கதை நாயகன் வெட்கப் படுவதும்.மீண்டும் ஒரு காதல் தோல்வியினால் மனம் கலங்குவதும் இரசிகர்களின் நெஞ்சைத் தொடுகின்றன.

உணர்வுகளின் பிரதிபலிப்பை தன்னுடைய பண்பட்ட நடிப்பால் உயர்ந்து நிற்கின்றார் கதை நாயகன் நிவின் பாலி.

குறும்புக்கார கல்லூரி மாணவியாக வலம் வருபவர் மமிதா பைஜூ. தன்னுடைய சுட்டித்தனமும் , உடல்மொழியால் தன் உணர்வுளை வெளிப்படுத்தும் விதமும் மிக அருமை .

வயது வித்தியாசத்தை பெரிதும் கவலைப்படாமல் காதலை அவர் பயன்படுத்தும் விதம் இரசிகர்களை தம் பால் கவர்ந்து இழுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

துணை திரை நட்சத்திரங்கள் :-
பிரதான கதாபாத்திரங்கள் திரையில் பவனி வந்தாலும் கதைக்கு பக்க பலமாக இருப்பது துணைக் கதாபத்திரங்களில் மின்னும் துணை நடிகர்களே .அந்த வரிசையில் சங்கீத் பிரதாப் , பிந்து பணிக்கர் , சுரேஷ் கிருஷ்ணா , வினய் ஃபோர்ட் , ஸ்ரிந்தா , ஷமீர்கான் , மீனாட்சி ரவீந்திரன் , அயசங்கர் கரி முட்டம் , தங்கம் மோகன் , வெட்டுக்கிளி பிரகாஷ் இவர்கள் அத்தனை பேரும் தத்தம் கதாபாத்திரங்களை உணர்ந்து மிகச் சிறப்பாக நடிக்க வைத்த இயக்குநர் கிரிஷ் ADக்கு தனி பாராட்டு.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- கிரிஷ் AD.
சாதாரணமான ஒரு கதை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கு ஏற்ற வகையில் திரைக்கதையை அமைத்து , எளிமையாக புரிந்து கொள்ளும் விதமாக கதையை நகர்த்திச் செல்லும் இயக்குநருக்கு ஒரு பாராட்டு.

இப்பொழுது எல்லாம் கதை ஆசிரியரோடு சேர்ந்து தானும் கதை எழுவதில் தன் பங்கைச் செலுத்தி கூடுதல் திரைக்கதை வசனம் எழுதுவதில் கவனம் செலுத்தி திரையில் மிளிரச் செய்யும் இயக்குநர் வரிசையில் இத் திரைப்படத்தின் இயக்குநர் கிரிஷ் AD யும் சேருகிறார். இதனை வரவேற்கலாம் , துணிச்சலாக பாராட்டலாம்.

கதை திரைக்கதை கிரிஷ் AD மற்றும் கிரண் ஜோசி இவர்களின் எழுத்து வண்ணம் மிக அருமை. உணர்வு பூர்வமான விஷயங்கள் படத்திற்கு மேலும் வலு ஊட்டுகின்றன. காதல் மனத்தைத் தொடுகிறது. நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. மொத்தத்தில் இப் படம் இதயத்தை தொடுகிறது.

ஒளிப்பதிவாளர் :-
இயக்குநரின் எண்ணங்களைத் திரையில் கொண்டு வருபவரே சிறந்த ஒளிப்பதிவாளர். அந்த வகையில் இப் படத்தின் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு. இவரைப் பற்றி சில தேன் துளிகள் இதோ !

கதை பயணம் செய்யும் நகரம் , அங்கே இருக்கும் தேவாலயம் , அருகே அருகே இருக்கும் வீடுகள் . இவை எல்லாம் நம் மனக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு. காதல் உணர்வுகளை , நகைச்சுவைக் காட்சிகளை திரையில் கொண்டு வந்து நிறுத்தி அசத்தி இருக்கின்றார். இத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்.

படத் தொகுப்பாளர் :- ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்.
காதல் கதை ஒன்றை இப்படியும் சொல்லலாம் என்று நிரூபணம் செய்து இருக்கின்றார். இவரின் படத்தொகுப்பு படத்திற்கு ஒரு மைல் கல்.ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நல்ல படத் தொகுப்பே அதனை மிகச் சிறப்பாக செய்து இருக்கின்றார் இவரை நாமும் பாராட்டுவோம் !

இசையமைப்பாளர் :-
ஒரு படத்திற்கு பக்க பலமாக இருப்பது நல்ல இசை தான். விஷ்ணு விஜய் இசையில் உருவான பாடல்கள் கேட்கும் படி உள்ளன. இவரின் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்திருப்பது பாராட்டக் கூடியது. காதல் உணர்வுகளை தன் இசையின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார். வசனம் சொல்லாத உணர்வுகளை தன் பின்னணி இசை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் பாராட்டுவோம்.

மமிதா பைஜூவைப்பற்றி சில வரிகள் :-
காதலில் உழன்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறி பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி சினிமாவில் தன்னை தக்க வைத்துள்ளார். கரம் தட்டுவோம்… பாராட்டுவோம்.

பெத்லகேம் குடும்ப யூனிட் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்ந்த போது எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு வித்தியாசமான கதை. அதனை திரையில் இலாவகமாக கையாண்டு மக்கள் மனத்தில் நீங்க இடம் பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இவர்களைப் பாராட்டி வரவேற்போம். எங்கள் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி பாராட்டி மகிழ்கிறது. மறுமுறை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் , ஓகே டேக் ராஜேஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *