காதலி மனைவி யானாள் மனைவி கொலையானாள் கணவன் அதிர்ச்சி கருப்பட்டி படத்தில்!

Share the post

காதலி மனைவியானாள் மனைவி கொலையானாள் கணவன் அதிர்ச்சி!


கொளத்தூர் என்ற கிராமத்தில் கதையின் நாயகனான கருப்பட்டி என்ற பார்த்திபன் தாயுடன் வசித்து வருகிறான். அதே கிராமத்தில் தந்தையுடன் வசித்து வரும் பவானியை காதலிக்கும் கருப்பட்டி அவளையே திருமணம் செய்து கொள்கிறான் . திரு மணம் முடித்த சில நாட்களில் பவானி மர்மமான முறையில் இறக்கிறாள் . அதன் பிறகு பவானி ஆவியாக மாறி அனைவரையும் மிரட்டுகிறாள். இதை அறிந்து கொண்ட கருப்பட்டி அவளை கொலை செய்தது யார்? எப்படி அவள் இறந்தாள் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அப்பொழு அவன் பல திடுக்கிடும் சம்பவங்களை சந்திக்கிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்மமாகவும் திகிலாகவும் அனைவரையும் மிரட்டுவதாகவும் இருக்கிறது. இப்படி ஒரு கதைக்களத்தில் உருவாகி வரும் ஆக்சன் திரில்லர் திரைப்படம் தான் மோனிதா மூவிஸ் தயாரிப்பில் விஜயராஜ் கதையின் நாயகனாக நடிக்கும் “கருப்பட்டி.” திரைப்படம்.

விஜயராஜ், சமந்து, ஹரிணி தா, கராத்தே ராஜா, ரஞ்சன், ஜிப்சி ராஜ்குமார், கிளி ராமச்சந்திரன், சித்திரகுப்தன், ரமேஷ், கலைவாணி, ரஷீத் சத்யராஜ், செண்பகவள்ளி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

சேலம் மேட்டூர் மற்றும் செஞ்சி அதனை சுற்றியுள்ள இடங்களில் செந்தில் மாறன்- கவிநாதன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவை கவனித்துள்ளனர். இசையமைத்து எடிட்டிங்கையும் டி. எஸ். திவாகர் கவனிக்க ஹிஜாஸ் அகமது பாடல்களை எழுதி உள்ளார். ராம் முருகேஷ் நடன பயிற்சியையும், ரமேஷ் சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

கதையின் நாயகனாக கருப்பட்டி பாத்திரத்தில் நடித்து தமது மோனிதா மூவீஸ் நிறுவனம் சார்பில் ” கருப்பட்டி ” படத்தை பொழிச்சை சி. ராஜ்குமார் தயாரிக்கிறார்.

காதல்பதிவு, நந்திவரம், சினிமா கனவுகள், கொலை தூரம் படங்களை இயக்கிய பிரபு ராமானுஜம் கருப்பட்டி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது ஐந்தாவது படமாக இயக்கி வருகிறார்.

N. விஜயமுரளி
PRO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *