உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது

உலகத் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘உள்குத்து’திரைப்படம் ஒளிபரப்பாகிறது நகைச்சுவையும், பழிவாங்கலும் இணைந்த கதைக்கருவைக் கொண்ட  இத்திரைப்படத்தை  மார்ச் 20 ஞாயிறன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு ரசிக்கலாம் சென்னை, மார்ச் 18, 2022 :   உள்குத்து திரைப்படத்தின் உலகத்தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மார்ச் 20ம் தேதி, ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு, ஒளிபரப்பாகிறது.  உள்ளூர் தாதா ஒருவரோடு, மோத வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கைப் பயணத்தை இக்கதை சித்தரிக்கிறது. பழிவாங்கல், டிராமா மற்றும் நகைச்சுவை கலந்த இக்கதையைக் கண்டு ரசிக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.  கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகர் ‘அட்டகத்தி’ தினேஷ் மற்றும் நடிகை நந்திதா ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் உள்குத்து திரைப்படம், பொழுதுபோக்கு அம்சத்துடன், இழைக்கப்பட்ட அநீதிக்கு பழிவாங்குகின்ற உணர்வை விவரிக்கின்றது.  நடிகர் பால சரவணன் நகைச்சுவையை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகை சாயா சிங், சண்டைப்பயிற்சி இயக்குனரும், நடிகருமான திலீப் சுப்பராயன், நடிகர் சரத் லோஹித்அஷ்வா மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். அமைதியும், அழகும் ததும்பும் கடற்கரை நகரத்தைப் பின்புலமாக கொண்ட ‘உள்குத்து’, திரைப்படமானது, தனது சகோதரியின் மரணத்திற்கு பழிதீர்ப்பதற்காக மக்கள் பெரிதும் அஞ்சுகின்ற கந்துவட்டி தாதாக்களான காக்கா மணி (சரத் லோஹித்அஷ்வா நடிப்பில்) மற்றும் அவரது மகன் சரவணன் (திலீப் சுப்பராயன் நடிப்பில்) ஆகியோரை தேடி அலைகின்ற ராஜா என்ற இளைஞனைச் (நடிகர் தினேஷ் நடிப்பில்) இக்கதை சுற்றி நகர்கிறது.  இந்த தேடலின்போது மீன்பிடிப்பு கிராமத்தில் சுறா சங்கர் (பால சரவணன் நடிப்பில்) என்பவரோடு அவரின் நட்பு வளர்கிறது.  அவரது சகோதரியான கடலரசியை (நந்திதா சுவேதா நடிப்பில்) திருமணம் செய்து கொள்ளுமாறு சுறா சங்கர் விரும்புகின்ற நிலையில் திரைக்கதை அதிரடி திருப்பத்தை எதிர்கொள்கிறது.  சரவணனை தாக்கி, அவனை அவமானத்திற்கு ஆளாக்கும் நிலைக்கு ராஜா தள்ளப்படுகிறார்.  இந்த மோசமான தாதாக்களின் பிடியிலிருந்து ராஜாவால் விடுபட முடிந்ததா? தனது சகோதரியின் மரணத்திற்கு ராஜா பழிவாங்குவானா? முடிவு என்னவாகிறது என்று அறிய ‘உள்குத்து’ திரைப்படத்தை கண்டு ரசியுங்கள். உலகளவில் சின்னத்திரையில் முதன் முறையாக இத்திரைப்படம் ஒளிப்பரப்பாவது குறித்து இதன் இயக்குனர் கார்த்திக் ராஜு கூறியதாவது: “இத்திரைப்பட உருவாக்கத்திற்காக நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகளை கருத்தில் கொள்ளும்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதன் ப்ரீமியர் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் அளிக்கிறது. மிக அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை எனது திரைப்படம் இதன் மூலம் சென்றடைவது உறுதி.   பழிவாங்கல் மற்றும் நகைச்சுவை என்ற இரண்டு வெவ்வேறு அம்சங்களை இத்திரைப்படம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது.  இது எளிதானதாக இருக்கவில்லையென்றாலும், இப்புதிருக்கான அனைத்துப் பகுதிகளும் மிகச் சரியாகப் பொருந்தியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.” இத்திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் தினேஷ் பேசுகையில், “எனது முந்தைய திரைப்படங்களின் கதாபாத்திரங்களோடு ஒப்பிடுகையில், இத்திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் வேறுபட்டு தனித்துவமானதாக இருப்பதால், முற்றிலும் ஒரு புதிய தோற்றத்தை இது எனக்குத் தந்தது.  ரகசியமான திட்டங்களையும், பல்வேறு மறைவான விஷயங்களையும் கொண்டிருக்கின்ற ஒரு மாஸ் ஹீரோவாக இத்திரைப்படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவுமே பிடித்திருந்தது.  கலர்ஸ் தமிழ் போன்ற தமிழ்நாட்டின் பிரபல சேனலில் இத்திரைப்படம் ஒளிபரப்பப்படுவதால், தங்களது குடும்பதோடு சேர்ந்து அமர்ந்து வாய்விட்டு சிரிப்பதோடு, அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டு தங்களது இருக்கையின் முனைக்கே பார்வையாளர்கள் வந்துவிடுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று கூறினார். இந்த அற்புதமான பொழுதுபோக்கு திரைப்படத்தைக் கண்டு…

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது !

பிச்சைக்காரன் 2 படத்தில், #AntiBikili ஆண்டி – பிகிலி தீம் பாடல் வெளியான வேகத்தில் வைரல் ஹிட்டாகியுள்ளது ! விஜய் ஆண்டனியின்…

Vijay Antony’s Anti-Bikili Theme song becomes a raging hit!!!

Vijay Antony’s Anti-Bikili Theme song becomes a raging hit!!! The recently unveiled track ‘Anti-Bikili Theme Song’…

“யுத்த சத்தம்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“யுத்த சத்தம்”  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ! இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரில்லர்  திரைப்படம் “யுத்த…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடிக்கும் புத்தம்புதிய நெடுந்தொடர் மீரா!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடிக்கும் புத்தம்புதிய நெடுந்தொடர் மீரா! பெண்மையின் மாண்பை கவுரவிக்கும் சின்னத்திரையில் புது கதை! ~எந்தவொரு…

Women’s Day Special Hijama Therapy By Al-Shifa The Cupping Clinic

Women’s Day Special Hijama Therapy By Al-Shifa The Cupping Clinic Chennai, 08th March, 2022: At the…

HOW PENN, A TAMIL NADU BASED ORGANISATION, FIGHTS SEXUAL VIOLENCE THROUGH AWARENESS RAISING AND EMPOWERMENT

HOW PENN, A TAMIL NADU BASED ORGANISATION, FIGHTS SEXUAL VIOLENCE THROUGHAWARENESS RAISING AND EMPOWERMENTNew Advisory Board…

Canadian Wood announces the launch of WoodNiido WFC House in Chennai

Canadian Wood announces the launch of WoodNiido WFC House in Chennai • Collaboration with Chennai based…

துணிந்து இறங்கி செய்த படம் “மாநாடு” . இன்று தன்னம்பிக்கையின் உச்சமாய் நூறாவது நாளைத் தொட்டிருக்கிறது.

எண்ணித் துணிக கருமம் என்ற வள்ளுவன் நமக்கு எப்போதுமே சிறந்த மோட்டிவேட்டர். தயங்கி நிற்கும்போதெல்லாம் “துணிந்து இறங்கு” எனத் தட்டிக் கொடுப்பவர்.…

கலைஞர் டிவியில் ஜி.வி.பிரகாஷின் “ஜெயில்”

கலைஞர் டிவியில் ஜி.வி.பிரகாஷின் “ஜெயில்” புத்தம் புதிய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என உங்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற மார்ச் 13-ந் தேதி மதியம்…