அமேசான் ப்ரைம் வீடியோ ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே -இன் உலகளாவிய பிரீமியரை அறிவிக்கும் இத்தருணத்தில் இந்த தசரா அவரது சினிமா வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடுகிறது

Share the post

அமேசான் ப்ரைம் வீடியோ ஜோதிகாவின் 50 வது படமான உடன்பிறப்பே -இன் உலகளாவிய பிரீமியரை அறிவிக்கும் இத்தருணத்தில் இந்த தசரா அவரது சினிமா வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லைக் கொண்டாடுகிறது

உடன்பிறப்பே அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் இடையேயான நான்கு படங்களுக்கான கூட்டு ஒப்பந்ததின் இரண்டாவது படமாகும்.

எரா சரவணன் இயக்கி எழுதி, ஜோதிகா, சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, இதயத்திற்கு இதமான குடும்பபாங்கான திரைப்பட ம் 14 அக்டோபர் 2021 அன்று 240 நாடுகள் அமேசான் பிரைம் வீடியோவில் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) பிரத்தியேகமாகத் திரையிடப்படும்.

சென்னை, செப்டம்பர் 30, 2021:ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (RARA) வெற்றிகரமாக தொடங்கப்பட்ட பிறகு, அமேசான் பிரைம் வீடியோ சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் உடனான நான்கு திரைப்படத்துக்கான கூட்டுஒப்பந்ததின் இரண்டாவது படமான உடன்பிறப்பே தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) உலகளாவிய பிரீமியரை அக்டோபர் 14, 2021 அன்று வெளியிடுகிறது. திரையுலகில் அவரது நினைவுகூரத்தக்க பயணம் மற்றும் அவரது திரைவாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்லை கௌரவிக்கும் வகையில், உடன்பிறப்பே ஜோதிகாவின் 50 வது திரைப்படம் ஆகும். ஏரா சரவணன் எழுதிஇயக்கிய, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பபாங்கானபடத்தில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி மற்றும் பலர் அடங்கிய குழுவினர் நடித்திருக்கின்றனர்.

உணர்ச்சிபூர்வமான சக்திவாய்ந்த கதையில் குடும்ப உறவுகளால் வலுவாக பின்னப்பட்டிருக்கும் உடன்பிறப்பே சகோதரப்பாசம், காதல், மற்றும் செண்டிமென்ட் கலந்தகதை ஆழமாக வேரூன்றியுள்ளது.

உடன்பிறப்பே –ஐ சூர்யா- ஜோதிகா மற்றும் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி L ரூபென் படத்தை தொகுத்துள்ளார் மற்றும் D இம்மான் இசையமைத்துள்ளார்.
Placeholder for poster links:

https://www.instagram.com/p/CUcbR_FrfFr/?utm_source=ig_

https://twitter.com/PrimeVideoIN/status/1443539672181837833?s=20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *