
அமரம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-
மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் இப் படத்தின் நாயகன் அருகன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் ராஜன் தேஜஸ்வர். அருகன் வாழ்க்கையில் எந்தவித பிடிப்பும் இல்லாமல் , எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் முரட்டுத்தனமான வாழ்க்கையே தன் இலட்சியமாக சுற்றித் திரியும் அருகன். அவர் அந்தப் பகுதியில் வசித்து வரும் முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்து கொலை செய்யும் நபராக மாற்றப்படுகிறார்.
முதலாளிகளின் கைக்கூலியாக மாறும் அருகன் மேலும் கொலைகளை செய்து விடுகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் கதாநாயகி பாரதி கதாபாத்திரம் ஏற்ற ஐரா அகர்வாலின் தந்தையை கொலை செய்யும் பொறுப்பும் அவருக்கு வருகிறது.அந்தக் கொலையை அருகனே செய்கிறார்.
தன் தந்தையின் மரணத்திற்கு காரணமானவரை பழி வாங்க அருகனைத் தேடி கிராமத்திற்கு வருகிறார் பாரதி .
அரசியல் பின்னணிக் கொண்ட அரசியல் வாதி உடன் வர அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது.
அமரம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைச்சுருக்கம் :-
மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் ராஜன் தேஜஸ்வர் எந்தவித கொள்கை பிடிப்பும் இல்லாமல் , முரட்டுத்தனமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் ராஜன் தேஜஸ்வர் அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் முதலாளிகளுக்கு கைக்கூலியாக மாறுகிறார். அடுக்கடுக்காக கொலையும் செய்து விடுகிறார்.
கதாநாயகி ஐரா அகர்வாலின் தந்தையும் அதில் ஒன்று .தன் தந்தையை கொலை செய்த ராஜன் தேஜஸ்வரை தேடி கிராமத்திற்கு வருகிறார்.
ஐரா அகர்வாலின் தந்தையின் கொலைக்கு காரணமான ராஜன் தேஜஸ்வரை தேடி வந்து பழி வாங்கத் துடிக்கிறார் ஐரா அகர்வால். அவருடன் அரசியல் பின்னணி கொண்டவர்கள் ஒன்று சேருகின்றனர். இந்த நிலையில் அங்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அந்த சம்பவம் என்ன ? அந்தச் சம்பவத்திற்கு பின்பு ராஜன் தேஜஸ்வர் – ஐரா அகர்வால் வாழ்க்கை எந்த திசையில் பயணம் செய்கிறது ? என்பதற்கான விடையைத் தேடுவதே மீதிக் கதை .
திரை நட்சத்திரங்கள் :-
அருகன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் ராஜன் தேஜஸ்வர். அவர் பேசுவது குறைவு உடல் மொழியால் அசத்துகிறார். பார்வை மூலம் கதாபாத்திரத்தை நகர்த்துகின்றார். இன்னும் கொஞ்சம் செய்திருக்கலாமே .
தான் ஏற்றக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ராஜன் தேஜஸ்வர். முரட்டுத்தனத்தை காட்டுகிறார். கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.
அதிரடி சண்டைக் காட்சிகளில் தன் கவனத்தை செலுத்தி பார்வையாளர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து கதாநாயகனின் அந்தஸ்த்தை தக்க வைத்திருக்கின்றார்.
படத்தின் இறுதிக் காட்சியில் ராஜன் தேஜஸ்வரின் அதிரடி படத்திற்கு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கதாநாயகியாக நடித்துள்ள ஐரா அகர்வால் இப்படத்திற்கு வைரத்தூண். கதையின் போக்கையே மாற்றும் முக்கியமான கதாபாத்திரம். கொடுத்த வேலையை கன கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
தந்தையை இழந்த வலி மனத்தைக் காயப்படுத்துகிறது. அதனால் ஏற்படும் கோபம் பழி வாங்கத் துடிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் உயிர் ஊட்டி தன்னை இவரும் தக்க வைத்திருக்கின்றார்.
துணை திரை நட்சத்திரங்கள் :-
திரைக்கு இவர்களும் உறுதுணையாக நின்று கதைக்கு மேலும் வலுவூட்டுகின்றனர்.
ஜார்ஜ் , சாய் தீனா , நாகிநீடு , கல்கி ராஜன் , ஹரிஷ் பெராடி , வாசுதேவன் முரளி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
குறிப்பாக கிராமத்தின் அதிகார தோரணை , அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம், சூழல் இவைகளை உணர்ந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் நிறை குறைகள் :-
நிறை :-
வித்தியாசமான கதை . வித்தியாசமான கதைக்களம் கையில் எடுத்திருப்பது இயக்குநரின் திறமைக்கு இது ஒரு சவால்.
மலைவாழ் மக்களின் இருட்டு வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வருது மிகப் பெரிய கன்னி முயற்சி.
கதாநாயகன் ராஜன் தேஜஸ்வரின் உடல்மொழி , அதிரடி காட்சிகள் ,நடிப்புத் திறமை , மற்றும் கதாநாயகி ஐரா அகர்வாலின் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரம். அதனை உணர்ந்து அவர் நடித்திருப்பது பாராட்டுக்குரியது .
படத்தின் இறுதிக் காட்சியில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
குறை :-
திரைக்கதைக்கு ஒட்டாத பாடல்கள்.
ஒரு சில காட்சிகள் திரைக்கதையில் வலுவிழக்கச் செய்கின்றன.
இறுதிக் காட்சியில் தொய்வு . கவனம் செலுத்தியிருக்கலாம்.
இரண்டாம் பாதியில் ஓட்டம் குறைவு .
முதல் பாதியில் விறு விறுப்பு. இதனை சரி செய்து இரண்டாம் பாதியை தூக்கி நிறுத்தியிருக்கலாம்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :- ஒளிப்பதிவாளர் :- பரத் குமார்.ஒளிப்பதிவு படத்தின் தனித்துவமானது. வழக்கமான கிராமத்தின் கதையைத் தாண்டி திரையில் காட்டியிருப்பது ஒளிப்பதிவாளரின் தனிச் சிறப்பு.
இசை :- மிக்கி ஜெ.மேயர். இவரின் இசை கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது. பாடல்களுக்கு மெட்டமைத்து கொடுத்திருப்பது சிறப்பு. இருப்பினும் பாடல்கள் கதையோடு ஒட்டவில்லை. சற்று வருத்தமே !
திரைவிமர்சனத்தில்
” அமரம் ” என்னும் திரைப்படத்தை பார்க்கலாம். மலைவாழ் மக்களின் இருண்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து இருக்கின்றார்கள். மலைவாழ் மக்களின் அடிமை வாழ்க்கை கேட்கும் போது மனத்திற்குள் ஓர் நெருடல் ஏற்படுகிறது. அவர்களின் முன்னேற்றத்திற்கு ஒரே வழி கல்வி தான்.எங்களின் பத்திரிகை நடுநிலையாக நின்று தீர்ப்பு வழங்குகிறது. இன்னொரு திரை விமர்சனத்தில் சந்திப்போம். என்றும் உங்களுடன் பயணிக்கும் கவிஞர் மாத்தூர் அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ஓகே டேக் ராஜேஷ்