ஆகாஷ் பைஜுவின் ANTHE 2023: தேசிய திறன் தேடல் தேர்வு VII-XII – ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும் 100% ஸ்காலர்ஷிப்களையும் வழங்குகிறது

Share the post

ஆகாஷ் பைஜுவின் ANTHE 2023: தேசிய திறன் தேடல் தேர்வு
VII-XII –
ம் வகுப்பு மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளையும் 100% ஸ்காலர்ஷிப்களையும் வழங்குகிறது

  • ஆகாஷ் இன்ஸ்டிடியூட்டின் தேசிய அளவிலான ஸ்காலர்ஷிப் தேர்வான ANTHE, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இருவழிமுறைகளிலும் 2023 அக்டோபர் 7-15 நாட்களில்  VII-XII – ம் வகுப்பு மாணவர்களுக்காக நடைபெறும்
  • 100% வரை ஸ்காலர்ஷிப்கள் வழங்கப்படும்; ரொக்கப்பரிசுகள் 700 மாணவர்களுக்கு தரப்படும்
  • பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தேசிய அறிவியல் சாகசப் பயணத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்
  • கடந்த ஆண்டு 16.5 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வை எழுதியது ஒரு சாதனை நிகழ்வாக அமைந்தது
  • NEET UG 2023 AIR 3, 5, 6 மற்றும் JEE Advance 2023 AIR 27, 28 ஆகிய தேர்வுகளில் முதலிடம் பெற்ற பல சாதனையாளர்கள்   ANTHE – லிருந்து அவர்களது பயணத்தை தொடங்கியிருக்கின்றனர்.

சென்னை: ஜுலை 26, 2023: தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான ANTHE தேர்வின் 14-வது பதிப்பு (ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் -2023) நடைபெறவிருப்பதை இன்று அறிவித்திருக்கிறது.  100% வரை ஸ்காலர்ஷிப்களையும் மற்றும் சிறப்பான ரொக்க விருதுகளையும் பெறும் வாய்ப்புடன் தங்களது திறனை VII-XII – ம் வகுப்பு மாணவர்கள் வெளிப்படுத்த இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது.  மருத்துவம் அல்லது பொறியியலில் நம்பிக்கையளிக்கும் எதிர்காலத்தின் கனவுகளை நனவாக்குவதற்காக இளம் மாணவர்களுக்கு திறனளிக்கும் ANTHE 2023 வெற்றிக்கான சிறப்பான நுழைவாயிலாக நிச்சயம் இருக்கும். 

ANTHE ஸ்காலர்ஷிப்பை வெல்பவர்கள், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து NEET, JEE, மாநில CETs, பள்ளி/போர்டு தேர்வுகள் உட்பட, பல்வேறு தேர்வுகளுக்கு தயாரிக்கவும் மற்றும் NTSE மற்றும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டித் திறனுள்ள ஸ்காலர்ஷிப்களுக்கு தகுதி பெறவும் நிபுணத்துவ வழிகாட்டலையும், ஆலோசனையையும் பெறலாம்.

பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த குழு மாணவர்களுக்கு 5 நாட்கள் நடைபெறுகின்ற தேசிய அறிவியல் சாகச பயணத்தில் இடம்பெறும் வாய்ப்பும் இந்த ஆண்டு மாணவர்களுக்காக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும். இதற்கான அனைத்து செலவுகள் ஆகாஷ் நிறுவனத்தால் ஏற்கப்படும்.

கடந்த பல ஆண்டுகளாகவே நீட் (UG) மற்றும் JEE (அட்வான்ஸ்டு) போன்ற தேர்வுகளில் தரவரிசையில் முதலிடங்களை ஆகாஷ் பைஜுவின் பல மாணவர்கள் பிடிப்பதற்கு ANTHEதேர்வு உதவியிருக்கிறது.  ANTHE வழியாக, ஆகாஷில் தங்களது கல்வி பயணத்தை தொடங்கிய பலருள் கௌஸ்தவ் பௌரி (AIR 3), துருவ் அதானி (AIR 5), மற்றும் சூர்யா சித்தார்த் N (AIR 6), NEET (UG) 2023 சாம்பியன்களாக உருவெடுத்திருக்கின்றனர். அதைப்போலவே ஆதித்யா நீரஜ்  (AIR 27) மற்றும் ஆகாஷ் குப்தா (AIR 28) ஆகியோரும் JEE (அட்வான்ஸ்) 2023 – ல் சாதித்திருக்கின்றனர். 

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) – ன் தலைமை செயல் அலுவலர் திரு. அபிஷேக் மகேஷ்வரி, ANTHE 2023 குறித்து கூறியதாவது: கனவுகள் மற்றும் சாதிக்கு; திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்களின் பேரார்வங்களை பூர்த்தி செய்யும் வினையூக்கியாக ANTHE இருந்து வருகிறது.  2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே அமைவிட ரீதியிலான தடைகளை உடைத்து, நாடெங்கிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு எமது கோச்சிங் (பயிற்சி) வாய்ப்புகளை வழங்குவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சித்திருக்கிறோம்.  அவர்கள் யாராக இருப்பினும், அவர்களது சொந்த வேகத்தில் NEET மற்றும் IIT-JEE தேர்வுகளுக்கு தயார்செய்ய மாணவர்களுக்கான வாய்ப்புகளை ANTHE திறந்து வைக்கிறது.  ANTHE 2023 நிகழ்வில், மாணவர்களின் மிக அதிக பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  சிறப்பான எதிர்காலத்திற்கு நெருக்கமாக மாணவர்களை கொண்டு செல்லும் எமது செயல்திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.”

இந்தியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் 2023 அக்டோபர் 7-15 நாட்களில், ANTHE 2023 நடைபெறுகிறது.  100% வரையிலான ஸ்காலர்ஷிப்களுக்கும் கூடுதலாக, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ரொக்கப் பரிசுகளையும் பெறுவார்கள். 

ஆன்லைன் முறையிலான ANTHE தேர்வு, தேர்வு நாட்கள் அனைத்திலும் காலை 10:00 முதல் இரவு 09:00-க்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் . ஆஃப்லைன் – நேரடி தேர்வுகள் 2023 அக்டோபர் 8 மற்றும் 15-ம் தேதிகளில் நாடெங்கிலும் உள்ள ஆகாஷ் பைஜு – ன் அனைத்து 315+ மையங்களிலும் காலை 10:30 – 11:30 மற்றும் மாலை 04:00 – 05:00 மணி என்ற இரு ஷிப்ட்களில் நடத்தப்படும்.  தங்களுக்கு வசதியான ஒரு மணி நேர ஸ்லாட் – ஐ மாணவர்கள் தேர்வு செய்யலாம். 

மாணவர்களின் கிரேடு மற்றும் ஸ்ட்ரீம் விருப்பங்களின் அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்கும் 40 கேள்விகளையும் மற்றும் அதற்கு மொத்தத்தில் 90 மதிப்பெண்களையும் கொண்ட தேர்வாக ANTHE நடத்தப்படும்.  VII-IX – ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் போன்றவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும்.  மருத்துவ கல்வி பயில விரும்பும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் இருக்கும்.  அதே வகுப்பு பயிலும் மாணவர்கள் பொறியியலில் சேர விரும்புகிறபோது அவர்களுக்கான கேள்விகள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் அறிவுத்திறன் ஆகிய பாடங்களிலிருந்து கேட்கப்படும்.  அதைப்போலவே நீட் தேர்வை எழுத விரும்பும் XI-XII மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பிரிவுகளிலும் மற்றும் பொறியியல் சார்ந்த தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதம் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் இருக்கும்.

ANTHE 2023 – க்கு சேர்க்கைக்கான படிவத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித்தேதி, ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு முன்பு மூன்று நாட்கள் மற்றும் ஆஃப்லைன் தேர்வுக்கு முன்னதாக ஏழு நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.  ஆஃப்லைன் வழிமுறை தேர்வுக்கான கட்டணம் ரூ.100 எனவும் மற்றும் ஆன்லைன் முறைக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ANTHE 2023 தேர்வின் முடிவுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 அக்டோபர் 27 அன்றும், VII முதல் IX – ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023 நவம்பர் 3-ம் தேதியன்றும், XI மற்றும் XII – ம் மாணவர்களுக்கு 2023 நவம்பர் 08 அன்றும் அறிவிக்கப்படும். இத்தேர்வின் முடிவுகள், எமது website வலைதளத்தில் கிடைக்கும்.

About Aakash Educational Services Limited (AESL)

Aakash Educational Services Limited (AESL) is India’s leading test preparatory company that specializes in providing comprehensive and effective preparation services for students preparing for high stakes Medical (NEET) and Engineering entrance examinations (JEE), School/Board exams and competitive exams such as NTSE and Olympiads.

AESL has a pan India network of over 315 centres with over 400,000+ currently enrolled students and has established an unassailable market position and brand value over the last 35 years. It is committed to providing the highest quality test preparation services to unlock students’ true potential and achieve success in their academic endeavours.

AESL takes a student-centric approach to test preparation, recognizing that every student is unique and has individual needs. It has a team of highly qualified and experienced instructors who are passionate about helping students achieve their dreams. The company’s programmes are designed to be flexible

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *