கடாவர் படத்தின் வெற்றிக்குப்பிறகு தமிழில் பிசியான நடிகர் திரிகுன்.
தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் நடிகர் திரிகுன்.
இவர் நடிப்பில் சமீபத்தில் கடாவர் திரைப்படம் வெளியானது,

மெடிக்கல் க்ரைமை மையப்படுத்தி நடக்கும் கொலைகளும், குற்றங்களும் அதைசுற்றி நடக்கும் க்ரைம் திரில்லர் படமாக வெளிவந்து வெற்றிபெற்றதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றது.
நடிகர் திரிகுன் , அமலாபால், ஹரீஸ் உத்தமன், அதுல்யா ரவி, ரித்விகா, உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை அமலாபால் தயாரித்திருந்தார்.

டிஸ்னி பிளஷ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக வெளியாகி உள்ள கடாவர் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழில் தனக்கு வரவேற்பு கிடைத்தது பெரும் மகிழ்வை தருகிறது என்கிறார் திரிகுன்.
தமிழ் படங்களில் அறிமுகமாகி தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வந்தவர் மீண்டும் தமிழ்படங்களில் கவனம் செலுத்தி நடித்துவருகிறார்.
தாய்மொழி தமிழில் மீண்டும் படம் பண்ணுவது உற்சாகமாக இருக்கிறது.
இரண்டு தமிழ்படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. தமிழில் முன்னணி இயக்குனரோடு ஒரு படத்திலும் நடித்துவருகிறேன்.
தெலுங்கிலும் வரிசையாக படங்கள் செய்துவருகிறேன்.
இரண்டு மொழிகளிலும் நடிப்பது வெவ்வேறு கலாச்சாரங்கள், வாழ்வியல் முறைகள் , மனிதர்களின் அணுகுமுறைகள் பெரும் அனுபவமாக இருக்கிறது.
இரண்டு மொழிகளும் எழுதப்படிக்க தெரிவதால் திரைக்கதையின் ஆழம் புரிந்து நடிக்க வசதியாக இருக்கிறது.
தெலுங்கில் பிரேமதேசம், கஞ்சம்,
கன்னடத்தில் லைன்மேன் .
தமிழில் டெவில் .ஆகியபடங்கள் படபிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன.