சென்னையில் அமேசான் ஊழியர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி!

Share the post

சென்னையில் அமேசான் ஊழியர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி


சென்னை: எதிர்வரும் ராமாயணா திரைப்படத்தின் இசைத் தொகுப்பு வெளியீட்டைக் கொண்டாடும் வகையில், அமேசான் நிறுவனம் சென்னையில் புதன்கிழமை தனது 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்காகச் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்தியது. அமேசான் மியூசிக் சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் இணைந்து கண்கவர் நேரடி இசை நிகழ்ச்சியை வழங்கினார். படத்தின் முன்னணி நடிகர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
அமேசான் நிறுவனத்தின் சென்னைச் செயல்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டுவதுடன், அவர்களுக்கு மறக்க முடியாத கலை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.
“ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றது, என் வாழ்நாளில் என்றும் நினைவில் நிற்கும் ஓர் அனுபவமாகும். சக ஊழியர்களுடன் இணைந்து அவரது இசையை நேரில் ரசித்ததும், ராமாயணா படத்தின் நட்சத்திரங்களை அருகில் கண்டதும் இந்த மாலையை மேலும் சிறப்பானதாக மாற்றின,” என்று அமேசான் இந்தியா நிறுவனத்தின் இணைப் பணியாளரான சினேகா முருகன் தெரிவித்தார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், டிஎன்இஜி மற்றும் யஷ்ஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் ராமாயணா திரைப்படம் இரண்டு பாகங்களைக் கொண்ட பிரம்மாண்டத் திரைப்படமாக உருவாகிறது. இதன் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ஆம் தேதி உலகளவில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில், கலை மற்றும் பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அனுபவங்களை அமேசான் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் அமேசான் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், பிரபலத் தொடரான மிர்சாபூர் படக்குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றனர். இத்தகைய நிகழ்வுகள் மூலம் இந்தியா முழுவதும் தனது பணியாளர்களைக் கொண்டாடுவதில் அமேசான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *