கராத்தே ஷீப்’ என்கிற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது !!

Share the post

கராத்தே பிரியர்கள் கவனத்திற்கு – பிட்டி மற்றும் அதன் நண்பர்களின் அட்டகாசமான கராத்தே வித்தைகளைக் காணத் தயாராகுங்கள் – ‘கராத்தே ஷீப்’ என்கிற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது

பத்திரிகை வெளியீடு
மும்பை, XX ஏப்ரல் 2024

வயிறு குலுங்க சிரிக்க தயாராக இருங்கள், ஏனெனில் இந்த ஏப்ரலில் “கராத்தே ஷீப்” என்கிற புதிய நிகழ்ச்சியுடன் Sony YAY! தொலைக்காட்சியில் ஒரு அசத்தலான செம்மறியாட்டு மந்தை அனாயசமான கராத்தே வித்தைகளை காண்பிக்க வருகின்றன!

கராத்தே ஷீப்பில் பிட்டி மற்றும் குங்ஃபூ குமாரியின் பண்ணைக்கு உங்களை வரவேற்கிறோம்! பறந்து பறந்து உதிக்கும் அட்டகாசமான கராத்தே வித்தைகளையும், இடைவிடாத சிரிப்புக்கும் இங்கு பஞ்சமே இருக்காது. படிக்கக் கற்றுகொள்வது முதல், காட்டில் காணமால் போய் வினோதமான கருவிகளைப் பயன்படுத்தி வழியை கண்டுபிடிப்பது என இந்த ஆடுகளின் தினசரி வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும். இதற்கிடையில் வில்லனாக ஒரு தந்திரக்கார நரி பசியுடன் அவற்றை நோட்டமிட்டுக் கொண்டும், இந்த செம்மறி ஆடுகளை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்றும் சுற்றி வருகிறது. பிட்டி மற்றும் குங்ஃபூ குமாரியின் வழக்கமான பயிற்சியில் இடையூறு ஏற்படுத்துவது, அல்லது தனக்கும் கராத்தே சொல்லித் தருமாறு சூழ்ச்சி வலை விரிப்பது என தன்னால் முடிந்த தந்திரங்களிலும் அது ஈடுபடுகிறது. ஆனால் எந்த பலனும் இல்லை! கராத்தே பழகிய இந்த செம்மறியாடுகள் அந்த நரியை ஒவ்வொரு முறையும் பந்தாடி துவம்சம் செய்கின்றன.

பிட்டி வழிநடத்த, குங்ஃபூ குமாரியின் மின்னல் வேக அடிகளின் உதவியுடன் இந்த கொழுகொழு செம்மறியாடுகள் – நரியின் தந்திரத்தை தவிடுபொடியாக்கி ஜெயிக்கின்றன. தோற்றத்தை வைத்து ஒருவரை குறைத்து எடைபோடக் கூடாது என்பதை உணர்த்துகின்றன. இந்த புத்தம் புதிய நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்! மறக்காமல் உங்கள் காலெண்டரில் குறித்து வைத்துக் கொண்டு பிட்டி மற்றும் குங்ஃபூ குமாரியின் அதிரடி சாகசங்களைக் கண்டு மகிழுங்கள்!

~ வரும் ஏப்ரல் 22 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு Sony YAY! தொலைக்காட்சியில் கராத்தே ஷீப்-இன் அனைத்து புதிய எபிசோட்களையும் கண்டு மகிழுங்கள். ~

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *