
கோந்தல் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம்
கதைக் கரு :-
கோந்தல் என்னும் சொல் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொண்டாடும் ஒரு பாரம்பரிய பக்தி சார்ந்த நாட்டுப்புறக் கலை வடிவமாகும்.
கடவுளின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் , அதன் மூலம் புதுமணத் தம்பதியரின் பாதையில் உள்ள அனைத்து தடைகளை நீக்குவதற்காகவும் , அவருக்கு முன்பாகப் பாடி ஆடுவதைக் குறிக்கும்.
கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்
சாஹேப்ராவ் மீது காதல் கொண்டிருந்த சுமனுக்கு , ஆனந்தாவுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைக்கின்றனர். அழகே வடிவானவள் மணப்பெண். புது மனைவி கிடைத்தது அதிர்ஷ்டம் தான் ஆனந்தாவுக்கு. வசதியான குடும்பத்தில் பிறந்த சுமனின் அதிர்ஷ்டம் பற்றியும் அவளிடம் சொல்லப்படுகிறது.
திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்் கிஷோர் கடம், கோந்தாலியான பிவபா கதாபாத்திரத்தில், தனது அடக்கமான நடிப்பில் , அதே நேரத்தில் உள்ளுக்குள்ளே கனன்று கொண்டிருக்கும் பாத்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
இஷிதா தேஷ்முக் :- அறிமுக நடிகை இவர் . ஒரு அனுபவமிக்க நடிகையைப் போலவே நடித்திருப்பது பாராட்டுக்குரியது. திருமணத்திற்குப் பிறகும் காதலுக்காக எதையும் செய்யத் துணியும் அதே சமயத்தில் சற்றும் கபடமற்ற , பொறுப்பற்ற பெண்ணாக நடித்துள்ளார்.
உண்மையான காதலுடன் தான் தப்பிச் செல்வதற்காக , தன்னை நேசிக்கும் ஒருவனைக் கொண்டு தன் கணவனையே கொல்லத் திட்டமிடும் பாத்திரத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
யோகேஷ் சோஹோனி என்பவர் ஆனந்தாவாக நடித்திருக்கிறார். தனது பார்வையற்ற பாட்டியான ருக்மணி சுதாரிடமிருந்து கிடைத்த ஓர் உண்மைய்யை அறிந்த இவர் வியக்கும் மாற்றத்திற்கு உள்ளாகிறார். ஓர் அப்பாவியாக நடித்திருக்கிறார்.
சர்ஜேராவாக வரும் நிஷாத் போயிர் தனது துடுக்குத்தனமான நடிப்பினை கன கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்.
சர்ஜேராவாக வரும் நிஷாத் போயிரின் தந்தையாக சுரேஷ் விஸ்வகர்மா நடித்திருக்கிறார். அச்சுறுத்தலை சிரமம் இன்றி வெளிப்படுத்துகின்றார்.
சாஹேப்ராவாக வரும் அனுஜ் பிரபுக்குக் குறைந்த காட்சிகளே இருந்தாலும் மிக சிறப்பாக நடித்திள்ளார்.
பிவபாவின் பெயரனான விஷ்ணுவாக வரும் ( பேரனாக ) துருவ் தோக்கும் சிறப்பாகவே நடித்துள்ளார்.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- சந்தோஷ் தவக்கர் . இவரின் திரைக்கதை கன கச்சிதம். ஆர்வத்தைத் தூண்டுவது. அளவான வசனங்கள் . வசனங்கள் எல்லாம் மிகவும் கூர்மை , இரத்தின சுருக்கம் , நகைச்சுவை என பல வடிவில் அமைக்கப்பட்டுள்ளது இந்தத் திரைப்படம்.
வணிக ரீதியாக இந்தப் படம் சற்று பின்னடைவு தான். இத்தகைய நுட்பமான சமநிலை, பல தசாப்தங்களாக அனைத்து இந்திய மொழித் திரைப்படங்களிலும் மிக சில படங்களில் மட்டுமே தேர்ச்சி.
கதையின் பார்வையில் சில சொட்டுகள் :-
்்்்்்்்்்்்்்்்்்்
கொண்டாட்டம் இரவில் தொடங்கி விடியும் வரை தொடரும் நிலையில் அந்த இரவில் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு ஆனந்தாவை வரவழைத்து , அவளை அவனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவனைக் கொலை செய்யுமாறு சுமன் சர்ஜேராவிடம் கூறுகிறாள். இருந்தாலும் சுமனுடனான தனது திருமணத்தை எதிர்த்த தன் தந்தையே சர்ஜேராவ் கொலை செய்து விடுகிறான்.
கோந்தல் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது குழப்பமான கதை. கொலை கொலை என உயிரை பலியிடும் கதை . இறைவனால் படைக்கப்பட்ட எந்த உயிரையும் கொல்ல மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை. கொலை ,கொள்ளை விடுத்து ஒரு நல்ல கதையை எடுங்கள் ! எங்கள் பத்திரிகை குழு நடுநிலையோடு நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் . உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் , ராஜேஷ் ஓகே டேக்