” சிக்னல்’ அட் 11.30 திரை விமர்சனம்!

Share the post

” சிக்னல் அட் 11.30 என்னும் திரைப் படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்்கதைக் கரு :-
்்்்்்்்்்்
ஒரு நொடிப் பொழுது நிகழ்வு ! ஒரு வாழ்க்கையின் பெருந் திருப்பம். இது தான் இந்தப்படத்தின் கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்் ்்்்
சென்னை என்று சொன்ன உடனே நம் நினைவுக்கு வருவது இந்தப் பரபரப்பு தான்.

சென்னையின் பரபரப்பான அந்தச் சாலையில் இரவு நேரத்தில் பயணிக்கும் மருத்துவர் சித்தார்த் .11.30 மணியளவில் நிசப்தமான வேளையில் ஒரு போக்குவரத்து சிக்னலில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அந்த ஒரு சம்பவமே அவரது வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களும் பல்வேறு சிக்கல்களும் உருவாகின்றன.

சென்னையில் பரபரப்பான சாலை ஒன்றில் இரவு நேரத்தில் பயணம் செய்கிறார் மருத்துவர் சந்தோஷ் பிரதாப் . 11.30 மணியளவில் அந்தப் போக்குவரத்து சிக்னலில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அந்தச் சம்பவம் அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு சிக்கல்களையும் உருவாக்குகின்றன.

அந்த நேரத்தில் அதே சாலையில் மென் பொருள் துறையில் பணியாற்றும் பவ்யா திரிகாவும் அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியில் சிக்கிக் கொள்கிறார்.

இரவு 12.00 மணி என்று சொன்னால் பேய் வரும் .ஆவி சுற்றும் என்பார்கள். ஆனால் இங்கே நடந்தது என்ன ? அந்த 11.30 மணி சிக்னலில் நடந்தது என்ன ? அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் தான் என்ன ?

இந்த இருவரும் எதிர் கொள்ளும் ஆபத்துகள் , மர்மமான நிகழ்வுகள் , துரத்தலின் பின்னணிகள் என இரவு முழுவதும் பயணிக்கும் பரபரப்பான சம்பவங்களே ” சிக்னல் அட் 11.30.என்னும் திரைப்படம்.

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
சந்தோஷ் பிரதாப் மருத்துவர் சித்தார்த் கதாபாத்திரத்தில் தன்னுடைய மாறுப்பட்டக் கோணத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகனுக்கே உரிய கம்பீரம் இவருக்கு உண்டு. உணர்வு பூர்வமான காட்சிகளில் உணர்வு பூர்வமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களை தன் பக்கம் இழுக்கும் திறன் இவருக்கு உண்டு.

பவ்யா திரிகா :-
்்்்்்்்்்்்்்்்
அழகிய முகத் தோற்றம். நடிப்புக்கு உண்டான உடல் வாகு.ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்து படத்திற்கு பெருமையைச் சேர்த்து இருக்கிறார். பாராட்டலாமே !

புஜிதா பொன்னாடா :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் மாடல் அழகி . இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து பார்வையாளர்கள் மனத்தை கொள்ளையடித்து இருக்கும் பேரழகி. இவர் வரும் காட்சிகள் உணர்வு பூர்வமான நடிப்பிற்கு துணை நிற்கின்றன.

துணை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்
ஜெயப்பிரகாஷ் , முனிஷ்காந்த் முதலானோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தன்னையே இணைத்து பயணித்து திரைப்படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவாளர் :- ராஜா பட்டாச்சார்ஜி :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் இவர் தான். இரவு நேரக் காட்சிகளையும் , சாலைப் பயணங்களையும் மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவருக்கு பாராட்டு வைக்கலாம். மிரள வைக்கிறார்.

படத்தொகுப்பு :- ஆர். கலைவாணன் :-:
்்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர். இயக்குநர்படத்தை எடுத்து முடித்த பின்பு எடுத்தப் படத்தின் காட்சிகளை வரிசைப்படுத்தி தொகுத்து கொடுப்பது இவரது பணி. படத் தொகுப்பில் சில இடங்களில் விறு விறுப்பைக் கூட்டி மெருகேற்றியிருக்கலாம்.

படத்தொகுப்பு :- ஆர். கலைவாணன் :-:
்்்்்்்்்்்்்்்்்்்்்
இவர் இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர். இயக்குநர்படத்தை எடுத்து முடித்த பின்பு எடுத்தப் படத்தின் காட்சிகளை வரிசைப்படுத்தி தொகுத்து கொடுப்பது இவரது பணி. படத் தொகுப்பில் சில இடங்களில் விறு விறுப்பைக் கூட்டி மெருகேற்றியிருக்கலாம்.

இசை :- D.இமான் :-
்்்்்்்்்்்்்்்்்்
பொதுவாக இவருடைய இசை சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்.பதற்றமான காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் சுவாரஸ்யமானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

இசை :- D.இமான் :-
்்்்்்்்்்்்்்்்்்
பொதுவாக இவருடைய இசை சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம்.பதற்றமான காட்சிகளில் பின்னணி இசை கூடுதல் சுவாரஸ்யமானதாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ஒரு போக்குவரத்து சிக்னலில் இயக்குநருக்கு ஏற்பட்ட நேரடி அனுபவத்தையே அடிப்படையாகக் கொண்டு அதனையே முழு நீள திகில் நிறைந்த காட்சிகளாக அமைத்து கதை ஒன்றை உருவாக்கி படமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

இதில் காதல் உண்டு . மர்மம் உண்டு.சஸ்பென்ஸ் உண்டு. மனித உணர்வுகள் உண்டு இப்படி எல்லா அம்சமும் உண்டு.

ஏனோ திரைக்கதையில் சிற் சில குறைகளை வைக்கின்றனர் என்று தான் நமக்கு புரியவில்லை. ஒருமுறை மனக் கண் முன் கொண்டு வாருங்கள். எங்கு தொய்வு ஏற்படுகிறது என்பது புரியும்.

இரண்டாம் பாதியில் மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகின்றன. எதிர்ப்பாராத திருப்பங்களும் தத்ரூபமான காட்சிகளும் கதைக்கு மேலும் வலு ஊட்டுகின்றன.

” சிக்னல் அட் 11.30 என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் களம் புகுந்ததில் ஒரு சிக்னலில் தொடங்கும் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை திரைப்படமாக்கி அதில் காதல், மர்ம்ம் , சஸ்பென்ஸ் ,உணர்வுகள் , உணர்ச்சிகள் கலந்த கலவைக் கொண்டு திரைக் காவியமாக கொண்டு வந்ததை நாமும் பாராட்டுவோம்.

எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி பாராட்டுகிறது . மீண்டும் சந்திப்போம். உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *