
” ஆக்டோபஸ் ” – என்னும் வெப் சீரியல் தொடரின் விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்கள் புற்றீசல் போல வந்து கொண்டிருக்கின்றன. அதே வரிசையில் வெப் சீரியலும் வரத் தொடங்கியுள்ளன.
ZEE5 தளத்தில் பல்வேறு வெப் தொடர்கள் வரிசையில் அவ்வப்போது வித்தியாசமான , மாறுப்பட்ட கோணங்களில் சில வித்தியாசமான கதைக் களத்துடன் படைப்புகள் சில வெளியாகி இரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வரிசையில் திகில் , மர்மம் , திகில் , சஸ்பென்ஸ் , எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் கூட்டுக் கலவையில் கலந்து இரசிகர்களுக்கு விறு விறுப்பான த்ரில்லர் அனுபவத்தை வழங்கியிருக்கிறது ZEE5 தளத்தின் ” ஆக்டோபஸ் ” என்னும் வெப் சீரியல்.
கதைக் களம் :-
்்்்்்்்்்்்்்்
விழுப்புரத்தில் உள்ள இராம் நகர் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சிறிய குடியிருப்பு ஒன்று . இதில் ஐந்தாறு குடும்பங்கள் வசித்து வருகின்றன.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல அன்புடன் , நெருக்கத்துடன் பழகி வருகின்றனர்.
கதையும் தொடரின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்
ஐந்தாறு குடும்பங்கள் சொந்த பந்தங்கள் போல மிக நெருக்கமாக பழகி வரும் வேளையில் புதியதாக தம்பதியர் வந்து இங்கு குடியேறுகின்றனர்.
ஆரம்பத்தில் சாதாரணமாக தொடங்கும் அவர்களது வாழ்க்கை , நாளடைவில் பல மர்மங்களையும் , சிக்கல்களையும் சந்திக்கிறது.
புதியதாக வந்து சேர்ந்த தம்பதியருக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படுகின்றன. பொதுவா(க) புருஷன் பொஞ்சாதின்னு சொன்னா ( ல் ) சண்டைச் சச்சரவு ஏற்படுவது சகஜம் தானே ! என்னமோ ஊரு உலகத்திலே எதுவுமே நடக்காத அதிசயம் போல நீட்டி முழங்குகின்றீர் என நீங்கள் கேட்பது என் காதில் விழத்தானே செய்கிறது.
இருந்தாலும் சொல்லித் தானே ஆகனும் கோவிச்சுக்கிட்டா எப்படி ? மேலே சொல்றேன் கொஞ்சம் கேளுங்க கோபப்படாதிங்க .
கணவன் இங்கே மனைவியை உடல் அளவிலும் மனத்தளவிலும் சித்ரவதை செய்கிறான். மற்றவர்களுடன் பேசவோ , பழகவோ தடையாக நிற்கின்றான்.
ஒரு கட்டத்தில் திடீரென அந்தப் பெண் காணாமல் போகிறாள். எங்கே அவள் ? என்ன ஆனாள் ? அவள் காணாமல் போனதன் மர்மம் என்ன ? என அடுக்கடுக்காக கேட்கும் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென்றால் கதையின் தொடரைக் காணலாம். அப்பொழுது அந்தத் தொடரின் ஓட்டம் நமக்குத் தெரியும்.
அப்பொழுது தான் அந்தத் தொடரின் ஓட்டம் எந்த அளவிற்கு விறுவிறுப்பாக போகிறது என்பதை நாம் கண்டு கேட்டு உணர்ந்து கொள்ளலாம்.
இந்த ” ஆக்டோபஸ் ” என்னும் வெப் தொடர் மற்ற வெப் தொடர்களை விட சற்று வித்தியாசமானது. இது தனக்கென ஒரு பாணியை உருவாக்கியிருக்கிறது. அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவங்களும், எதிர்பாராத திருப்பங்களும் பார்வையாளர்களை தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன.
த்ரில்லர் கதைக் களத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய அளவிலான கோர்ட் டிராமா இந்தத் தொடருக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்க்கிறது. தீவிரமான மர்மக் காட்சிகளுக்கு இடையில் நகைச்சுவை காட்சிகள் தன் பங்குக்கு சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்து கதைத் தொடருக்கு மேலும் வலு ஊட்டுகிறது.
பதற்றத்தில் வெப் சீரியலை பார்த்திருக்கும் பார்வையாளர்களுக்கு இடையிடையே நகைச்சுவை விருந்து சற்று பார்வையாளர்களை இளைப்பாற வைக்கிறது.
வெப் தொடரின் நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்.்்்்்
அஷ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் இவர்களின் நடிப்பு கதைக்கு கூடுதல் பலம் . மற்ற நடிகர்களும் தமக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து வெப் தொடருக்கு வலு சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
இசை :- தீபன் சக்ரவர்த்தி :-
்்்்்்்்்்்்்்்்
பிரபல பின்னணி பாடகரின் கலை வாரிசு . இவர் பின்னணி பாடகராகவும் , இசையமைப்பாளராகவும் இருக்கும் இவர் ஏனோ திரைத் துறையில் ஜொலிக்க முடியவில்லை . இது காலத்தின் கொடுமை தான் .
தீபன் சக்ரவர்த்தியின் பின்னணி இசை இந்த வெப் சீரியலுக்கு மிகப் பெரிய பலம். மர்மம் நிறைந்த காட்சிகளில் பின்னணி இசை உயிர் ஊட்டுகிறது. பதற்றம் அடையும் காட்சிகளிலும் தன்னுடைய பின்னணி இசையால் மிரட்டுகிறார். சிற்சில இடங்களில் காட்சிகளில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு ஆணி வேராக இருப்பது இவரது பின்னணி இசை
ஒளிப்பதிவு :- கண்ணன் R.
்்்்்்்்்்்்்்்
இயக்குநரின் எண்ணங்களை திரையில் கொண்டுவருபவர் ஒளிப்பதிவாளரே ! அது திரைப்படம் ஆனாலும் சரி , வெப் சீரியல் ஆனாலும் சரி , சீரியல் ஆனாலும் சரி நம் கண்களுக்கு விருந்து படைப்பவர் ஒளிப்பதிவாளரே !
ஒளிப்பதிவாளர் கண்ணன் R. அல்லது கண்ணா R. இந்த வெப் சீரியல் பங்கு என்ன என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது , வரவேற்புக்குரியது. இருள் சூழ்ந்த பின்னணியும் , அதற்கேற்ப ஒளியமைப்பும் கதையின் மர்மத் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன.
படத்தொகுப்பு :- ராம் பாண்டியன்.
்்்்்்்்்்்்்்்்்்்
இந்த வெப் சீரியலின் படத் தொகுப்பாளர் இவர் தான் . எடுத்த திரைப்படம் ஆனாலும் சரி , சீரியல் ஆனாலும் சரி , வெப் சீரியல் ஆனாலும் சரி வெட்டி ஒட்டி காட்சிப் படுத்தி , ஒழுங்குப்படுத்தி , உயர்வுப் படுத்தி படத்தை தூக்கி நிறுத்துபவர் படத் தொகுப்பாளரே !
இயக்கம் :- ஜெயச்சந்திரன் ஹஸ்மி .எழுதி இயக்கி இருப்பவர் இவரே. அழகான கதை ஒன்றை தெரிவு செய்து அதற்கு திரைக்கதை அமைத்து அளவான வசனங்கள் எழுதி தன்னுடைய திறமையான இயக்கத்தால் வெப் சீரியலில் தனித்து நிற்கின்றார்.
மர்மம் , சஸ்பென்ஸ் , எதிர்பாராத திருப்பங்கள் , நகைச்சுவை , கோர்ட் டிராமா என பல அம்சங்கள் நிறைந்த இந்த வெப் சீரியலை மிக நேர்த்தியாக கொண்டு போன இயக்குநரை நாம் மனமாற பாராட்டுவோம்.
” ஆக்டோபஸ் ” என்னும் வெப் சீரியலின் விமர்சனத்தில் ஆய்வு செய்த போது மிக நேர்த்தியாக வெப் சீரியலை இயக்கிய இயக்குநரை பாராட்டலாம் இந்தத் தொடரை காணலாம். அனைவரும் பால் மாறாமல் நேரத்தை ஒதுக்கிப் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் சந்திப்போம் . அதுவரை உங.களிடமிருந்து விடைபெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்