“ஓம் “திரை விமர்சனம் :-

Share the post

“ஓம் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்

கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
செம்மரக் கடத்தல் . இது சமூகம் துரோகம் என்று தெரிந்தும் தப்பு செய்கின்றனர் சமூக விரோதிகள் இவர்களிடமிருந்து செம்மரங்களை காப்பாற்றுவதே இப் படத்தின் கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
செம்மரக் கடத்தலை பின்னணியாகக் கொண்டு ஓர் உண்மைச் சம்பவத்தை தனக்கே உரிய பாணியில் இப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தின் இயக்குநர்.

காவல் துறையும் , வனத் துறையும் இணைந்து செம்மரக் கடத்தலை கடத்தும் சமூக விரோதிகளை பிடிக்க நவீன உத்திகளை பயன்படுத்துகின்றனர்.

காவல்துறையின் புலனாய்வும் ,அதனுடைய துரித நடவடிக்கைகளும் , அதனைச் சுற்றியுள்ள மோதல்களையும் மையப்படுத்தி கதை நகர்கிறது.

காவல் துறையினர் தனுஷை ஸ்பையாக பயன் படுத்துகின்றனர். தனுஷ் செம்மரக் கடத்தல் கூட்டத்தின் முக்கிய தலைவனாக செயல் படும் மம்மூட்டியிடம் போய் சேருகிறார். மம்மூட்டியும் இவரை தனது ஆளாகக் கருதி செம்மரங்களை எவ்வாறு கடத்துகிறோம் . அதை எங்கே பதுக்கி வைத்து இருக்கிறோம் என்பது உட்பட மம்மூட்டி தனுஷிடம் சொல்லி விடுகிறார். மம்மூட்டியிடம் வேலை செய்யும் ஆட்களில் ஒருவன். தனுஷ் மீது சந்தேகப் படுகிறான். அதனை பல முறை மம்மூட்டியிடம் சொல்ல கடைசி வரை மம்மூட்டி காதிலே போட்டுக் கொள்வதில்லை.

திரை நட்சத்திரங்கள் :- தனுஷ்
்்்்்்்்்்்்்்்்்்்
தனுஷ் இந்தப் படத்தில் ஸ்பையாக வந்து உண்மையான செம்மரக் கடத்தல் சமூக விரோதிகளை பிடிக்க காவல் துறைக்கு உதவியாக இருக்கின்றார்.

தனுஷ் காவல் துறையினரைத் துரத்திச் செல்லும் அறிமுகக் காட்சி அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது. தொடக்கத்தில் தனுஷ் சுறுசுறுப்பாக வந்தாலும் பின்னர் தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமும், அவரின் நடிப்பும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

சாய் பல்லவி :-
்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தில் இவரின் நடிப்புக்கு தீனி போட்டு இருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் இயக்குநர். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன் நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

மம்மூட்டிக்கு மேலே பெரிய வில்லன். அவரும் கைதேர்ந்த நடிப்பால் நடித்து இருக்கிறார். இருப்பினும் சட்டத்தின் முன்னே இவர்களை சரியான முறையில் விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் விவேகம் வேண்டும் இயக்குநருக்கு .

மம்மூட்டி :-
்்்்்்்்்்
இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றிக் கண்டவர். கால ஓட்டத்தால் எதிர்மறை சிந்தனை உள்ள வில்லனாக சட்ட விரோத செயல்களை செய்யும் சமூக விரோதியாக இந்தப் படத்தில் நடிக்கிறார். இவரிடம் தனுஷ் வேலைக்கு வருகிறார். தனுஷ் மீது மம்மூட்டியின் ஆட்களின் ஒருவன் சந்தேகப்பட்டு மம்மூட்டியிடம் சொல்கிறான். அதனைக் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. அது எப்படி சாத்தியமாகும். வில்லனாக நடிப்பவர் வெளுத்தது எல்லாம் பால் என நினைத்துவிடுவாரா ? இதனை ஏன் கவனிக்க மறந்தார் இந்தப் படத்தின் இயக்குநர்.

மம்மூட்டிக்கு மேலே பெரிய வில்லன். அவரும் கைதேர்ந்த நடிப்பால் நடித்து இருக்கிறார். இருப்பினும் சட்டத்தின் முன்னே இவர்களை சரியான முறையில் விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் விவேகம் வேண்டும் இயக்குநருக்கு .

துணை நட்சத்திரங்கள் :- ்்்்்்்்்்்்்்்்இவர்கள் படத்திற்கு உறுதுணையாக நின்று கதைக்கு மேலும் வலு ஊட்டுபவர்கள்.

ஸ்ரீலீலா நகைச்சுவை காட்சிகளில் தன்னுடைய பங்கினை சரிவர செய்து படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் உணர்வுப் பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கும் வண்ணம் செய்து இருப்பது பிளஸ் பாயிண்ட்

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்
இசை :- சாய் அபயங்கரன் :-
்்்்்்்்்்்்்்்
இசைக்கு மயங்காத உயிர் இனங்கள் உண்டோ ! இசைக்கு புதியவர் . இவருடைய பின்னணி இசை படத்தின் விறு விறுப்புக்கு உறுதுணையாக இருக்கிறது. உணர்வுப் பூர்வமான காட்சிகளையும் உயர்த்துவதாக பார்வையாளர்கள் வாய் விட்டுப் பேசிக் கொள்வது நம் காதில் வந்து விழத்தான் செய்கிறது.ஒற்றைக் காட்சிப் பகுதி ,பாடல் காட்சிகள் ஆகியன படத்தின் முக்கியமான தருணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இயக்குநர் :- ராஜ்குமார் பெரியசாமி :-
்்்்்்்்்்்்்்்
இவர் கதையை தேர்ந்து எடுத்தது சரி என்றாலும் திரைக்கதையில் நிரம்ப ஓட்டைகள் இருக்கின்றன. திரைக்கதை சீராக அமையவில்லை என்றால் படம் தடுமாறும் , தடம் புரளும். நம்பும்படியான காட்சிகள் மிக மிக குறைவு .

ஒளிப்பதிவு :- கே.எழிலரசு
்்்்்்்்்்்்்
இவருடைய ஒளிப்பதிவு செம்மரக் காடுகள் மற்றும் வெளிப்புறக் காட்சிகளை மிக அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். பொதுவாக இயக்குநரின் எண்ணங்களை திரைவடிவில் கொண்டு வருபவரே நல்ல ஒளிப்பதிவாளர். அது உண்மை தான் என்பதை நிரூபித்து காட்டியிருக்கின்றார் .

படத் தொகுப்பாளர் :- ஆர்.கலைவாணன்
்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தை மிகச் சிறந்த முறையில் படத் தொகுப்பு செய்து இருக்கிறார். படத்தின் அளவு அதிகம் அதனைக் குறைத்திருக்கலாம்.

ஓம் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் ஆய்வு செய்ததில் படத்தின் அளவு நீட்டிப்பு அதைக் குறைத்து ஒழுங்கு படுத்தியிருக்கலாம். நம்பகத் தகுந்த சம்பவங்களை மட்டும் காட்சிப் படுத்தி இருக்கலாம். படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்குகிறது. மீண்டும் சந்திப்போம் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *