பிளாக் கோல்டு திரைவிமர்சனம் :-

Share the post

பிளாக் கோல்டு என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்
கதைக் கரு :-
்்்்்்்்்்்்்்
சாதாரணமான கருதப்படும் தலைமுடியை மையமாக வைத்து உருவான கதையே இந்தப் படத்தின் மையக் கரு .

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
தலை முடிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கடத்தல் சாம்ராஜ்ஜியத்தின் அப்பட்டமான நிகழ்வை கதைப் பின்னல் மூலம் சற்று வித்தியாசமாகவும் பரபரப்பாகவும் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்கு தான் ஏன் இந்தக் குறுக்குப் புத்தி ஏற்படுகிறதோ தெரியவில்லை ?

தலைமுடி ஏற்றுமதி வியாபாரத்தை மையமாக வைத்து கதை சொல்லப்பட்டது. இதில் ஆக்‌ஷன் உண்டு ; அதிரடி உண்டு ; அதற்கு மேலே திரில்லர் உண்டு.

கதைக்களம் புதியது :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
தங்கத்தை கடத்துவதாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. வைரத்தைக் கடத்துவதாக சொல்லப்பட்டிருக்கிறது. போதைப் பொருள் கடத்துவதாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எந்தப் படத்திலும் தலைமுடியை கடத்தியதாக சொல்லப்பட வில்லை. மனிதன் தவறான பாதைக்கு போக ஆயிரத்து எட்டு காரணம் சொல்லலாம். ஆனால் நேர்வழி போக காரணம் சொல்ல முடியுமா ? சொல்லத் தேவையில்லை.

தலை முடிக்குக் கூட சர்வதேச அளவில் இவ்வளவு பெரிய வணிக மதிப்பு இருக்கிறதா ? நம்மை ஆச்சரியப்பட வைக்கும் அந்த வியாபாரமும் அதன் பின்னணியும் பார்வையாளர்கள் மனத்தில் நிற்க முயற்சி செய்து இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர்.

திரைப்பட நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்
வெற்றி இந்தப் படத்தின் நாயகன். இவரது தந்தை பிரபலமான தலைமுடி ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவர்களுக்கும் பணியாற்றியவர்களுக்கும் இடையே ஏற்படும் தொழில் போட்டி அதனால் ஏற்படும் பிரச்சினைகள் இதைச் சுற்றி கதை நகர்கிறது.

திருப்பதியிலிருந்து தலைமுடியை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று போகிறது. இதன் ஓட்டுநர் வெற்றியின் தந்தை. இந்த வண்டியை மர்மக் கும்பல் ஒன்று கடத்துகிறது. அந்தப் பழியை வெற்றியின் தந்தை மீது சுமத்தப்படுகிறது. வெற்றி தந்தை மீது விழுந்த பழியை துடைக்கிறாரா ? கடத்தியது யார் ? களத்தில் இறங்குகிறார் வெற்றி.

வெற்றி தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். தந்தையை மீட்கும் மகனாக போராடும் வெற்றி உணர்வு பூர்வமான காட்சிகளிலும் ஆக்‌ஷன் காட்சிகளிலும் மிகச் சிறப்பாக நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

லிவிங்ஸ்டன் கதாநாயகனின் தந்தையாக நடித்து இருக்கிறார். இவர் தனது அனுபவ நடிப்பால் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்.

துளசி இவர் கதாநாயகனுக்கு தாயாக நடித்து இருக்கிறார். இவரது குடும்ப பாங்கான நடிப்பு இந்தப் படத்திற்கு பெரும் பலம். உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்.

பிரபல திரைப்பட இயக்குநர்கள் எல்லாம் நடிக்க களம் இறங்கி இருக்கின்றனர். அந்த வரிசையில் ஏ.வெங்கடேஷ் . இந்தப் படத்தில் வலுவான எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தோன்றி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

இவருடன் வில்லன் குழுவினரும் திரைக்கதைக்கு வலு சேர்த்து இருப்பதுடன் விறு விறுப்பாக கதை செல்ல உறுதுணையாக நின்று இருப்பது பெருமைக்குரியது .

அபிராமி வெங்கடாசலம் , பிரியாலயா உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
்்்்்்்்்்்்்்்்்
ஒளிப்பதிவாளர் :- சந்தோஷ் குமார் வீராசாமி. இவர் ஒளிப்பதிவில் உருவான இந்தத் திரைப்படம் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு திரில்லர் காட்சிகளில் பதற்றத்தையும் கதையின் ஓட்டத்தையும் காட்சிமைப்படுத்தியுள்ளார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர். இருப்பினும் இயக்குநர் எண்ணத்தினை செயல்படுத்த தவறினால் படம் கேள்விக் குறிதான்

இசை :- கவாஸ்கர் அவினாஷ் . புதியவர்களின் வரவு திரைப்படத்திற்கு நல்ல உறவை ஏற்படுத்துகின்றன. ஏனோ பாடல் ஆசிரியர்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருப்பது வருத்தத்தை தருகிறது. அதை இசையமைப்பாளர் கள் கவனிப்பார்களா ! இசையும் அருமை . பின்னணி இசையும் மிக அருமை. படத்தின் பரபரப்பான தருணங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன

படத்தொகுப்பு :- தினேஷ் குமார். ஒரு நல்ல திரைப்படம் எடிட்டர் மேசையில் தான் உருவாகிறது என்று சொல்வார்கள்.அந்த வரிசையில் இந்தத் திரைப்படத்தின் படத்தொகுப்பாளர் கதையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து இருக்கிறார். பாராட்டலாம் இவரது திறமையை.

கலை இயக்குநர் அவருடைய பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்.

சண்டை ப்பயிற்சியாளர் நல்ல முறையில் நடிகர்களுக்கு பயிற்சி கொடுத்து இருக்கிறார். சண்டைக் காட்சி மேலும் விறுப்பை ஏற்படுத்தும் இதுவும் படத்தின் வெற்றிக் காரணமாகவும் இருக்கும்.

திரைப்பட இயக்குநர் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
ஒரு சாதாரண பொருளாகப் பார்க்கப்படும் தலைமுடியை மையமாக வைத்து அதன் பின்னணியில் இத்தனை பெரிய வணிக உலகமும் கடத்தல் சம்பவங்களும் கரம் கோர்த்து நிற்பதை தனக்கே உரிய பாணியில் திரைக்கதை அமைத்து இயக்கி இருப்பது பாராட்டுக்குரியது.

புதுமையான கதை , கதைக்களம் அமைத்து அதற்குரிய கதாபாத்திரங்களை உருவாக்கி , தகுந்த நடிகர்களை தேர்ந்தெடுத்து ,விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து , மிக நேர்த்தியாக படத்தை இயக்கிய இந்தத் திரைப்படத்தின் இயக்குநரை எத்தனை முறைப் பாராட்டினாலும் தகும் .

பிளாக் கோல்டு என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்ய நுழைந்த போது சமூகத்தில் ஏற்படும் அவலங்களும் அதனால் ஏற்படும் அவமானங்களும் அதனை நீக்க படும் பாட்டை மிக நேர்த்தியாக சொல்லி இருப்பது அருமை. எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி வாழ்த்துகிறது. என்றும் தோழமையுடன் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *