இராமாயணா திரை விமர்சனம் :-

Share the post

இராமாயணா ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் ( Ramayana Rise of a Legend ) என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்்

கதைக் கரு :-
்்்்்்்்்்்்்
இராமாயணம் , மகாபாரதம் இவ்விரண்டையும் இதிகாசம் என்று அழைப்பர் நம் சான்றோர்கள்.

வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கதையே இப் படத்தின் மையக் கரு. வடமொழியில் வால்மீகர் எழுதிய வால்மீகி இராமாயணம் இது மூல நூல். தமிழில் கம்பர் எழுதிய இராமாயணம் கம்பராமாயணம் இது வழி நூல். இராம பிரானின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் படமாக்கப்பட்டதே இந்தப் படம்.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இதிகாசத்தின் ஒன்றான இராமாயணத்தை கையில் எடுத்துக் கொண்டு அதில் இடம் பெறும் முக்கிய நிகழ்வுகளை மிகப் பிரமாண்டமாக எடுத்து இதிகாச காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுள்ளனர்.

சர்வதேச த் தரத்தில் விஷுவல் எஃபெக்ட்களைப் பயன்படுத்தி படத்தை காட்சிமைப் படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு கடின உழைப்பையும் அதிக சிரத்தையும் மேற்கொண்டுள்ளனர் இப் படக் குழுவினர்.

இந்தப் படத்தில் வழக்கம் போல புராண கதையாக மட்டுமே நினைக்காமல் அதி நவீன நுட்பங்களை பயன்படுத்தி மிகுந்த பொருட் செலவில் , பலருடைய உழைப்பில் ,அதிரடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மிக கவனமாக கொண்டு செல்வது படத்தின் தரத்தை நன்கு எடை போட முடிகிறது. ஓடி ஓடி பணம் சம்பாதிப்பவர்கள் எல்லாம் திரைப்படத்தை எடுக்க முடியாது. அதிலும் புராணப்படம் எடுப்பது என்றால் அது கனவிலும் நடக்காது. அப்படி இருக்கும் பொழுது புராணப்படத்தை இந்தக் காலக் கட்டத்தில் கொண்டு சேர்ப்பது அதி சிரமமே ! சிரமத்தை சிரசில் கொண்டு படமாக எடுத்திருப்பது பாராட்ட வேண்டிய விஷயங்களில் ஒன்று பாராட்டுவோம் !

காட்சிமையும் பிரமாண்டமும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
புராணக் கதைகள் என்றாலே பிரமாண்டமே ! இந்தப் படத்தின் காட்சி விளைவுகள் ( visual effects ) , பிரமாண்டமான அரங்குகள் , அதிரடியான காட்சியமைப்புகள், பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் படத்தினை எடுத்திருப்பது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமல்ல இதுவொரு கலைப்படைப்பு என்றும் போற்றப் படுகிறது. இதிகாசம் நமக்கு பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறது. இந்தப் படம் நம் வாழ்க்கைத் தரத்தின் உயர்வுக்கு வழிகாட்டியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

குறையைச் சுட்டிக் காட்டலாம்.
தமிழ் பேசும் நடிகர்களை நேரடியாகக் களத்தில் இறக்கினால் அதன் தரம் வேறு. மொழி தெரியாதவர்களை வைத்துப் படம் பண்ணுவது செயற்கைத் தனம் தான்.நாகரீகம் காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே போகும். ஆனால் பண்பாடு அப்படி அல்ல. என்றும் அது மாறாது. சில இடங்களில் கிரீன் – ஸ்கிரீன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை விஷுவல் எஃப்எக்ட்ஸ் காட்சிகள் மூலம் தெரிய வருகின்றன. சில கதாபாத்திரங்கள் கார்ட்டூன் போலத் தெரிகின்றன இதனை தவிர்த்திருக்கலாம். படத்தில் சண்டைக் காட்சிகள் தேவை தான் இருப்பினும் படத்தின் நீளத்தை அதிகப்படுத்தி சண்டைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது சற்று சறுக்கல் தான்.

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்் ்் ்
இராவணன் வேடத்தில் நடித்திருப்பவர் யாஷ் . இவர் இராவணனாக அறிமுகக் காட்சியே பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தனித்துவமான பாணியைப் பின்பற்றி இருக்கின்றார். அந்தக் கதாபாத்திரத்திற்கு என்றே ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பது மிகச் சிறப்பு.

இராம பிரானாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் சாந்தம், அமைதிஇவற்றினை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி பார்வையாளர்களை தன்பால் இழுத்திருக்கிறார். பாராட்டுக்குரியவர் நாமும் அவரைப் பாராட்டுவோம்

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இந்தப் படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி. இந்தப் படத்தினை மிக உன்னிப்பாக கவனித்து கதையைச் சிதைக்காமல் மிக அற்புதமாக நமக்கு நல்லதொரு படத்தினைக் கொடுத்திருக்கிறார். அவரை நாமும் பாராட்டுவோம்.

இராமாயணீ : ரைஸ் ஆஃப் எ லெஜண்ட் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது பிரமாண்டம் நம் மனக் கண் முன் வந்து நிற்கிறது. என்றென்றும் இதிகாசம் நம்மை விட்டு போகாது நம் மனத்தில் நிலைத்து நிற்கும் என்பதை இப் படம் உணர்த்துகிறது. படம் அனைவரும் சென்று பார்த்து பயன் அடையலாம் . எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரைவிமர்சனம் நிகழ்ச்சியில் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட், ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *