எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் திரைவிமர்சனம்

Share the post

எனிமி ஆஃப் த ஸ்மக்ளர் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-

கதைக் கரு :-

கடத்தல் . இதனைத் தொடர்ந்து சுங்கத் துறை விசாரணை , இலஞ்சம் , துரோகம் இதனைச் சுற்றி அமைவதே இந்தப் படத்தின் கதைக் கரு.

கதையும் கதையின் போக்கும் :-
்்்்்்்்்்்்்்்்்்்்
இந்தப் படத்தின் கதை கப்பல் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் சரண் சக்தியும் பால சரவணனும் நெருங்கிய நண்பர்கள் எனக் கதை தொடங்குகிறது. பாலசரவணன் சுங்கத் துறை அலுவலகப் பணியிலும் தொடர்பு கொண்டவராக இருக்கின்றார்.இவர்களது வாழ்க்கையில் ஜே.டி சக்ரவர்த்தி நுழைகிறார். யார் இவர் ? உங்கள் மனத்தில் ஓடும் மைண்டு வாய்ஸ் என் காதுவரை கேட்கிறது. நானே சொல்லி விடுகின்றேன்.

அவர் மிகப் பெரிய கடத்தல் கும்பலைச் சார்ந்தவர். சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் செயல்களில் ஈடுபடும் சட்ட விரோதிகள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் ஜே.டி.சக்ரவர்த்தி.

கடனுக்காக சோரம் போனவர் :-

குடும்பக் கடனை அடைக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜே.டி. சக்ரவர்த்தியுடன் இணைய வேண்டிய சூழ்நிலை சரண் சக்ரவர்த்திக்கு ஏற்படுகிறது.சட்டவிரோதமான முறையில் சரக்குகளை கையாளும் வேலையில் சரண் சக்தி ஈடுபடுகிறார்.அதற்கு உறுதுணையாக பால சரவணன் இருக்கிறார்.

சந்தேகக் கோடு அது சந்தோஷத்துக்கு கேடு :-
்்்்்்்்்்்்்்்்்்்
ஒரு கட்டத்தில் இவர்களின் நடவடிக்கைகளை சுங்கத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர சுங்கத் துறை கண்காணிக்கிறது. முதல் கட்ட விசாரணை அடுத்தடுத்து வரும் விசாரணை என தொடர்கிறது. விசாரணைத் தீவிரம் அடையும் போது இதன் பின்னணியில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பது தெரிய வருகிறது.அந்தக் கடத்தல் வலையில் சிக்கிக் கொள்ளும் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன ? இதற்கான விடையைச் சொல்வது தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.

திரை நட்சத்திரங்கள் :-
்்்்்்்்்்்்்்்்்்்்்
சரண் சக்தி :-

சரண் சக்தி கதையின் நாயகன் . தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார். சூழ்நிலையின் காரணமாக தவறான பாதையில் செல்லும் ஒரு மனிதனின் மனநிலையையும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பால சரவணன் :-
்்்்்்்்்்்்்்்்்
பால சரவணன் தனது இயல்பான நகைச்சுவை உணர்வைத் தாண்டி கதையின் ஓட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மிகச் சிறப்பாக நடித்து இருக்கிறார்.சரண் சக்தியுடனான நட்பும் , கதையில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஜே.டி.சக்ரவர்த்தி , லால் , ராதிகா சரத்குமார் போன்ற அனுபவம் மிக்க திரைக் கலைஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து கதைக்கு வலு சேர்த்து இருக்கிறார்கள்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
திரைப்பட இயக்குநர் :-
டி.சமயா முரளி :-

இவர் முன்னாள் இந்திய வருவாய்ப் பணித் துறை ( IRS) அதிகாரியாக பணியாற்றியவர்.தனக்குக் கிடைத்த தொழில்முறை அனுபவத்தைத் திரைக்கதையில் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு.

யதார்த்தமான திரைக்கதை , கவனத்தை ஈர்க்கும் குற்றப் பின்னணி , தன்னுடைய அசத்தலான நடிப்பு , மற்ற திரைக்கலைஞர்களை வேலை வாங்கிய விதம் , கதையை உணர்ந்து தன் இயக்கத்தால் இந்தப் படத்தைக. கொண்டுவந்து சேர்த்திருப்பது இவரது தனித் திறமை பாராட்டுவோம் ! கரம் கொடுத்து நன்றியைத் தெரிவிப்போம் !

படத்தின் உச்சக் காட்சி :-
்்்்்்்்்்்்்்்்்்
படம் முழுக்க சுவாரஸ்யம் மிக்க காட்சிகளாக அமைத்து படத்தின் உச்சக் கட்ட காட்சியில் சற்று வழுக்கல் .அதனை கொஞ்சம் கவனத்திருக்கலாம் , கவனம் செலுத்தியிருக்கலாம்.இருப்பினும் வித்தியாசமான கதையை தெரிவு செய்து முறையாக திரைக்கதை அமைத்து கூர்மையான வசனங்களால் பார்வையாளர்களை மிரள வைத்திருக்கிறார். படத்தை புரிதலோடு இயக்கி பார்வையாளர்கள் மனத்தில் இமயமாக உயர்ந்து நிற்கின்றார்.

ஒளிப்பதிவும் இசையும் :-
சாம் டேனியல் :-
்்்்்்்்்்்்்்்்
இரண்டும் இவரே . முதலில் ஒளிப்பதிவை பார்ப்போம்.கதையின் தன்மையை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு கதைக்களத்தின் தீவிரத்தையும் , காட்சிகளின் யதார்த்தத்தையும் உணர்ந்து தனது கைவண்ணத்தில் ஒளிப்பதிவில் அசத்தி இருக்கின்றார்.

இசையின் பங்களிப்பு மகத்தானது. பின்னணி இசையின் மூலம் படத்தின் குற்றப் பின்னணிக்கு ஏற்ற வகையில் அமைத்திருப்பது மிகச் சிறப்பு .பதற்றம் நிறைந்த காட்சிபளுக்கு துணை நிற்பது இவரின் பின்னணி இசை.

எனிமி ஆஃப் த ஸ்மக்களர் என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்.இந்தத் திரைப்படம் கடத்தலில் தொடங்கி அதனைத் தொடர்ந்து சுங்கத் துறையின் விசாரணைகளை மையப்படுத்தி உருவாக்கிய இந்தப்படத்தை வரவேற்கலாம் . படம் பார்க்கலாம். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரைவிமர்சனத்தில் சந்திப்போம். உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் தோழர் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட்,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *