
” தாய் நிலம் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
கதைக் கரு :-
தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் உயிர்பலிகள் சேதாரம் ஏராளம். அதில் இருந்து தப்பி தாய் நிலத்திற்கு வந்த அகதியின் அவலம் தான் கதைக் கரு.
கதையும் கதையின் போக்கும் :-
இறுதி யுத்தம் 2008 இல் தமிழ் ஈழத்தில் நடைப்பெற்றது. இந்தப் போரில் மடிந்தவர்கள் ஏராளம். அதில் ஒன்று தான் இப் படத்தின் நாயகியின் மரணம் துர் மரணம். எஞ்சியிருப்பது தன் ஒரே மகளும் தானும் தான். மனைவியை இழந்த அமர் ராமச்சந்திரன் தொடர்ந்து அங்கு நடக்கும் உயிர் பலியைக் கண்டு எங்கே தன் மகளையும் இழந்து விடுவோம்மோ என்ற அச்சம் ஏற்பட தமிழகத்தில் உள்ள உறவினரிடம் தன் மனைவியின் உறவினரிடம் தன் மகளை ஒப்படைத்து விடவும். நிலமை சீரானதும் அதன் பிறகு தான் உயிரோடு இருந்தால் தன் மகளைத் தன்னோடு அழைத்துச் செல்லலாம் என நினைக்கிறார். நினைப்பது மட்டுமல்ல. முடிவே செய்து விடுகிறார்.
அதன்படி கடல் வழியாக தடை பல கடந்து தன் மகளுடன் தமிழகம் வருகின்றார் அமர் ராமச்சந்திரன். அவர் எதிர்ப்பார்த்தது போல உறவினர்களிடம் தன் மகளை ஒப்படைக்க முடியவில்லை. செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறார். சாலையோரம் வாழத் தொடங்க ஆரம்பிக்கிறார். சிலர் இவருக்கு உதவி செய்ய முன் வருகின்றனர். அவர்களின் உதவியுடன் தன் மகளுக்கு அச்சமற்ற வாழ்க்கையும் , நல்ல எதிர் காலத்தையும் அமைத்துக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இருக்கும் அவருக்கு எதற்காக அஞ்சினாரோ அவருக்கு பேரிடியாக நிகழ்ந்தது அவருக்கு …இதயமே வெடித்துவிடும் அளவிற்கு நடந்தது அந்த அவலம். அது என்ன ? என்ற கேள்விக்கு விடை தருவது தான் மீதிக் கதை..
இந்தப் படம் போரினால் பெற்றோர்களை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் சிறுவர்களின் வலியை மிக அழுத்தமாக காட்சி வாயிலாக மனத்தை கலங்க வைக்கிறது.
தமிழ் ஈழம் மட்டுமல்ல உலகின் பல நாடுகளில் நடக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் வலி மிகுந்த வாழ்க்கை மற்றும் அவர்களின் வாழ்க்கையின் எதிரொலி .இறுதிக் காட்சியில் பார்வையாளர்களின் மனத்தை உறைய வைக்கின்றார். இந்தப் படத்தின் இயக்குநர்.
திரை நட்சத்திரங்கள் :- கதாநாயகன் :- அமர் ராமச்சந்திரன் . தன் உருவம் மற்றும் கண்கள் மூலம் போரினால் பாதித்த மக்களை பிரதிபலித்திருப்பதோடு அத்தகைய மக்கள் ஒவ்வொரு கணப் பொழுதும் எத்தகையதொரு பயங்கரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதையும் பார்வையாளர்கள் உணரும் வண்ணம் நடித்து அசத்தி இருக்கிறார்.
அமர் ராமச்சந்திரனின் மகளாக தமிழினி வேடத்தில் நேஹா அமர். இவர் அதிகம் பேசவில்லை. இருப்பினும் அச்சம் நிறைந்த கண்களும் , சோர்ந்து போன முகமும் பார்க்கின்ற பொழுது பாதிக்கப்பட்ட குழந்தைகளை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
அகதிகளும் சக மனிதர்கள் தான் என்ற மன நிலையான அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் பாலா சிங். நம்பிக்கையோடு தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்கு பெறும் ஆறுதல் தரும் கதாபாத்திரத்தில் இவர் நடித்து இருக்கிறார்
அகதிகளும் சக மனிதர்கள் தான் என்ற மன நிலைக் கொண்ட அவருக்கு ஆதரவு கரம் நீட்டும் அவருக்கு . உதவும் மனப் பான்மை அவருக்கு. யார் அந்த அவர் நம்ம பாலா சிங்குதான். தமிழகத்திற்கு வரும் இலங்கைத் தமிழருக்கு பெறும் ஆறுதல் தரும் கதாபாத்திரம் அவருக்கு. கொடுத்த வேடத்திற்கு உருக்கமாக நடித்து பார்வையாளர்களின் மனத்தில் இடம் பிடித்து விட்டார் சபாஷ் !
கடலில் தத்தளிக்கும் இலங்கைத் தமிழர்களை காப்பாற்றிய மீனவர்கள் அவர்களை அகதி முகாமுக்கு அனுப்பி வைக்காமல் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு அளித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஆட்டோ ஓட்டுநர்கள் , பெரிய மீசைக் கொண்ட மனிதர். உருவம் அச்சத்தைத் தந்தாலும் உள்ளம் குழந்தை தான். சட்டத்தில் இடம் இல்லை என்றாலும் மனத்தில் இடம் இருந்தால் போதும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. என்று நினைக்கும் பள்ளித் தலைமை ஆசிரியர்.
இப்படி சின்ன சின்ன கதா பாத்திரங்கள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- பிரசாந்த் பிரணவ் :-
வலி மிகுந்த ஈழ மக்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் முன் கொண்டு வந்து நிறுத்தக்கின்றார் தன்னுடைய வண்ண ஒளிப்பதிவால். குறிப்பாக படத்தின் இறுதிக் காட்சியில் சிறுமி கண்ணீருடன் , முகத்தில் பவுடர் போட்டுக் கொண்டு நடக்கும் காட்சிகள் இயல்பாக உள்ளன. ஒட்டு மொத்த படத்தில் தான் சொல்ல வந்ததை அந்த ஒரே காட்சியில் சொன்ன விதம் அருமை.
படத் தொகுப்பு :-டீ ஜோ பி.வர்க்கீஸ் :-
காட்சிகளை மெதுவாக நகர்த்துகின்றார். கதை மூலம் சொல்ல வரும் விஷயத்தையும் , அதில் உள்ள வலியையும் ஆழமாக பார்வையாளர்கள் மனத்தில் பதிய வைத்திருக்கிறார்.
இசை :- அவுசேப்பச்சன் :-
பின்னணி இசை கதைக்கு பலம். வசனம் பேசாத பேச முடியாத இடங்களில் எல்லாம் தன் இசையின் மூலம் பேசியிருக்கிறார்
எழுத்து & இயக்கம் :- அபிலாஷ் ஜி.தேவன் :-
தமிழ் ஈழத்தில் நடந்த இனப் படுகொலையால் அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் வலியையும் , அழுகுரல்களும் காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
படத்தின் இறுதிக் கட்சியின் மூலம் போரினால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலையை உரத்தக் குரலில் சொல்லியிருக்கிறார். இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்
தாய் நிலம் ” என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தினை ஆய்வு செய்த போது 55 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை இப் படம் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதே அவல நிலை 2008 இல் நடந்தது. இந்த நிகழ்வினையே படமாக்கி நம் கண்களை குளமாக்கி இருக்கின்றார் இப் படத்தின் இயக்குநர். எங்களின் பத்திரிகை குழு நடு நிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கி இருக்கின்றது. மீண்டும் சந்திப்போம் அதுவரை உங்களிடமிருந்து விடை பெறுவது உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்