சிக்மா என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
வெளிநாட்டில் உள்ள ஒரு இரகசிய லாக்கரில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூபாய் 500 கோடி மதிப்பிலான மாஃபியா பணத்துடன் தொடங்குகிறது ” சிக்மா ” என்னும் திரைப்படம்.
கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கும் குரு தனது தாயின் நினைவுகளுடன் தொடர்புடைய நூலகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலும் , பண நெருக்கடியில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்.

குறைகளும் நிறைகளும் :-
மாஃபியா பணம் , கேசினோ , ரகசிய பென் டிரைவ் , கடன் பிரச்சினைகள் என ஆக்ஷன், த்ரில்லருக்கான பல அம்சங்கள் கொண்டிருப்பினும் அவற்றை விறுவிறுப்பான திரை அனுபவமாக மாற்றுவதில் இந்தப் படம் தள்ளாடுகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு இதில் திருப்பம் ஏதுமில்லை. மனதைத் தொடும் ஆக்ஷன் இதில் இல்லை. காட்சி அமைப்புகளில் சொதப்பல். வழக்கம் போல் உருவாக்கப்பட்ட கதைக் களத்துடன் உருவாக்கப்பட்ட ஆக்ஷன் படங்களை இரசிக்கும் இரசிகர்களுக்கு ஒருவேளை இந்தப் படம் பிடிக்கலாம்.
படத்தின் இடைவேளைக் காட்சியில் இடம்பெறும் சண்டை ஓரளவு கவனத்தை ஈர்க்கிறது. குருவின் கடன் பிரச்சினைகள் , தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தைக் காப்பாற்றும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம் . இந்தக் காட்சிகளே இப் படத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.
படத்தின் முதல் பாதியில் எதிர்ப்பார்த்த வேகமில்லை. பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆக்ஷன் காட்சிகளை இரசிக்கும் இரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே !
படத்தின் இடைவேளைக் காட்சியில் இடம்பெறும் சண்டை ஓரளவு கவனத்தை ஈர்க்கிறது. குருவின் கடன் பிரச்சினைகள் , தாயின் நினைவாக இருக்கும் நூலகத்தைக் காப்பாற்றும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அதிகம் . இந்தக் காட்சிகளே இப் படத்தை ஆக்கிரமிப்பு செய்கின்றன.
திரை நட்சத்திரங்கள் :- குரு வேடத்தில் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். கடன்களை அடைக்க முடியாமல் தவிப்பதும் , தாயின் நினைவாக ஏற்படுத்திய நூலகத்தை காப்பாற்றுவதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கும் இந்தக் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார். இவருக்கு நடிக்க வாய்ப்புகள் இருந்தாலும் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார் இயக்குநர்.
ஃபிரியா , சம்பத்ராஜ் , ராஜூ சுந்தரம் , சாரங்கி , எழில் , வின்சி என பலர் நடித்திருந்தும் இவர்களின் கதாபாத்திரம் எடுபடவில்லை.
தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
இயக்குநர் :- ஜேசன் சஞ்சய். இவருக்கு இந்தப் படம் முதல் படம். திரைக்கதையில் புதுமையான அணுகு முறை , சீரான திரைக்கதை , காட்சியமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.
ஆக்ஷன் படத்திற்கு போதுமான வலுவான எழுத்து இல்லை. திரைக்கதை மற்றும் இயக்கத்தில் கவனம் செலுத்தி காட்சியமைப்பை கதையோடு சேர்த்து நகர்த்தி இருக்கலாம். பொருந்தாத கதையை கையில் எடுக்கக் கூடாது. புதுமை என்ற பெயரில் பார்வையாளர்களை குழப்பக் கூடாது.
ஒளிப்பதிவு :- இயக்குநர் எண்ணங்களை திரையில் கொண்டு வந்திருக்கிறார். சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.
சிக்மா என்னும் திரைபடத்தின் திரைவிமர்சனத்தில் ஆய்வு செய்த போது இரசிகர்கள் மனத்தையும் , பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கதையை தெரிவு செய்து முறையாக திரைக்கதையை அமைத்து அளவாக வசனங்களை எழுதி திறமையாக இயக்கினால் எந்தப் படமும் வெற்றிப் படமே !
எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று உள்ளதை உள்ளபடி கூறும் ஆற்றல் வாய்ந்தது. முறையாக தொழில் நுட்பங்களை தெரிந்து கொண்டு படம் எடுப்பது சாலச் சிறந்தது.உங்களிடம் இருந்து விடை பெறுவது கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்