” பாரடைஸ் “திரைவிமர்சனம் :-

Share the post

” பாரடைஸ் ” என்னும் திரைப்படத்தின் திரைவிமர்சனம் :-
பல வருஷங்களுக்கு முன்னாடி ” பாரடைஸ் ” பகுதிக்கு சவாரி மக்கள் குடிபெயர்கிறார்கள். நம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இந்தச் சவாரி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் இவர்கள் அடிமைகளாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஷிகாஞ்சி மாலிக் என்னும் வில்லனின் குடும்பம் சவாரி மக்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். எதிர்த்து நின்றால் கொடூரமாக கொல்றாங்க ! அந்த பயத்துலயே யாரும் ஷிகாஞ்சி மாலிக்கையும் அவர்களுடைய குடும்பத்தையும் எதிர்க்க துணிவு இல்லை. ஆனால் சம்மக்கா தலைமையில் சவாரி மக்கள் தங்களோட அடையாளத்துக்காக பல வருஷமாக போராடுகிறார்கள் .
ஒரு கட்டத்தில் சம்மக்காவோட புருஷன் இறந்து போகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்ற சம்மக்கா தன்னுடைய புருஷனோட பிணத்தினை அரசு அலுவலகத்தின் முன் கிடத்தி போராட்டம் செய்கின்றார். அப்பொழுது அங்கு வருகின்ற மாலிக் சம்மக்காவிற்கு மின்சார ஷாக் கொடுக்க அந்த அதிர்ச்சியில் சம்மக்காவுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கிறது. வயிற்றிலேயே பெண் சிசு இறந்து போக ஆண் சிசு மட்டும் தப்புகிறது.அவனுக்கு ஜடல் என பெயர் வைத்து பெண் சிசுவே இவனுக்கு உயிர் கொடுத்ததால் ஜடலுக்கு சடை வளர்த்து அழகு பார்க்கிறாங்க சம்மக்கா .ஆனால்… அம்மா செய்த தப்புக்காக ஜடல் அவனுடைய அம்மாவை வெறுக்கின்றான்

14 ஆண்டுகள் ஜடல் சிறைச்சாலையில் சிறைவாசம். ஏன் சிறைவாசம் செல்கிறான் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க தியேட்டருக்குச் சென்று படத்தினைப் பாருங்கள். கதை புரியும். தன் இன மக்களை அடையாளம் காட்ட மாவட்ட ஆட்சியர் மூலம் போராடும் போது மாலிக்கின் மகன் அந்த இன மக்களை கொடுமைப் படுத்துகிறான் தன் தந்தையைப் போல.இவனுடைய ( ஜடல் ) தாயை எல்லோர் முன்னாடி அவமானப் படுத்துகிறான் . ஜடலுக்கு தாயைப் பற்றிய உண்மையைத் தெரிந்தபிறகு தாயிக்காக என்ன செய்தான் ? சவாரி மக்களோட அடையாளத்துக்காக எப்படி போராடினான் ? ஜடலின் தாய் செய்த தப்பு என்ன ? மாலிக் ஏன் ஜடலை அவமானப் படுத்தினான் ? சுப்பு என்ற பெண்ணோட காதல் எப்படி எந்த சூழ்நிலையில் மலர்ந்தது ? சவாரி மக்களோட போராட்டத்தின் முடிவுதான் என்ன ? இப்படி கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டால் விடை தனி தனியாக பதில் அளிக்கும்.

கதைக் கரு :-
சவாரிமக்களின் அடிமை வாழ்க்கை தான் மையக் கரு . அதில் இருந்து மீண்டு வந்தார்களா என்பது தான் கதை .

கதையின் போக்கு :-
பாரடைஸ் பகுதியில் இருக்கின்ற சவாரி மக்களின் அடையாளத்திற்காக அவர்கள் போராடும் போராட்டமும் ,அந்த மக்களின் தலைவன் ஜடல் பண்ணுகின்ற ஆக்‌ஷனும் தான் இந்தக் கதையின் உயிரோட்டம். நாடு சுதந்திரம் அடைந்தாலும் சவாரி மக்கள் இன்னமும் அடிமைத்தனத்திலிருந்து மீளவில்லை. மீள ஜடல் செய்தது என்ன ?

அம்மா – பையன் பாசப் போராட்டம். இன்னொரு பக்கம் சவாரி மக்களின் அடிமை விலங்கை உடைத்தெறியும் போராட்டம் . இதற்கிடையில் ஆக்‌ஷன் காட்சியில் தனி தனியாக முத்திரை பதிக்கின்றது. காதலும் இடையில் நின்று கூத்தாடுது. உண்மையான அரசியலின் தாக்கம் இப் படத்தில் நினைவு படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்படுகிறது.

கதையும் காரணமும் :-
கதையை தேர்ந்தெடுத்த விதம் யதார்த்தமாக உள்ளது. அதனையே திரைக்கதையாக அமைக்கின்றபோது சற்று தடுமாறுகிறது. ஏன் இப்பொழுது வரும் படங்களில் திரைக்கதையில் அதிகம் கவனம் செலுத்துவது இல்லை.

கதையும் அதன் விரிப்பும் :-
வில்லன் ஷிகாஞ்சி மாலிக் கதாபாத்திரத்தின் அறிமுகமே அதிர வைக்கிறது. சவாரி மக்களின் 200 வருட அடிமைத்தனம் , இவற்றை விரிவு படுத்தியிருப்பது அருமை. சவாரி மக்கள் படும் கஷ்டங்கள் , ஜடல் பிறக்கின்ற வரைக்கும் எமோஷனலா கனெக்ட் ஆகுது. மாலிக் ஜடலை அவமானம் படுத்துவதும் . ஜடல் மாலிக் மேல் கோபப்படுவதும் ஓரளவுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது. அம்மா – பையன் எமோஷன் வேலை செய்கிறது.

படத்தின் நிறைவும் குறைவும் :-
படத்தில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள் ஓ.கே … ஓ.கே … அதுவே மிகைப்படுத்தியதால் முக சுழிப்பு… அம்மா – பையன் பாசப் பிணைப்பு … ஓ.கே… ஓ.கே… சாமி வந்த மாதிரி ஆடுற ஆக்‌ஷன் சீக்வென்ஸ் மிரட்டல்…. மிரட்டல்… அனிருத்தின் பின்னணி இசை சேர்ப்பு அருமை. படத்திற்கு பக்க பலம்.வில்லன் கதாபாத்திரம் ( மோகன் பாபு ) அழுத்தம் கொடுக்கிறது. படத்தின் முடிவு ஏனோ சுதப்புகிறது. நானி கதா பாத்திரம் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் . அதே சமயத்தில் மைனஸ் கூட இது ரொம்ப ரொம்ப ஹெவியான கதையாக தோன்றுகிறது. அதுக்கு நானி பொருந்தவில்லை எனத் தோன்றுகிறது. லாஜிக் பல இடங்களில் கை கொடுக்கலே ! எமோஷன்ஸ் பெருசா இல்லை. கற்பனையை நிஜ அரசியலோடு ஒப்பிடுவது அபத்தம்.
சங்கர் என்னும் கதாபாத்திரத்தில் கே.சி.ஆரை காட்டுகிறார்கள். சொல்ல வந்த சவாரி மக்களின் வாழ்வாதாரங்களை மறந்து கே.சி.ஆர் , என்.டி.ஆர் தான் அவர்களுக்கு வாழ்க்கை கொடுத்த மாதிரி கதையை திசை திருப்பி விடறாங்க

திரை நட்சத்திரங்கள் :- ஜடல் கதாபாத்திரத்தில் நானி.கொடுத்த கதா பாத்திரத்தை உணர்ந்து நடித்து படத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். எமோஷன் சீனில் மனத்தை தொடுகிறார் . ஆக்‌ஷன் சீனிஸ்லே வெறித்தனத்தைக் காட்டி அதிர வைக்கிறார். நானியோட கெரியர் பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ்னு இதனைச் சொல்லலாம். இந்தக் கதைக்கு சற்று பொருந்தவில்லை என்றே தோன்றுகிறது. கதையை தெரிவு செய்த உடனே கதாபாத்திரத்திறத்திற்கு உண்டான நடிகர் நடிகையரை தேர்ந்தெடுப்பது தனி சிறப்பு.

வில்லன் ஷிகாஞ்சி மாலிக் கேரக்டர்ல மோகன் பாபுவை இதுவரை பார்க்காத புது அவதாரம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம். மனுஷன் வில்லனா மிரட்டி இருக்கிறார்.

மாலிக் பையனாக நடித்திருப்பவர் ராகவ். இவரும் வில்லன் தான் மிரட்டியிருக்கிறார்.

சம்மக்கா கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார். இல்லை இல்லை வாழ்ந்திருக்கிறார் .

சுப்பு கதாபாத்திரத்தில் கயாடு லோஹர் சர்பிரைஸ் பண்றாங்க.

ஈஸ்வரி ராவ் கதாபாத்திரமும் நல்லா இருக்கு நல்லாவும் நடிச்சிருக்காங்க !

சம்பூர்ணேஷ் பாபுவுக்கும் நல்ல ரோல்.அவரும் சிறப்பா க நடிச்சு இருக்கிறார்.

சத்யராஜ் கதாபாத்திரம் கொஞ்ச நேரம் தான் . அவருடைய சீன் கலகலப்பு தான்.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :-
ஒளிப்பதிவு :- சி.ஹெச். சாய். இவருடைய ஒளிப்பதிவு மிக அருமை . கண்ணுக்கு குளிர்ச்சி , மனத்திற்கு மகிழ்ச்சி இவருடைய ஒளிப்பதிவு.

படத்தொகுப்பு :- நவீன் நூலி. இந்தப் படத்தில் இவருடைய படத் தொகுப்பில் குறைகள் அதிகம் இருப்பதாக தெரிகின்றன. கதையின் போக்குக்கு விட்டு விடாமல் படத்திற்கு தேவையானவை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை நீக்கி இருக்கலாம்.

இசை :- அனிருத் ரவிசந்தர் . இவரது இசை படத்திற்கு பக்க பலம். பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார் பாராட்டலாம். இவரது இசையில் உருவான பாடல்கள் அருமை.

இயக்கம் :- ஸ்ரீகாந்த் ஓடேலா நல்ல கதை தேர்ந்தெடுத்தவர் திரைக்கதையில் கோட்டைவிட்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதலும் முடிவும் சிறப்பு இடையில் சொதப்பல். லாஜிக் மீறல்கள் அதிகம். காதல் காட்சி மனத்தை தொடவில்லை. தேவையில்லாமல் அரசியலை திணித்திருப்பது செரிமானம் ஆகவில்லை .எமோஷன் பற்றாக் குறைதான் .

பாரடைஸ் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனத்தில் ஆய்வு செய்த போது கதையை தெரிவு செய்த உடனே சீரான திரைக்கதையை அமைத்து அளவான வசனங்களால் அந்த அந்தக் கதாபாத்திரங்களை பேச விட்டிருந்தால் இந்தப் படம் வேற லெவல். எங்களின் பத்திரிகை குழு நடுநிலையாக நின்று நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. மீண்டும் அடுத்த திரை விமர்சனத்தில் சந்திப்போம். அதுவரை உங்கள் கவிஞர் வேளச்சேரி அ.சந்திரசேகர் எம்.ஏ ; பி.எட் ,ராஜேஷ் ஓகே டேக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *