I am Game திரை விமர்சனம்!

Share the post

I am Game – என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
சூதாட்டம் எவ்வளவு கொடுமையானது என்பதனை இதிகாசத்தில் காணலாம். புரியவில்லையா ?
இராமாயணம், மகாபாரதம் இவ்விரண்டையும் இதிகாசம் என்போம். மகாபாரதத்தில் சகுனியும் தருமனும் சூதாடி சகுனியிடம் தோற்றது தருமனே ! அந்தச் சூதாட்டம் காலம் காலமாக வளர் பிறையாக வளர்ந்து எத்தனையோ வகையில் பல குடும்பங்களை நிர்மூலமாக்கியது இந்தச் சூதாட்டம்.

அந்த வகையில் கிரிக்கெட் சூதாட்டமும் ஒரு சூதாட்டமே !

கதைச்சுருக்கம் :- கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து கதை பின்னப்படுகிறது. ஆன் லைன் மூலம் சூதாட்டம் எத்தனையோ நபர்களை தற்கொலைக்கு தூண்டி அவர்கள் வாழ்க்கையை சீரழித்திருக்கிறது இந்த ஆன் லைன் சூதாட்டம். அதில் ஏமாற்றமும் , ஏமாற்றுவதும் இப்படிப்பட்ட துரோகங்களை படம் பிடித்துக் காட்டுவது தான் ஐ ஆம் கேம் என்னும் திரைப்படம்.

இந்தப் படம் ஆக்‌ஷன் ,அதிரடி காட்சிகளோடு கற்பனையைக் கலந்து படத்தினை கொடுத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்.

இத் திரைப்படத்தின் கதை நாயகன் ஒரு வித்தியாசமான நடிப்பின் மூலம் தன்னுடைய தனி திறனை வெளிப்படுத்தும் விதம் அபாரம்.

விறுவிறுப்பான கதை , சீரான திரைக்கதை , இன்றைய சூழ்நிலையை படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார் இயக்குநர் நவாஸ் ஹிதாயத் .

கிரிக்கெட் சூதாட்டம், ஆன்லைன் பெட்டிங் அதன் பின்னால் நடக்கும் தில்லுமுல்லு , துரோகம் தொடர் வண்டியை போல தொடர்கிறது.

இப் படத்தின் கதை நாயகன் குறுகிய காலத்தில் , குறுக்கு வழியில் தான் பெரிய ஆளாக வர வேண்டும் என் நினைக்கின்றார்.

மிகப் பெரிய பணக்காரரான துல்கர் சல்மான் தன் தந்தை முன்பு தன்னை நிலை நிறுத்த , பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழியில் நுழைகிறார். அதன் சூதாடத்தில் இறங்கும் இவருக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது.அந்த விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கும் துல்கர் சல்மான் அதன் பிறகு யாரும் சந்திக்காத வினோதமான சம்பவங்களை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறார்.

படத்தில் உணர்ச்சிகரமான சம்பவங்களை கற்பனையில் கலந்து மிக அழகாக கதையை கொண்டு போன விதம் ஒரு தனி அலாதி தான்.

திரை நட்சத்திரங்கள் :-
கதைநாயகன் துல்கர் சல்மான் டான் ஜான் என்னும் கதா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கின்றார்.
இவருடைய ஸ்டைல் , கெத் இரசிகர்களை கவரும் வண்ணம் தன் நடிப்பால் தனி முத்திரையைப் பதித்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *