ஒன்ஸ்மோர் திரை விமர்சனம்!

Share the post

ஒன்ஸ்மோர் என்னும் திரைப்படத்தில் மின்னும் திரைக் கலைஞர்கள் :-
ரகுவரனாக அர்ஜூன் தாஸ்
அஞ்சலியாக அதிதி சங்கர்
இந்திரா வாசுதேவன் சோனா ஒலிக்கல்
இப்ராஹிம்மாக டிராவிட் செல்வம்
சாராவாக அனுஷா பிரபு
கீகீயாக ஜகபர்
ஸ்ரீநாத்தாக மோனிஷ் எலமாரன்
வர்ணிகாவாக வர்ணிகா வரத்
பிலிப்பாக பிலிப்சன் தாமஸ்
முத்துவாக அருண்குமார் மணி
சௌந்தர்யாவாக சௌந்தர்யா மனோகரன்
திவாகராக கண்ணன் .டி
கெவின்னாக ரிச்சி ரிச்சர்ட்சன்
அனுவாக ரக்ஷ செரின்
மோஜ்வாக ஸ்ரீகாந்த்
நியாஸ்ஸாக நியாஸ் முஹமது
பாடகலிங்கமாக சித்ரா லட்சுமணன்
தெரபிஸ்ட் லாவண்யாவாக தேவதர்ஷினி சேத்தன்
ஃபாதர் எட்வினாக ஜென்சன் திவாகர்

ஒன்ஸ்மோர் என்னும் திரைப்படத்தின் திரை விமர்சனம் :-
காதல் என்பது புனிதமானது ; தூய்மையானது. இரண்டு உள்ளங்கள் ஒன்றுபடுவது காதல். மனம் இரண்டும் சேர்ந்து ஒரு மனமாக ஒருங்கிணைந்து திருமணபந்தத்தில் முடிவது.

இந்தப் படத்தில் ரகு என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் கடந்த கால காதலால் ஏற்பட்ட அனுபவங்களில் இருந்து வெளியேறுகிறார். புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பயணம் செய்கின்றார். பழைய காதலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. நான் சொல்வது உண்மையான காதலுக்கு மட்டும் பொருந்தும். இப் படத்தின் கதைநாயகன் தன்னுடைய காதலின் நினைவுகளை முற்றிலும் நீங்கி விட்டது.மீண்டும் நினைவுக்கு வாராது என நினைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத வகையில் கடந்த கால காதல் மீண்டும் இவர் வாழ்க்கையில் நுழைகிறது. தென்றலான இவரது வாழ்க்கை புயலாக மாறுகிறது. ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. காதலர்கள் உயிருக்கு உயிராய் காதலிக்கின்றனர். காதலிக்கு ஒரு சந்தேகம் . காதலனைப் பார்த்துக் கேட்கிறாள். என்னை நீ நினைச்சுகிட்டு இருப்பியா எனக் கேட்டாள். அவன் பலமாக சிரித்தான். அவளுக்கு படு கோபம். அவன் சமாதனம் செய்கிறான். உண்மையை சொல்லட்டுமா என்றான். என்ன என்பதை மௌன மொழியால் கேட்டாள். உன்னை நினைப்பதே இல்லை என்றான். இதைக் கேட்டவுடன் கதறினாள் ; பதிறானாள் ; கூப்பாடு போட்டாள். மீண்டும் சமாதனப்படுத்தினான். சமாதானம் ஆகவில்லை. அவன் சொல்ல ஆரம்பித்தான்.உன்னை மறந்தால் தானே நினைப்பதற்கு. இதைக் கேட்டு அசந்து போனாள் . உடனே அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். உண்மையான காதலுக்கு அவ்வளவு சக்தி உண்டு. சரி கதைக்கு வருவோம் .

காதல் என்றாலே மனதிற்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுப்பது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது .எல்லா காதலும் திருமணத்தில் முடிவது இல்லை. விட்டுக் கொடுப்பது சில நேரங்களில் . உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக சொல்வது.

கடந்த கால நினைவுகள் ஒருபுறம். நிகழ்காலத்தில் உருவான பந்தம் மறுபுறம். இதற்கிடையில் உணர்ச்சிப்பூர்வமான சிக்கலில் சிக்கித் தவிக்கும் ரகு.

திரை நட்சத்திரங்கள் :-
ரகு என்னும் கதாபாத்திரத்தினை ஏற்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் யதார்த்தமாக , இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தி
யிருக்கின்றார் இப் படத்தின் நாயகன் அர்ஜூன் தாஸ்.

தன்னம்பிக்கை கொண்ட இளைஞன் முதல் காதல் பிரிவால் கசந்து போன மனிதன் வரை தன் மதிநுட்பத்தினால் பல்வேறு மனநிலைகளை எடுத்துக் காட்டி தன் நடிப்பால் அசத்தி இருக்கின்றார். பக்கம் பக்கமாக வசனங்கள் பேசிய காலம் போன பிறகு ஒற்றை வரியில் வசனம் பேசிய காலமும் போன பிறகு இப்பொழுது ஒற்றைச் சொல்லில் வசனம் பேசி நடிக்கும் காலம் வந்து விட்டது. உடல்மொழியால் அசதி வசன மொழியால் குறைத்து பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் மனத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும் நாயகனை பாராட்டுவோம்.. அர்ஜூன் தாஸ்ஸை நாமும் பாராட்டுவோம்.

காதல், ஏக்கம் ,குழப்பம் , மனவலி என தன் இயல்பான நடிப்பால் தலை நிமிர்ந்து நிற்கிறார் அர்ஜூன் தாஸ்.

அதிதி ஷங்கர் :-
அஞ்சலியாக வரும் அதிதி ஷங்கர் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய இயல்பான நடிப்பால் அசதியிருக்கின்றார். கதாபாத்திரத்தின் உணர்வுகளை எளிய முறையில் வெளிப்படுத்தியுள்ளார். அர்ஜூன் தாஸ் – அதிதி ஷங்கர் இடையில் உண்டாகும் இரசாயன மாற்றங்கள் படத்திற்கு பக்க பலமாகும்.இவர்களுக்கு இடையே ஏற்படும் உரையாடல்கள் இயல்பாக அமைந்ததால் அவர்களின் உறவுகள் திரையில் நம்பிக்கையை ஊட்டுவனவாக இருப்பது வெகு சிறப்பு !

சினிமாவுக்கு ஒரு புதிய வரவு இந்திரா வாசுதேவன் வேடத்தில் சோனாஒலிக்கல். முக்கோண காதல் வழக்கமாக வரும் திரை ஃபார்மூலா. இந்தக் கதையிலும் முக்கோண காதல். முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள இவர் முதல் படத்திலேயே மக்களை தன் பால் கவர்ந்து இழுத்திருக்கிறார் சபாஷ் போடலாம் .

அர்ஜூன் தாஸ் – அதிதி ஷங்கருடன் இவர ் இடம் பெறும் காட்சிகள் கதையின் உணர்வுப் பூர்வமான மோதலை மேலும் வலிமைப் படுத்துகின்றன.

இசையமைப்பாளர் :-
உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் வித்தியாசம் உண்டு.
உடலால் ஏற்படுவது உணர்ச்சி. இரு உடல்களின் சங்கமம் அதனால் ஏற்படுவது உணர்ச்சி. இருமனங்களால் இணைவது உணர்வு.
உணர்வை வெளிப்படுத்துவது மனம். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது உடல். இது தான் இயற்கையின் நியதி. இதனை மாற்ற அந்த ஆண்டவனுக்கே உரிமையில்லை.

ஹேஷம் அப்துல் வஹாபின் இசை இப் படத்திற்கு உறுதுணையாக நின்று படத்தினை இசையால் நிமிர வைக்கிறது. பாடல்கள் இசையோடு உறவாடி பின்னி பிணைக்கப்பட்டிருப்பது மிக அருமை. பாடல்கள் கதையோடு பயணம் செய்கிறது. பாராட்டுவோம்.

பின்னணி இசை காதலுக்கும் அதனால் ஏற்பட்ட பிரிவுக்கும் இடையே வித்தியாசம் தெரிவதை உணர்ந்து பின்னணி இசைக்கோர்ப்புக்கு ஒரு சலாம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *