
பான்சு, நோட்வின் கேமிங் மற்றும் ரஸ்க் மீடியா இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் ‘மேத் பீ‘ (Math Bee) கணிதப் போட்டி
பள்ளிக் குழந்தைகளுக்கான இந்த புதிய போட்டி, கணிதத்தை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்ச்சியாக மாற்றுவதுடன், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் இந்தியாவின் அடுத்த தலைமுறை புத்திசாலிகளை உருவாக்குகிறது.
சென்னை, இந்தியா (ஜூலை 27, 2026): உலகளாவிய கணிதக் கற்றல் தளமான பான்சு (Bhanzu), 7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக இந்தியாவின் முதல் மாபெரும் கணித ரியாலிட்டி போட்டியான ‘மேத் பீ’ (Math Bee)-ஐத் தொடங்க நோட்வின் கேமிங் மற்றும் ரஸ்க் மீடியா ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது. மாணவர்கள் கணிதத்தைக் கற்கும் முறையை மாற்றியமைக்கும் வகையில், இந்தப் போட்டி தேசிய அளவில் நடத்தப்படும் மகிழ்ச்சியும், உற்சாகமும் தரும் ஒரு நிகழ்வாக நடத்தப்படுகிறது. இதில் போட்டியுடன் கதைசொல்லலும், டிஜிட்டல் முறையிலான பங்கேற்பும் இணைந்திருப்பது இதனை சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.
இதுவொரு சாதாரண கணிதப் போட்டி அல்ல; பிரபல ஆளுமைகள் மற்றும் நடுவர்கள் முன்னிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக அல்லது OTT தொடர் போல பிரம்மாண்டமாக இப்போட்டி புதுமையான முறையில் நடத்தப்படும். கணிதத்தின் மீதுள்ள பயத்தைப் போக்கி, குழந்தைகளை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளவும் சிந்திக்க அவர்களை உற்சாகப்படுத்துவதுமே இப்போட்டி நடத்தப்படுவதன் நோக்கமாகும்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளக் கட்டணம் எதுவும் கிடையாது. இந்தியாவில் 7 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். பான்சுவின் ‘MathUp’ செயலி (App) மூலம் ஆன்லைனில் தகுதித் தேர்வுகள் நடைபெறும். இதில் வெற்றிபெறும் மாணவர்கள் சிறப்புப் பயிற்சிக்குப் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்படும் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். வெற்றியாளர்களுக்கு அற்புதமான பரிசுகள் காத்திருக்கின்றன.
இதுகுறித்து உலகின் வேகமான மனிதக் கணக்கீட்டாளரும், பான்சு நிறுவனருமான திரு. நீலகண்ட பானு பிரகாஷ் கூறுகையில், ” கணிதம் என்றாலே அதை ஆர்வத்துடன் ரசித்து செய்வதற்குப் பதிலாக, பல தலைமுறைகளாக பயத்துடனேயே அதை அணுகுகின்றனர். அந்த கண்ணோட்டத்தை மாற்றி, கணிதத்தை ஒரு விரும்பும் பிரபலமான கலாச்சார செயல்பாடுகளுள் ஒன்றாக மாற்றவே ‘மேத் பீ’ நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. கணிதம் என்பது, கல்வி சார்ந்த ஒரு பாடம் என்று மட்டும் பார்க்காமல், சிக்கல்களைத் தீர்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கூறினார்.
“கணிதம் என்பது, சரியான பதிலைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல. அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். வடிவத்தைக் கண்டறிவது, எதிர்பாராத ஒன்றை முயற்சிப்பது மற்றும் ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கான புத்திசாலித்தனமான வழியைக் கண்டுபிடிப்பது தொடர்பானது. ஒரு சவாலைப் பார்த்து, ‘இதை எப்படிச் சரிசெய்வது?’ என்று கேட்கும்
அந்த உள்ளுணர்வை NODWIN-ல் நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளோம். இஸ்போர்ட்ஸ் (esports) மற்றும் நேரலை நிகழ்வுகள் மூலம், வெளிப்படையான பதில் மட்டும் போதாத போது, மக்கள் ஒன்றுகூடி உடனடியாக முடிவெடுத்து முன்னேற வழிகாண்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ‘மேத் பீ’ அந்த சிந்தனையை ஒரு நேரலை மேடைக்குக் கொண்டுவருகிறது. அங்கு இந்தியா முழுவதிலுமிருந்து வரும் மாணவர்கள் போட்டியிடலாம், நிகழ்நேரத்தில் சிக்கல்களைத் தீர்க்கலாம் மற்றும் தங்கள் மூளை எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது என்பதைக் காட்டலாம். அந்த மேடையில் எவரேனும் ஒரு எதிர்கால கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் அல்லது சிக்கல் தீர்ப்பவர் இருக்கக்கூடும்; ஆனால், அவர்கள் தங்களை இயக்கும் அந்தச் சிக்கலையோ அல்லது தளத்தையோ இதுவரை எதிர்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றுநோட்வின் கேமிங் – ன் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அக்ஷத் ரதி கூறினார்.
இந்தப் போட்டிக்கான ஆன்லைன் தகுதித் தேர்வுகள் ஜூலை 26, ஆகஸ்ட் 2, ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. சிறந்த 500 மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, அதில் இருந்து இறுதிச் சுற்றுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் (iOS) தளங்களில் உள்ள ‘MathUp’ செயலி மூலம் இப்போட்டிக்குப் பதிவு செய்யலாம். பதிவுகள் இப்போது நடைபெற்று வருகின்றன.
பான்சு குறித்து:
பான்சு என்பது உலக சாதனையாளர் திரு. நீலகண்ட பானு பிரகாஷ் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு முன்னணி கணித கற்றல் தளமாகும். உலகெங்கிலும் மழலையர் பள்ளி முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு எளிமையான முறையில் கணிதத்தை புரிதலுடனும், ஆர்வத்துடனும் கற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். “ஜெனரேட்டிவ் ஏஐ (GenAI) மூலம் இயங்கும் தனித்துவமான பாடத்திட்டத்துடன், புரிந்துகொள்ளுதலையும் நினைவில் வைத்துக் கொள்ளும் திறனையும் அதிகப்படுத்த கற்றல் அனுபவங்களை பான்சு வழங்குகிறது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட பான்சு, உலகிற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு கல்வி மரபுவழியை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.”